[cmsmasters_row data_width=”boxed” data_padding_left=”3″ data_padding_right=”3″ data_top_style=”default” data_bot_style=”default” data_color=”default” data_bg_position=”top center” data_bg_repeat=”no-repeat” data_bg_attachment=”scroll” data_bg_size=”cover” data_bg_parallax_ratio=”0.5″ data_padding_top=”0″ data_padding_bottom=”50″][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]
நாயைக் கண்டா கல்லைக்காணோம், கல்லைக் கண்டால் நாயைக்காணோம், இரண்டையும் கண்டா எறிய மனதைக் காணோம்….என்பது ஒரு பழமொழி. சரி சகோதரனே பொயின்டுக்கு வாங்க என்று சொல்லுகிறீர்களா? வாரேன் வாரேன்!!!!
.
தெருவின் கடைசி வீட்டில் உள்ள ஒரு நாய்.. வருகிறவரையும் போகிறவர்களையும் வொவ்!!!.. வோவ்!!!.. என்று குரைத்துக் கொண்டெ இருக்கும்… சொல்லவா வேண்டும் ரவியின் பயத்தை.. குறிப்பாக ஆலயத்திற்கு அந்த வழியாகத்தான் செல்ல வேண்டும்… ஒவ்வொரு வாரமும் இதே பயம்…பயம் சரிரத்தின் முடியெல்லாம் சிலிர்த்து ஐயோ ஏன் கேட்கிறீங்க இந்த கொடூரத்தை..
.
அன்று ஞாயிற்று கிழமை ஆலயத்திற்கு வழக்கத்திற்கு மாறாக தன் தகப்பனாரோடு வந்து கொண்டிருந்தான்.. வழக்கமான இடத்திற்கு அருகாமையில் வரும்பொழுது..நாயின் ஞாபகம் வந்தது. ஆனால் இன்று ரவிக்கு ஒரு பயங்கர தைரியத்தை உணர்ந்தான்… பயம் ஒன்றும் இல்லை முடி சிலிர்க்கவும் மில்லை…நாயும் குரைத்தது அடச் சீ நாயே என்று சொல்லி விட்டு கடந்து போனான்.
இவ்வளவு நாளும் இல்லாத இந்த தைரியம் எப்படி வந்தது என்று ர
வி; யோசிக்க ஆரம்பித்தான்…ஆமா அப்பா கூடவே இருந்ததுதான் அந்த எல்லையில்லாத தைரியம்…அண்ட சராசரங்களையும் படைத்த ஆண்டவர் நம் பட்சத்தில் இருப்பாரேயானால் நமக்கு எவ்வளவு பெரிய தைரியம்..
தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? ரோ 8:31
கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்? சங் 118:6.
கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை. சங் 16: 8.
.
அனுதினமும் ஏதோ ஒரு பயப்பிடியில் சிக்கி தவிக்கிறிர்களா?;
காற்று வீசலாம், கடல் பொங்கலாம் ஆத்ம நண்பன் இயேசு உங்களோடு இருப்பாரேயானால். எதுவும் உங்களை சேதப்படுத்தாது. உலகத்திலிருப்பவரைக் காட்டிலும் உங்களிலிருப்பவர் பெரியவர். அவர் உங்களோடு இருக்கும் பொழுது தைரியமும் பெலனும் அதோடு கூட நம்பிக்கையும் வருகிறது. அவராலே நாம் ஒரு சேனைக்குள் பாயலாம்.. மதிலையும் தாண்டலாம்.
நீங்களே உங்கள் உள்ளத்தில் இந்த கேள்வியை கேட்டுபாருங்கள்.
தேவன் என் பட்சத்தில் இருக்கிறாரா?
தேவனை அண்டிக்கொள்வதே நமக்கு நலம்….
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்.
[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]