CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

Monthly Archives: December 2013

12 Dec 2013

உன்னை போதித்து நடத்தும் தேவன்

ஒரு பாலத்தின் அருகே அவளுடைய பழக்கடை இருந்தது. தன்னிடம் பழங்கள் வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் வராத சமயங்களில் அவள் தனது பைபிளை எடுத்து வாசிப்பது வழக்கம். அவளது விலை மதிக்க முடியாத செல்வம் அது ஒன்றே! ஒருமுறை ஒரு வாடிக்கையாளர் கேட்டார். “எப்பொழுது பார்த்தாலும் எதை அம்மா வாசித்து கொண்டிருக்கிறீர்கள்?” “ஐயா, இது கடவுளுடைய வார்த்தைகள் அடங்கிய வேதாகமம். அதைத்தான் நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன்”என்றாள் அவள். “ஏனம்மா, இது கடவுளுடைய வார்த்தைகள்தான் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? யாராவது அப்படிச் சொன்னார்களா?” என்று வாடிக்கையாளர் வியப்போடு கேட்டார். “அவரே அப்படிக் கூறியிருக்கிறார் ஐயா” என்றாள் அவள். “கடவுள் உங்களோடு தனிப்பட்ட முறையில் பேசி அப்படிச் சொன்னாரா?” சற்று நேரம் அவள் நிலை தடுமாறினாள்.வேதாகமம் கடவுளுடைய […]

12 Dec 2013

தவறான அன்பிற்குத் தப்ப

ஒரு பெண் உடை உடுத்தும் விதமும் அவளது பார்வையும், செய்கைகளும் அவளைச் சுற்றியுள்ள டீன் ஏஜ் வாலிபர்களை மட்டுமல்ல, 60 வயது வயோதிபரையும், 80 வயது கிழவனையும் பார்வைகள் வழியாய் பாதிக்கின்றது.    மற்றவர்கள் என்ன நினைத்தால் என்ன,    நான் என் விருப்பம்போல் என் அழகினை வெளிப்படுத்த எனக்கு உரிமையுண்டு எனக் கூறாமல் உன் உடலையும்,    அழகையும், மறைவாயிருக்கவேண்டிய மார்பகங்களையும் மூடும்படி நீ உடை உடுத்த வேண்டும். இதை உன்னிடம் யாராவது கூறினால் கோபம் கொள்கிறாய். ஆனால் நீ கவர்ச்சியாக உள் அவயங்கள் தெரியும்படி உடுத்தும்போது பிறர் பாவ இச்சைகளால் தூண்டப்பட்டு அதினிமித்தம் பாலியல் பாவங்கள் செய்ய நீ காரணமாகிறாயே. எனவே எந்த வகையிலும் உன் நடை, உடை, பேச்சு பிறரைப் பாவத்திற்கு உள்ளாக்காமல் இருக்க நீ கவனமாய் […]