CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

ஜெபமும் தேவனுடைய வார்த்தையும்

ஜெபமும் தேவனுடைய வார்த்தையும்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

கீழ்ப்படிதலின் ஜெபம் தாழ்மையான, நொருங்குண்ட ஆவியினால் தேவனைப் பற்றிக்கொள்ளுகிறது. தன் ஆத்துமா விரும்புவதை தேவனிடம் கேட்கிறது! கெஞ்சுகிறது! தேவன் சோதோமை விட்டுவிடுவார் என்று ஆபிரகாமுக்கு நிச்சயமான வாக்குறுதி இல்லை. இஸ்ரவேலை தேவன் விட்டு விடுவார் என்று மோசேக்கு நிச்சயமான வாக்குறுதி இல்லை. மாறாக, அவருடைய கோபாக்கினையின் பிரகடனமும், அழிப்பதற்கான அவருடைய நோக்கமுமிருந்தது. ஆனால் பக்தியுள்ள அந்தத் தலைவன் இஸ்ரவேலருக்காக இடைவிடாத ஜெபத்துடனும் கண்ணீருடனும் பரிந்துரை ஜெபம் பண்ணியபோது தேவனிடமிருந்து அவனுடைய விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்டார். மன்னனுடைய கனவின் அர்த்தத்தை தேவன் வெளிப்படுத்துவார் என்று தானியேலுக்கு நிச்சயமான வாக்குறுதியில்லை. ஆனால் குறிப்பாக அவர் ஜெபித்தார்; தேவன் நிச்சயமாகப் பதிலளித்தார்.

ஜெபத்தின் செயல்முறை, செயல்பாடு ஆகியவற்றின் மூலமாக தேவனுடைய வார்த்தை பலனுள்ளதாகவும் பயனுள்ளதுமாக ஆக்கப்படுகின்றது. தேவனுடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாகி, “…..நீ போய் ஆகாபுக்கு உன்னைக் காண்பி; நான் தேசத்தின் மேல் மழையைக் கட்டளையிடுவேன்” என்றார். (1 இரா 18:1) எலியா ஆகாபுக்குத் தன்னைக் காண்பித்தான்; ஆனால் அவனுடைய ஜெபத்தை தேவனிடம் தீவிரமாக ஏழுமுறை ஏறெடுக்கும்வரை அவனுடைய ஜெபத்துக்கு பதில் வரவில்லை.

“மக்களிடமிருந்தும், புற இனமக்களிடமிருந்தும் பவுல் விடுவிக்கப்படுவார்.” என்று கிறிஸ்துவிடமிருந்து பவுலுக்கு நிச்சயமான வாக்குறுதி இருந்தது. ஆனால் பவுல் இதே காரியத்தைக் குறித்து ரோமாபுரி மக்கள் செய்வதையெல்லாம் கவனித்துக் கொண்டேயிருந்தார்.

“யூதேயாவிலிருக்கிற அவிசுவாசிகளுக்கு நான் தப்புவிக்கும்படிக்கும், நான் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குச் செய்யப்போகிற தர்மசகாயம் அவர்களால் அங்கிகரிக்கப்படும் படிக்கும்”

நீங்கள் தேவனை நோக்கிச் செய்யும் ஜெபங்களில் நான் போராடுவதுபோல நீங்களும் என்னோடுகூடப் போராடவேண்டுமென்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிமித்தமும், ஆவியானவருடைய அன்பினிமித்தமும், உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்” (ரோம 15:30-31)

தேவனுடைய வார்த்தை ஜெபத்தில் பெரும் உதவியாயிருக்கிறது. அது நம்முடைய இருதயங்களில் நின்று எழுதப்படுமென்றால், பூரணமடைந்த, பொங்கிவருகிற ஜெபத்தி்ன் ஓட்டம் உருவாக்கப்படும். பூமியில் இருக்கிற நிலக்கரி, புயலடிக்கிற பனி இரவுகளில் நமக்கு வெப்பத்தைத் தருவதுபோல ஜீவனையும் அனலையும் ஜெபம் பெற்றுக்கொள்வதற்கு இருதயத்தில் சேர்த்து வைக்கப்படுகிற வாக்குறுதிகள் பயன்படுகின்றன. ஜெபம் போஷிக்கப்பட்டு பெலனளிக்கப்படுகிற ஆகாரமாக தேவனுடைய வார்த்தை இருக்கிறது. மனிதரைப்போல ஜெபமும் ஆகாரத்தினால் மட்டும் வாழமுடியாது. “….கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.” (உபாகமம் 8:3)

ஜெபத்தின் முக்கியமான வல்லமைகள் தேவனுடைய வார்த்தையால் கொடுக்கப்படவில்லையென்றால் ஜெபம் எவ்வளவு அவசரமானதும் உண்மையாயுமிருந்தாலும் நடைமுறையில் அது உறுதியற்றதும், வெறுமையுமானதாயிருக்கும். ஜெபத்தின் வல்லமையற்ற நிலைக்குக் காரணம், தேவனுடைய வார்த்தை தொடர்ந்து கொடுக்கப்படாமலிருப்பதுதான். நன்றாக ஜெபிக்கக் கற்றுக்கொள்வதற்கு ஒருவன் தேவனுடைய வார்த்தையை முதலில் கற்க வேண்டும். பின்பு அதைத்தன் நினைவில் சிந்தனையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

தேவனுடைய வேதாகமத்தை காணும்போது ஜெபத்துக்கு மேலான கடமை ஒன்றுமில்லையென்பதைக் காணலாம். ஜெபத்தைவிட மேன்மையான, தேவனால் சொந்தம் பாராட்டப்படுகிற பழக்கம் வேறொன்னுமில்லை. ஜெபத்தோடு இணைக்கப்பட்டிருக்கிற வாக்குறுதிகளைத் தவிர வேறெந்த வாக்குறுதியும் சுடரொளி நிரம்பியிருப்பதாக, தெளிவானதாக இல்லை.

 “……எவைகளைக் கேட்பீர்களோ…” (மத்தேயு 21:22) அவைகள் ஜெபத்தில் வரும். ஏனெனில்

“எவைகளைக் கேட்பீர்களோ…..” அவைகள் வாக்குறுதி தரப்பட்டிருக்கின்றன. ஜெபத்துக்கு பதில் தரப்படுவதற்கு உச்ச அளவு இல்லை. வாக்குறுதியிலிருந்து விலகியிருப்பதும் இல்லை.

“கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்…” (மத்தேயு 7:8) நம்முடைய ஆண்டவரின் வார்த்தை இவை யாவற்றையும் உள்ளடக்கியிருக்கின்றது. “என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.” (யோவான் 14:14)

ஜெபத்தைப்பற்றியும், ஜெபத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய காரியங்களைப்பற்றியும், ஜெபத்துக்கு பதிலாகக் கொடுக்கப்படுகிற உறுதியான வாக்குறுதி பற்றியும் தேவனுடைய வார்த்தை கூறுகிற ஒருங்கிணைந்த விரிவான வசனங்களைக் காண்போம்.

“இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்” (1 தெசலோனிக்கேயர் 5:17) “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்” (கொலோசெயர் 4:2), “ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்” (ரோமர் 12:12) “……எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.” (பிலிப்பியர் 4:6) “சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும்……” (1 தீமோத்தேயு 2:8)

நமக்கு நிச்சயமான அடிப்படையில் நம்பிக்கை தருவதற்கும், ஜெபிப்பதற்கு நம்மை விரைவுபடுத்தவும் ஊக்கப்படுத்தவும் இவைகள் எவ்வளவு தெளிவான வலுவான அறிவிப்புகள்! நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற தெய்வீக வெளிப்பாட்டின்படி ஜெபத்தின் பரப்பெல்லை எவ்வளவு விசாலமாயிருக்கிறது! நம்முடைய அனைத்துத் தேவைகளோடும் நம்முடைய அனைத்துப் பாரங்களோடும் ஜெபத்தில் தேவனை நாம் தேடுவதற்கு இந்த வேதாகமப் பகுதிகள் நம்மை எவ்வளவாகத் தூண்டுகின்றன!

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]