CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

சபை கூடிவருதல்

சபை கூடிவருதல்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

சபை என்ற வார்த்தையின் மூலவார்த்தை இக்லீசியா எனப்படும் இதன் அர்த்தம் அழைக்கப்பட்டவர்கள். புதிய ஏற்பாட்டிலே சபை என்கிற வார்த்தையை அதிகமாக நாம் பார்க்க முடியும். சபை என்றால் ஒரு கூட்டம் ஜனங்கள் சேர்ந்திருப்பது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் கழுவப்பட்ட ஒவ்வொருவரும் தேவனுடைய ஆலயமாக இருக்கிறோம். நமக்குள் பரிசுத்த ஆவியானவர் தங்கியிருக்கிறார் என்பதை மறந்து விடக் கூடாது. கீழ்காணும் வசனங்கள் ஒவ் வொன்றையும் வேதாகமத்தை திறந்து படியுங்கள்.1கொரி-3:16 நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? 1கொரி-3:17,1கொரி-6:19,2கொரி-6:16

.
தேவன் தங்குகிற ஆலயமாகிய நீங்கள் ஒரு கூட்டமாக ஒருமித்து தேவனை புகழுகிற, ஆராதிக்கிற ஒரு இடம் தான் சபை. அந்த சபையை கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தன் சொந்த ரத்தத்தினால் சம்பாதித்து அப் 20:28 அந்த சபைக்கு அவர் தலையாக இருக்கிறார். எபே 5:23, 1:23,கொலே1:18, கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்கு முன் நிறுத்திக் கொள்வதற்கும் தம்மைத் தாமே அதற்காக ஒப்புக் கொடுத்தார். எபே-5:27 இப்படிப்பட்ட சபையை கர்த்தர் போஷித்து வருகிறார் எபே-5:29

.
இப்படிப்பட்ட சபையை கண்காணிப்பதற்காக தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார் 1கொரி-12:28. இந்த சபை எடுத்துக் கொள்ளப்போகிற மணவாட்டி சபையாக இருக்கிறது. ஆகவே கர்த்தராகிய இயேசு தலையாயிருக்கிற ஒரு சபையின் மேய்ப்பருக்கு கீழ்படிய வேண்டும்.
வேதாகமத்திலிருந்து…
.
எபிரேயர்10:19-25 நீங்கள் பல முறை படித்துப் பாருங்கள். அப்பொழுது அதன் அர்த்தத்தை விளங்கிக் கொள்ளமுடியும். காலம் சமீபமாக இருக்கிறபடியினாலே சபை கூடுதலை விட்டு விடாதீர்கள்.
1. உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம். வ22
2. நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம் வ23
3. அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; வ24
4. சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல் வ25
5. ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; வ25
நம்மை சபையில் சேர்த்தது கர்த்தர் என்பதை நம்முடைய ஆழ்மனதில் பதித்து வைத்துக் கொள்ள வேண்டும். “இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையில் சேர்த்துக் கொண்டு வந்தார்” அப்-2:47
சபைக்கூடிவருதலின் முக்கியத்துவம்

.

(1) தேவன் பேரில் உள்ள நம்முடைய உண்மையான அன்பை வெளிக்காட்ட
சபையிலே விசுவாசிகளோடு சேர்ந்து கர்த்தர் நமக்கு செய்த நன்மைகளை ஒருவருக்கொருவர் அறிக்கை செய்து கர்த்தர் நாமத்தை ஒருமித்து உயர்த்துவதற்கும், அவருடைய நாமத்தை மகிமை படுத்துவதற்கும் ஏற்றதாக இருக்கும் (மத் 10:32-33). அவர் நாமத்தை சபைக்கு அறிவிக்கவும் துதியை செலுத்துவதற்கும். சங்22:22. பரிசுத்த ஸ்தலத்திலே உங்கள் கரங்களை உயர்த்தும்போது கர்த்தர் மகிமைப்படுவார். சங் 134:2

.
(2) நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை பெலப்படுவதற்கு
சபையிலே மற்றவர்களுடைய விசுவாச வாழ்க்கையும் அங்கே பகிர்கிற கர்த்தரின் வார்த்தையும் நம்முடைய விசுவாசத்தை வளரச்செய்து நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை பெலப்படும். ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும். ரோம10:17

.
(3) சபையில் கர்த்தரின் மகிமையான பிரசன்னம் நம்மை மூடும்.
அவருடைய வாக்குதத்தத்தின்படி விஷேசித்த அவருடைய பிரசன்னம் சபையின் மத்தியிலே கடந்து வரும். ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார். மத் 18:20

.
(4) மற்ற தேவ பிள்ளைகளோடு ஐக்கியம் வளருகிறது.
இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? சங் 133:1 ஒரே அப்பாவின் பிள்ளைகளாகிய நாம் கூடும்பொழுது எத்தனை கொண்டாட்டம்.
அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். 1யோ1:7

.
(5) சபைக்கு செல்வது கர்த்தருக்கு கீழ்படிதலை காட்டுகிறது.
சபை கூடுதலை விட்டுவிடக்கூடாது என்று கர்த்தர் சொல்லுகிறார்(எபி 10:25);. அதை நாம் நிறை வேற்றும் பொழுது கர்த்தருக்கு கீழ்படிதலை காட்டுகிறது.

.
(6) சபைக்கு செல்வது ஆவிக்குரிய தலைவர்களை மகிழச்செய்யும்
உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே. எபி 13:17
அன்றியும், சகோதரரே, உங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு, கர்த்தருக்குள் உங்களை விசாரணை செய்கிறவர்களாயிருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து,1 தெச 5:12. இவ்வாறாக சபைக்கு செல்வதன் மூலம் கர்த்தருடைய பிள்ளைகளை மகிழச்செய்கிறது.

.
(7) சபையிலே ஜெபிக்கிற ஜெபம் வல்லமையுள்ளது
அல்லாமலும், உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். மத் 18:19
உங்களில் ஐந்துபேர் நூறுபேரைத் துரத்துவார்கள்; உங்களில் நூறுபேர் பதினாயிரம்பேரைத் துரத்துவார்கள்; உங்கள் சத்துருக்கள் உங்களுக்கு முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்.லேவி 26:8. சபையிலே நீங்கள் ஒருமனப்பட்டு ஜெபிக்கிற காரியத்திற்கு கட்டாயம் பதில் உண்டு.
மேலும் சபைக்கு செல்வது கர்த்தருடைய நாளை கனம் பண்ணுகிறது. “நாலாவது கற்பனையான ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக; யாத் 20:8

.
கடைசியாக…
எனக்கு அருமையானவர்களே! இந்த கடைசி காலத்திலே சத்தியத்தை நாம் சரியாக தெரிந்து கொள்ளும் பொழுது சத்தியம் உங்களை விடுதலையாக்கும். ஒரு நாள் சபையில் அமர்ந்திருக்கும் பொழுது அனேக ஜனங்களுக்கு அடிப்படை காரியங்கள் தெளிவாக தெரியவில்லை என்ற ஒரு பெரிய பாரத்தை கர்த்தர் உள்ளத்திலே போட்டார். எப்படி ஜனங்களிடத்தில் இதை கொண்டு செல்ல முடியும் என்று யோசித்த பொழுது, எழுத்து வடிவத்தில் தான் சாத்தியம் என்பதையும் தேவன் நினைப்பூட்டினார். ஆகவே இந்த காரியங்கள் எழுதப்பட்டது.
இரட்சிக்கப்பட்ட பின்பு நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேனா!! என்ற சந்தேகம் எழும்பவே கூடாது.. அது போல அபிஷேகம்பண்ணப்பட்ட பின்பு குழப்பங்கள் இருக்கவேகூடாது. மேலும் ஒவ்வொருவரும் ஞானஸ்நானம் எடுக்க வேன்டும். கர்த்தருடைய பந்தியில் பங்கு கொள்ள வேண்டும். அப்படியே சபை கூடுதலை விட்டுவிடாமல் இன்னும் பால் குடிக்கும் குழந்தையை போல் இல்லாமல், பெலப்பட்டு. ஒருமித்து சேர்ந்து கர்த்தர் நாமத்தை மகிமைப்டுத்துவோம். கர்த்தர் தாமே ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக!  ஆமென்!

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]