CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

புத்தகத்தை விடாது பற்றியிரு

புத்தகத்தை விடாது பற்றியிரு

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள். இவைகளில் ஒன்றும் குறையாது. இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது. அவருடைய வாய் இதைச் சால்லிற்று. அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும்               (ஏசாயா 34:16)

டாக்டர். ஜோசப் பார்க்கர் லண்டனிலுள்ள ஒரு தேவாலயத்தில் ஊழியக்காரராய் இருந்தார். ஒரு ஞாயிறு காலை ஆராதனையில் வேண்டுமென்றே அவர் வேதவாசிப்பை விட்டுவிட்டார். அவர் பிரசங்கபீடத்திற்கு சென்ற போது வேதபுத்தகத்தை மூடி வைத்துவிட்டு, நேராக பிரசங்கத்தைத் தொடங்கினார். அவர் எப்போதும் வேதத்திலிருந்து மேற்கோள் காட்டுவதால் சிலர் அவரைக் குறைகூறியதாக அவர் கூறினார். விஞ்ஞானத்தில் பெரிய முன்னேற்றங்கள் இருக்கிற இந்த காலத்தில் அவரைப் ‘பழங்காலத்தவர்’ என்றும் ‘பழமைப்பட்டவர்’ என்றும் அழைத்தனர். அந்தக் காலைவேளையில் விஞ்ஞானத்திற்கு நேராக திரும்ப தீர்மானித்திருப்பதாகக் கூறினார்.

தன்னுடைய ஒரே மகனை இழந்த ஒரு ஏழை விதவையைப்பற்றி பேசினார். அவள் மிகுந்த துக்கத்தில் இருந்து, தன் மகனை மறுபடியும் பார்க்க முடியுமா என்ற அறிய விரும்பினாள். அவளுக்கு விஞ்ஞானம் ஒரு பதில் கூறட்டும். அவர் சிறிது தாமதித்து வேதபுத்தகத்தை பிரசங்க பீடத்திலிருந்து எடுத்து, தனக்கு பின்னால் இருந்த இருக்கையில் வைத்தார். திரும்பவும் அவர்களைப் பார்த்து, அந்தப் பெண் தன் மகனைத் திரும்பவும் பார்ப்பாளா? அவன் எங்கே? எல்லாவற்றிற்கும் முடிவு மரணம்தானா? விஞ்ஞானம் இதைப்பற்றி என்ன சொல்கிறது? என்று அழுத்தமாகக் கேட்டார். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்பு அவர் தொடர்ந்தார், நாங்கள் ஒரு பதிலுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம். அந்தப் பெண்ணின் இருதயம் உடைந்து கொண்டிருக்கிறது. விஞ்ஞானம் பேசித்தான் ஆகவேண்டும். அதற்கு பேச ஒன்றும் இல்லையா? நிச்சயமாக அது பேச வேண்டும். இல்லாவிட்டால் நாம் அந்தப் புத்தகத்திற்குத் திரும்புவோம்.

இதைச் சொல்லிக்கொண்டே, டாக்டர் பார்க்கர் திரும்பி, பயபக்தியோடு அந்த வேதபுத்தகத்தை எடுத்து, தன் இருதயத்தோடு சேர்த்து வைத்து பின் அதை பிரசங்க மேடையில் வைத்து அமைதியாக பின்வரும் வசனங்களை வாசித்தார். 2 சாமுவேல் 12:23 ‘நான் அதினிடத்துக்குப் போவேன், 1கொரிந்தியர் 15:52 ‘மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்’, 1 தெச 4:17 ‘இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்’ வேதத்தை மூடியபடி, ‘நாம் எப்போதும் இந்தப் புத்தகத்தை விடாது பற்றிக்கொள்வோம்.’ என்று கூறினார்.

 

வாசிக்கவும்

சங்கீதம் 19:8, சங்கீதம் 119:105, 2தீமோத்தேயு 3:11, ரோமர் 15:4

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]