CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

ஜெபமும் நம்பிக்கையும்

ஜெபமும் நம்பிக்கையும்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

இந்த மனிதர்களுக்கு என்னதான் பிரச்சினை? அவர்கள் ஜெபத்தின் மூலமாக தங்களது விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளத் தவறிவிட்டார்கள். அதன் விளைவாக அவர்களது நம்பிக்கை முற்றிலுமாக தோல்வியடைந்தது. தேவனையோ, கிறிஸ்துவையோ அல்லது அவரது ஊழியத்தின் நம்பகத் தன்மையையோ அவர்கள் நம்பவில்லை. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இன்றும் இவ்வாறாகத்தான் பல சமயங்களில் நடக்கிறது. அதுதான் தேவனுடைய திருச்சபையில் பெரும் ஆபத்துக்களையும் உண்டாக்குகிறது. நம்பிக்கையில்லாததால் அல்லது விசுவாசம் குறைவுபடும் போது தோல்வி ஏற்படுகிறது. இதற்கு காரணம் ஜெபக்குறைவுதான். இதே காரணத்தினால்தான் எழுப்புதல் முயற்சிகளில் தோல்வி ஏற்படுகிறது என அறியலாம். விசுவாசம் ஜெபத்தினால் போஷிக்கப்பட்டு வல்லமையாக்கப்படவில்லை. உன் உள் அறையை அலட்சியம் செய்வதுதான் அதிகமான ஆவிக்குரிய தோல்விகளுக்கு காரணமாகிறது. பிசாசுகளை துரத்துவதற்கு முயன்றபோது ஏற்பட்டதைப்போல, பிசாசோடு நம்முடைய தனிப்பட்ட போராட்டங்களின் போதும் நிகழ்கிறது. நம்முடைய முழங்கால்களை  ஊன்றி தேவனோடு தனிப்பட்ட தொடர்வு வைத்துக் கொள்ளும்போதுதான், நம்முடைய தனிப்பட்ட போராட்டங்களிலும் அல்லது பாவிகளை மனந்திரும்ப வைக்கும் முயற்சியிலும் ஆண்டவர் நம்மோடு இருப்பார் என்ற நிச்சயத்தைப் பெற்றுக்கொள்ளுகிறோம்.

எல்லா இடங்களிலும் மக்கள் நம் ஆண்டவராகிய இயேசுவை அணுகியபோது அவர் முதன்மையாக தேவன் பேரிலும், அவரது ஊழியத்தின் தெய்வத்தன்மை மீதும் நம்பிக்கை வைத்தார். அவர் நம்பிக்கை என்றால் என்ன என்று எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. மேலும் அதைப்பற்றி எந்த இறையியல் வியாக்கியானத்தையோ அல்லது விளக்கத்தையோ கொடுக்கவில்லை. ஏனெனில் விசுவாசத்தால் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இருந்து விசுவாசம் என்றால் என்ன என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள் என்று அவருக்குத் தெரியும். மேலும் அதன் எளிதான செயல்பாட்டினால் அவருடைய பிரசன்னத்தால் நம்பிக்கை தானாகவே செழித்து வளருகிறது. அந்த விசுவாசம் அவர் செயலின், அவர் வல்லமையின், அவர் பிரசன்னத்தின் விளைவாகும். இவைகள் அவற்றின் செயல்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் உகந்ததான சூழ்நிலையை அமைத்துத் தந்தது. வார்த்தைகளினால் விவரிப்பதற்கு நம்பிக்கை எளிதானது. நம்பிக்கையின் எளிய தன்மை பலரைத் தடுமாற வைக்கிறது. திகைக்கச் செய்கிறது. அவர்கள் பெரிய காரியங்களை  எதிர்பார்க்கின்றனர். ஆனால் எல்லா சமயங்களிலும் “இந்த வார்த்தை உனக்கு சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது…” (ரோமர் 10:18)

தன் மகள் மரித்துவிட்டாள் என்ற துக்ககரமான செய்தி யவீருக்குக் கிடைத்தவுடன், நம் ஆண்டவர் குறுக்கிட்டு “…பயப்படாதே…” என்றார்., அவர் அமைதலாக “விசுவாசமுள்ளவனாயிரு…” என்று கூறினார். (மாற்கு 5:36) அவருக்கு முன்பாக நடுங்கி நின்றுகொண்டிருந்த பெரும்பாடுள்ள ஸ்திரீயைப் பார்த்து, “…மகளே. உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடே போய், உன் வேதனை நீங்கி சுகமாயிரு என்றார். (மாற்கு 5:34) அவரைப் பின்தொடர்ந்து வீட்டிற்குள் நெருக்கி வந்த இரண்டு குருடர்களைப் பார்த்து “…உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார்.” “உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது…” (மத்தேயு 9:29-30)

இயேசு போதித்துக்கொண்டிருந்த இடத்தில், மேற்கூரையைப் பிரித்து திமிர்வாதக்காரனை அவனுடைய நான்கு நண்பர்கள் அவர் முன்பாகக் கொண்டு வந்து கிடத்தினார்கள். அதைப்பற்றி வேதாகமத்தில் இவ்வாறாகக் காண்கிறோம் “இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.”          (மாற்கு 2:5)

தன் வீட்டுக்குள் இயேசு பிரவேசிக்க தான் பாத்திரன் அல்ல, சுகமாகும்படி ஒருவார்த்தை மாத்திரம் சொல்லவேண்டும் என்ற விண்ணப்பத்தோடு, கொடிய வியாதியாயிருந்த தன் வேலைக்காரனுக்காக தன்னிடம் வந்த நூற்றுக்கு அதிபதியை நோக்கி. நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நாழிகையிலே அவன் வேலைக்காரன் சொஸ்தமானான் (மத்தேயு 8:13)

பாவமான குஷ்டரோகி இயேசுவின் பாதத்தில் விழுந்து தன்னை குணமாக்கும்படியாக சத்தமிட்டு கதறி, “…ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்.” (மத்தேயு 8:2) இயேசு உடனடியாக அவனது வேண்டுகோளை ஏற்று அவனைக் குணமாக்கினார். அப்பொழுது அவன் மிகுந்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தினான். இயேசு பத்து குஷ்டரோகிகளை குணமாக்கியபோது, நன்றி செலுத்துவதற்காக அதில் ஒருவன் மாத்திரம் அவரிடம் வந்தான். இயேசு அவனைப் பார்த்து, “நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். (லூக்கா 17:19)

கொடிய வியாதியினால் வேதனைப்பட்டுக்கொண்டிருந்த தன் மகளுக்காக கானானிய ஸ்திரி ஒருத்தி இயேசுவிடம் வந்து, தான் வந்த காரியத்திற்காக அவரிடம் “…ஆண்டவரே… எனக்கு இரங்கும்…” (மத்தேயு 15:25) என்று பயத்தோடும் அதே சமயம் தைரியத்தோடும் போராடி வேண்டிக்கொண்டாள். இயேசு அவளுடைய விசுவாசத்தையும், வேண்டுதலையும் பெருமைப்படுத்தி “…ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்.” (மத்தேயு 15:28)

பிசாசு பிடித்து, வலிப்பு நோயினால் துன்புற்ற சிறுவனை சீஷர்களால் குணமாக்க முடியாமல் தோல்வியடைந்தபின், வேதனையில் தவித்த அந்த சிறுவனின் தந்தை இயேசுவிடம் வந்து, நம்பிக்கை இழந்த குரலிலே, “… நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால் எங்கள் மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவி செய்யவேண்டும் என்றார்.” (மாற்கு 9:22) அதற்கு இயேசு பிரதியுத்தரவாக, “…நீ விசுவாசிக்கக்கூடமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார். (வசனம் 23)

குருடனான பர்திமேயு வழியருகே உட்கார்ந்திருக்கையில், நம் ஆண்டவர் கடந்து செல்லும் சத்தத்தைக் கேட்டவுடனே, கெஞ்சுகின்ற குரலிலும், மனம் தளர்ந்த நிலையிலும், “…இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்…” (மாற்கு 10:47) என்று கூக்குரலிட்டான். கவனத்துடன் செவிகொடுத்தும் நம் ஆண்டவர் உடனே அவனுடைய வேண்டுதலைக் கேட்டு அந்தப் பிச்சைக்காரனை நோக்கி, “…நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, வழியிலே இயேசுவுக்குப் பின் சென்றான்” (மாற்கு 10:52)

வருத்தத்துடன் அழுதுகொண்டு, அவரது பாதங்களைத் தன் கண்ணீரால் நனைத்து, தன் தலைமுடியினால் துடைத்துக்கொண்டிருந்த பெண்ணிடம், இயேசு ஊக்கமளிக்கும் படியாக, ஆத்தும ஆறுதல் அடையும் படியாக, “…உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.”            (லூக்கா 7:50)

ஒரு நாள் இயேசுவிடம் பத்து குஷ்டரோகிகள் ஒன்றாக, “இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும்…” (லூக்கா 17:13) என்று கேட்ட விண்ணப்பத்திற்கு பதில் அளிக்கும் வகையில் ஒரே சமயத்தில் அவர்கள் அனைவரையும் குணமாக்கின பின்பு, ஆசாரியர்களிடத்தில் போய் தங்களைக் காண்பிக்கும் படியாகக் கூறினார். “…அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள்.” (லூக்கா 17:14)

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]