CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

நேர்மையை விதையுங்கள்(Sow Honesty)

நேர்மையை விதையுங்கள்(Sow Honesty)

ஒரு பெரிய கிறிஸ்தவ வர்த்தக நிறுவனத்தின் தலைவர் வயது முதிர்ச்சியின் காரணமாக ஓய்வு பெற விரும்பினார். தனது நிறுவனத்தின் இயக்குணர்களையோ (Directors)  அல்லது சொந்தக் குமாரர்களையே எவரையும் தலைமை நிர்வாக அலுவலராக (Chief Executive Officer) நியமிக்க  விரும்வில்லை. மாறாக தனது நிறுவனத்திலுள்ள எல்லா இளம் நிர்வாகிகளையும் (Executives) அழைத்தார். ”நான் நிர்வாகப் பொறுப்பிலிருந்து ஓய்வு பெறும் காலம் வந்துவிட்டது. நான் உங்களில் ஒருவரை தலைமை நிர்வாக அலுவலராக (CEO) தெரிந்தெடுக்கப் போகிறேன்.” இந்த, செய்தி, வந்திருந்த எல்லா நிர்வாகிகளுக்கும் மிகுந்த வியப்பாகவிருந்தது. அவர் மேலும் ”நான் இன்றைக்கு உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு விஷேசித்த விதையைத் (Seed) தரப் போகிறேன். நீங்கள் அதை விதையை ஊன்றி, வளர்த்து இன்றிலிருந்து சரியாக ஒரு ஆண்டு முடிந்ததும் நீங்கள் வளர்த்த செடியை என்னிடம் கொண்டு வர வேண்டும். நீங்கள் வளர்த்திருக்கும் செடியின் அடிப்படையில் உங்களில் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) யார் என்பதை தீர்மானம் செய்வேன்” என்று கூறினார். ஒவ்வொருவருக்கும் ஒரு விதையைக் கொடுத்தார். அப்படி வாங்கியவர்களுள் ஜிம்மும் ஒரு இளம் நிர்வாகி.                                                        ..

ஜிம் அந்த விதையுடன் வீட்டிற்குச் சென்றான். தன் மனைவியிடம் நடந்ததை எல்லாம் சொன்னான். ஒரு பெரிய தொட்டியை வாங்கினார்கள். அவனது மனைவியும் உற்சாகமாக அதில் இணைந்து செயல்பட்டாள். மண்ணையும் நல்ல உரத்தையும் கலந்து தொட்டியுல் வைத்து விதையை ஊன்றி தண்ணீர் ஊற்றினான். ஒவ்வொரு நாளும் அதற்குத் தண்ணீர் ஊற்றுவான். முளைவிட்டிருக்கிறதா என்று உற்று நோக்குவான். மூன்று  வாரம் கழித்து வர்த்தக அலுவலகத்தில் மற்ற நிர்வாகிகள் தாங்கள் ஊன்றிய விதை முளைத்திருப்பதாகவும் செழிப்பாக வளர்வதாகவும் பேச ஆரம்பித்தார்கள். ஆனால் ஜிம் விதைத்த விதை முளைக்கவே இல்லை. மூன்று வாரம் ஐந்து வாரம் வேகமாக கடந்தன. மற்றவர்களெல்லாம் தங்களது செடியைக் குறித்துப் பேசுவார்கள். ஜிம் விதைத்த விதை முளைக்கவேயில்லை. அவர்களோடு என்ன பேசுவது என்று தெரியாமல் திகைத்தான். நாம் எங்கே தோல்வியுற்று விட்டோமோ என்று வருந்தினான். ஆறுமாதம் தாண்டி விட்டது. தினமும் தண்ணீர் ஊற்றி உரம் போட்டது தான் மிச்சம்.  தொட்டியில் செடி முளைக்கவே இல்லை. எப்படியோ விதையை நான் தான் சேதப்படுத்திவிட்டேனோ. அதனால் விதை செத்துவிட்டதோ என்றெல்லாம் எண்ணினான். ஆனால் மற்ற நிர்வாகிகளிடத்தில் இதைப் பற்றிப் பேசவேயில்லை. ஆனாலும் தொடர்ந்து தண்ணீர் ஊற்றிக் கொண்டே இருந்தான்.    கடைசியாக ஒரு ஆண்டு நிறைவு நாளும் வந்தது. எல்லா நிர்வாகிகளும் தாங்கள் வளர்த்த செடியைத் தொட்டியுடன் நிறுவனத் தலைவரின் பார்வைக்குக் கொண்டு வந்தனர். ஜிம் தன் மனைவியிடம் சோர்வுடன் ”நான் ஒரு காலித் தொட்டியைக் கொண்டு போக விரும்பவில்லை. எனக்கு வெட்கமாக இருக்கிறது” என்றான். ”நடந்ததைக் குறித்து நேர்மையோடு நடந்து கொள்ளுங்கள், (Be Honest) வெறும் தொட்டியைக் கொண்டு செல்லுங்கள்” என்று சொன்னாள். அவனுக்கு வயிற்றைக் கலக்கியது. வாழ்க்கையில் ஒரு இக்கட்டான நேரத்தைச் சந்திக்கப் போகிறோம். ஆனால் மனைவி சொன்னது தனக்கு சரியாக இருக்கலாம் என்று எண்ணி தன்னைத் தேற்றிக் கொண்டான்.     ஜிம் வெறும் தொட்டியை நிர்வாக அரங்கிற்குள் கொண்டு வந்தான். மற்ற நிர்வாகிகள் கொண்டு வந்திருந்த செடிகள் விதவிதமாக மிகவும் செழிப்பாக அழகாக இருப்பதைக் கண்டான். வந்திருந்த அனைவரும் ஜிம்மின் காலித் தொட்டியைப் பார்த்து சிரித்தனர். ஜிம் துக்கத்தை அடக்கிக் கொள்ள முடியாமல் திகைத்தான். தலைவர் அரங்கிற்குள் நுழைந்தார். ஜிம் வெட்கப்பட்டு எல்லோருக்கும் பின்பாக தன்னை ஒளித்துக் கொண்டான்.     ”எவ்வளவு அழகான செடிகள். கண் கவரும் பூக்கள் மிக அருமை” என்று தலைவர் பாராட்டினார். ”இன்று உங்களில் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) நியமிக்கப்பட இருக்கிறீர்கள்” எல்லோருக்கும் பின்பாக மறைந்து கொண்டு தனது வெறும் காலித் தொட்டிக்குப் பின்பாக நின்று கொண்டிருந்த ஜிம்மைக் கண்டார். தலைவர் தன்னுடைய நிதி இயக்குனரை (Financial Director) அழைத்து ஜிம்மை முன்பாக அழைத்து வரச் சொன்னார். ஜிம்முக்கு நடுக்கம் பிடித்துவிட்டது. நான் ஒரு தோல்வியுற்றவன். என்னை நன்றாகத் திட்டப் போகிறார் என்று எண்ணிப் பயந்தான்.     ஜிம் முன்பாக வந்தான். ”உனக்குக் கொடுக்கப்பட்ட விதை என்னவாயிற்று?” என்று கேட்டார். ஜிம் நடந்த காரியத்தை சொன்னான். தலைவர் ஜிம்மைத் தவிர மற்ற அனைவரையும் உட்காரச் சொன்னார். ஜிம்மை நோக்கிப் பார்த்தார். ”இதோ தலைமை நிர்வாக அதிகாரியை (CEO) நான் அறிவிக்கிறேன். அவர் பெயர் ஜிம்.” ஜிம்மால் இதை நம்ப முடியவில்லை. இவன் எப்படி தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட முடியும் என்று முணுமுணுத்தார்கள். ஏனென்றால் அவன் காலித் தொட்டி முன்பாக நின்று கொண்டிருந்தான். தொடர்ந்து தலைவர் ”சரியாக ஒரு ஆண்டுக்கு முன்பாக நான் ஒவ்வொருவருக்கும் ஒரு விதையைக் கொடுத்தேன். அதை விதைத்து, தண்ணீர் விட்டு பராமரித்து இந்த நாளில் என்னிடம் கொண்டு வரும்படி சொன்னேன். ஆனால் நான் கொடுத்த விதை கொதிநீரில் அவித்த விதை (Boiled Seed). அவைகள் செத்த விதைகள். அவைகள் முளைத்து, வளர்ந்து செழிப்பது எப்படி சாத்தியமாகும்” என்று பேசினார். யாவரும் திகைத்துப் போய்விட்டார்கள். நான் கொடுத்த விதை முளைக்காததால் நீங்கள் பதிலாக வேறுவிதையை (Substituted another Seed) போட்டு செடியாக்கி கொண்டு வந்து விட்டீர்கள். ஆனால் ஜிம் மாத்திரம் நான் கொடுத்த விதைத்து முயற்சி செய்து தைரியமாக, நேர்மையாக நான் கொடுத்த விதையோடு காலித் தொட்டியைக் கொண்டு வந்திருக்கிறார். ஆகவே இந்த நேர்மையாளரே புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) நியமிக்கப்படுவதற்கு தகுதியானவர்” என்று கூறி முடித்தார். நீங்கள் நேர்மையை (Honesty) விதைத்தால் நம்பிக்கையை (Trust) அறுப்பீர்கள். நன்மையை (Goodness) விதைத்தால் நண்பர்களை சேகரிப்பீகள். தாழ்மையை (Humility) விதைத்தால் மேன்மையை திருப்தியை அறுப்பீர்கள. கடின  உழைப்பை (Hard Work) விதைத்தால் வெற்றியை அறுப்பீர்கள். மன்னிப்பை (Forgiveness) விதைத்தால் ஒப்புறவாக்குதலை அறுப்பீர்கள். கிறிஸ்துவின் மீது விசுவாசத்தை விதைத்தால் பெரிய அறுவடையை காண்பீர்கள்.  நீங்கள் இன்று விதைப்பதே நாளை உங்களது அறுவடையை நிர்ணயிக்கும். ” மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.” (கலா 6:7) என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பாக அப்போஸ்தலனாகிய பவுல் கூறியுள்ளார். உங்கள் வாழ்விலும் உங்கள் குடும்பத்திலும் அழியாத வித்தாகிய தேவனுடைய வசனத்தை விதையுங்கள். நித்திய ஜீவனை அறுவடை செய்வீர்கள்.