CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

தேவனில் இளைப்பாறுவது எப்படி?

தேவனில் இளைப்பாறுவது எப்படி?

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

உங்களுடைய ஜெபம் சரியான முறையில் இருக்க வேண்டுமென்றால் உங்களுடைய இருதயம் பரிசுத்த ஆவியினால் உயர்த்தப்பட வேண்டும். மேலும் உங்கள் ஜெபம் தொடர்ந்து சரியான முறையில் இருக்க வேண்டுமானால் பரிசுத்த ஆவியினால் உங்கள் இருதயம் தாங்கப்பட்டிருக்க வேண்டும். மற்றவர்களுடைய ஜெப அனுபவத்தில் அவர்களுடைய இருதயம் பரிசுத்த ஆவியினால் உயர்த்தப்பட்டிருக்கிறதா அல்லது தாங்கப்பட்டிருக்கிறதா என்று எனக்குத் தெரியாது. ஆனால் என்னுடைய வாழ்க்கையில் அது நிச்சயமான ஒரு அனுபவம்.

முதலாவது, மனிதர்களால் தயாரித்து வைத்திருக்கும் ஜெப புத்தகங்கள் மூலம் நம்முடைய இருதயத்தை தேவனிடத்தில் உயர்த்த அல்லது ஆயத்தப்படுத்த முடியாது. அது நம்முடைய மகாபெரிய தேவனால் மாத்திரமே முடியும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, தயாரித்து வைத்திருக்கும் ஜெப புத்தககங்கள் மூலம் இருதயத்திற்கு ஒரு விழிப்புணர்வைக்கூட உண்டாக்க முடியாது. ஆனால் உண்மையில் ஜெப ஜீவியம் என்பது தேவனோடு நம்முடைய இருதயம் இசைவாய் இணைந்து காக்கப்படுகிற அனுபவமாகும். மோசே தேவனிடத்தில் ஜெபம் பண்ணும்போது கைகளை உயர்த்துவதே கடினமான காரியமாக இருக்குமானால் நம்முடைய இருதயத்தை தேவனிடத்திற்கு உயர்த்துவது என்பது அதைவிட எத்தனை கடினமானது என்பதை எண்ணிப்பாருங்கள்.                                    (யாத் 17:12 வாசித்துப்பாருங்கள்)

ஜெபத்தில் நம்முடைய இருதயம் இளைப்பாறுதலற்ற நிலையிலிருப்பதைக் கண்டு தேவன் துக்கப்படுகிறார். மக்கள் தேவனிடத்தில், அவர்களின் வார்த்தைகளைக் கொண்டும், தங்கள் உதடுகளால் அவரைக் கனப்படுத்தியும் நெருங்கி வருகிறார்கள். ஆனால் அவர்களுடைய இருதயமோ தேவனுக்கு தூரமாயிருக்கிறது. “இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது;  அவர்கள் எனக்கு பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது” (ஏசா 29:13) என்று தேவன் கூறுகிறார். இதே காரியத்தை இயேசுகிறிஸ்து மத் 15:7-9-ல் குறிப்பிடுகிறார். அப்படிப்பட்டவர்களை அவர் “மாயக்காரரே” என்ற குறிப்பிடுகிறார்.

நாம் ஜெபிக்கவேண்டிய விதமாக ஜெபிப்பதிலுள்ள சிரமங்களை என்னுடைய அனுபவத்திலிருந்து உங்களோடு பகிர்ந்துகொள்ளுகிறேன். ஏழை மக்கள், குருடர்கள், மாம்சீகத்திலிருக்கும் மக்கள் ஒருவேளை என்னைக்குறித்து விநோதமான எண்ணங்களைக் கொண்டிருக்கக்கூடும். ஆனால் என்னுடைய இருதயத்தைப் பொருத்தமட்டில் ஜெபத்தில் இருதயம் தேவனிடத்தில் செல்வதற்கு மனப்பூர்வமாக வருவதில்லை. சிரமப்பட்டு இருதயத்தை அவரிடத்தில் கொண்டு சென்றுவிட்டாலும் அவரிடத்தில் நிலைத்திருப்பது என்பது மிகக்கடினமான காரியம். ஆகவே அநேக சந்தர்ப்பங்களில் என்னுடைய ஜெபத்தில் இருதயத்தை மிகவும் பலவந்தம் பண்ண வேண்டியதிருந்திருக்கிறது. ஆகவேதான் முதலாவதாக “ஆண்டவரே, நீரே என் இருதயத்தை எடுத்து கிறிஸ்துவிலே வைத்துவிடும்” என்று கெஞ்சி ஜெபிப்பேன். இரண்டாவதாக அவ்வாறு வைக்கப்பட்ட இருதயம் கிறிஸ்துவிலே காக்கப்பட நான் ஜெபிப்பேன். அநேக வேளையில் எனக்கு என்ன ஜெபிப்பது என்றே தெரியாமல் குருடனைப் போல நின்றிருக்கிறேன். ஜெபிப்பதைக்குறித்து நான் மிகவும் அறியாமையிலிருந்தேன். அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட கிருபையாகிய பரிசுத்த ஆவியானவர் என்னுடைய பலவீனத்தில் உதவி செய்தார். “கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும். என் தேவனாகிய ஆண்டவரே உம்மை என் முழு இருதயத்தோடு துதித்து, உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன்” (சங் 86:11-12) என்ற தாவீதின்                          ஜெபத்தைப் பாருங்கள்.

ஜெபவேளையில் நம்முடைய இருதயம் மிகவும் கடினமான அனுபவத்தைச் சந்திக்கிறது. பின் வழியாகவோ அல்லது குறுக்கு வழியாகவோ தேவனுடைய சமூகத்தை விட்டு நழுவி ஒடவே முயற்சிக்கும். ஜெபத்தில் அவரிடத்தில் வாய்விட்டு பேச இயலாத அளவிற்கு இருதயத்தை பெருமை ஆட்கொண்டு விடுகிறது. ஆனால் மற்றவர்களிடம் பேசும்போது எல்லா மாய்மாலங்களோடு பேசுகிறது. பரிசுத்த ஆவியானவர் நம்முடைய இருதயத்துக்குள் வந்து ஆளுகை செய்து விண்ணப்பத்தின் ஆவியை நமக்குத் தந்தால் மட்டுமே தேவனோடு நம்முடைய ஆத்துமா நல்மனசாட்சியோடு இசைந்திருக்கும். பரிசுத்த ஆவியானவர் நம்முடைய இருதயத்துக்குள் வந்தால் மட்டுமே முறையான ஜெபம் தொடர்ந்து இருந்துகொண்டேயிருக்கும். இல்லாவிட்டால் சாத்தியமாகாது.

ஜெபம்

தேவனாகிய கர்த்தாவே, பரிசுத்த ஆவியானவர் அல்லாமல் நான் எதையும் செய்யவும் முடியாது கற்றுக்கொள்ளவும் முடியாது என்பதை அறிகிறேன். உம்முடைய ஆவி ஜெபத்தில் என்னை உயர்த்துகிறது. உம்முடைய ஆவி ஜெபத்திற்கு என்னுடைய இருதயத்தை பக்குவப்படுத்துகிறது. ஜெபத்தில் என்னுடைய இருதயமும் சிந்தையும் உம்முடைய ஆவியின் உதவியால், இளைப்பாறச் செய்யும். உம்முடைய இருதயத்திலிருப்பதற்கு ஏற்ப நான் ஜெபிக்க உம்முடைய ஆவி என்னை தூண்டுகிறது. என்னுடைய சுய விருப்பத்தையும் தாண்டி என்னை நடத்துகிறார். உம்முடைய ஆவியினால் பேசவும் செயற்படவும் என்னை எப்பொழுதும் உற்சாகப்படுத்தும். அப்படியானால் என்னுடைய வாழ்க்கையில் பரிசுத்த ஆவியின் உதவியுடன் ஜெபத்தின் வல்லமையைக் குறித்தும் ஆசீர்வாதங்களைக் குறித்தும் நான் மற்றவர்களுக்கு சாட்சியாயிருக்க முடியும். அதற்கு எனக்கு உதவிசெய்யும். ஆமென்.

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]