CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

தெய்வீக பாதுகாவல்

தெய்வீக பாதுகாவல்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழ பாளையமிறங்கி  அவர்களை விடுவிக்கிறார்.” (சங் 34:7)

பிரேசில் நாட்டைச் சார்ந்த குமார் சின்டோ என்ற போதகர் ஒரு கழுதையின் மேல் ஏறி கிராமம் கிராமமாய் சென்று சுவிசேஷத்தை அறிவித்து வந்தார். ஒரு நாள் முழுவதும் தன் ஊழியத்தை முடித்தபின் அவர் தன் வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார். அவர் மிகவும் களைப்படைந்திருந்ததால், ஆட்ட அசைவுடன் சென்று கொண்டிருந்த கழுதையின் சேணத்தின் மேல் தூங்கிக்கொண்டிருந்தார்.

சிறிதுநேரத்திற்குப்பின், அவர் விழித்தபோது அந்தக் கழுதை வழக்கமாய் செல்லுகிற பாதையில் செல்லாமல், கற்கள் நிறைந்த ஒரு பாதையில் செல்வதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் சற்று கலங்கினாலும், தான் வசித்த கிராமம் அருகில் இருப்பதை அறிந்தபடியினால், அவர் அந்தக் கழுதையைத் தொடர்ந்து செல்ல அனுமதித்தார்.

அவர், தன் சபைக்குத் திரும்பி வந்தபோது அவருடைய சபையார் தங்கள் போதகர் பாதுகாப்பாகத் திரும்பி வரவேண்டும் என்று ஜெபித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். போதகர் சுவிசேஷத்தை பிரசங்கிப்பதையும், ஜனங்களின் பாவத்தைக் கண்டிப்பதையும் கண்டு கோபமடைந்த ஒரு பெரிய விவசாயி அவருக்குத் துன்பம் கொடுக்கத் திட்டமிட்டுக் கொண்டிருந்தான் என்று கேள்விப்பட்டார். அவனுடைய நிலம் நேர் வழியின் அருகில் இருந்ததால் அவர்கள் யாவரும் போதகருக்காக ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் போதகர், கர்த்தர் அந்தக் கழுதையை வேறு வழியில் நடத்தி, அவரைப் பாதுகாத்ததை அவர்களிடம் கூறினபோது அவர்கள் எல்லோரும் தேவனைத் துதித்தார்கள்.

நாம் சர்வவல்லவரான தேவனை விசுவாசித்து, அவரை நம்பும்போது, அவர் தன்னுடைய பிள்ளையைப் பாதுகாக்க ஒரு கழுதையைக்கூட உபயோகிக்கிறார். இதே தேவன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பேராசை பிடித்த தீர்க்கதரிசியாகிய பிலேயாமை எச்சரித்து அவன் உயிரைக் காக்க ஒரு கழுதையை உபயோகித்தார். (எண் 22;21-22)

கர்த்தர் எலியா தீர்க்கதரிசியை கொடிய இராஜாவாகிய ஆகாபை விட்டுக் கேரீத் ஆற்றங்கரைக்குப் போகுமாறு கூறினார். அங்கு அவர் காகங்களால் போஷிக்கப்பட்டார்.           (1 இரா 17:1-6)

வாசிக்கவும்: 2நாளா 16:9, சங் 91:4, 125:2, சகரியா 2:5, லூக்கா 21:18

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]