CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

Category : Womens

14 Sep 2014

குடும்பத்தில் மனைவியின் பங்கு!

 வேதத்தின் வெளிச்சத்திலே நம்முடைய வாழ்கையின் பாதையை சீர்தூக்கிப் பார்போம். ‘உம்முடைய வசனம் என் கால்களுக்கு தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது’ என்று தாவீது சங்கீதத்தில் கூறுவதை நாம் வாசித்திருப்போம். ஆனால் பெரும்பான்மையான நேரங்களில் போதகத்தை கேட்பதோடு நின்று விடுகிறோம். அல்லது வாசித்த வேத பகுதியை நம்முடைய வாழ்கையில் நடைமுறை படுத்த தேவையான முயற்சிகளை எடுக்க தவறி விடுகிறோம். . இன்று குடும்பங்களில் மனைவியின் பங்கு குறித்து வேதத்தில் தேவன் என்ன கூறியுள்ளார் என்று பார்போம். பின்னர் அவ்வசனங்களுக்கு நம்முடைய பதில் என்னவென்றும் சிந்திப்பது நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பிரயோஜனமாக இருக்கும். தேவன் நமக்கு உதவி செய்வாராக. . தனிப்பட்டவாழ்க்கை . 1. I தீமோத்தேயு 2:10 – தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும் […]

18 Jul 2014

எல்லோரும் அவளை புகழுகிறார்கள்!

உலகில் வாழ்கிற நாம் எப்படிபட்டவர்களாய் வாழ வேண்டும் என்பதற்காக பவுல் கலாத்தியர் நிருபத்தில் 5ம் அதிகாரம் 22,23 வசனங்களில் எழுதியிருப்பதை படிப்போமா? . ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம். இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. . இப்படிப்பட்ட ஆவியின் கனிகளை பெற வேண்டிய- பெண்களாகிய நாம் வாழ்வில் மிகவும் பொறுப்பான இடத்தில் இருக்கிறோம். . கணவர், பிள்ளைகள், உறவினர், பெற்றோர் யாவரையும் பராமரிக்கும், வீட்டு வேலைகளை கவனித்துக்கொள்ளும் நற்பணியில் நாம் இருக்கிறோம். . பெண்களாகிய நாம் பெலவீன பாண்டங்கள்தான்- ஆனாலும், இயேசப்பா நம்மை ஆவியின் கனிகளை பெற்று நல்வாழ்வு வாழ சொல்கிறார். . நாம் மனமகிழ்ச்சியோடு அனைவருக்கும் செய்யும் கடமைகளை செய்யும்போது, நம் பெலவீனமுள்ள சரீரத்தை பெலமுள்ளதாக்குகிற தேவனாகிய கர்த்தர் நம்மோடிருந்து நம்மை பெலப்படுத்துகிறார். . […]

14 Jul 2014

நீங்கள் கர்த்தரோடு இருந்தால் அவர் உங்களோடு இருப்பார்

எனக்கு அருமையான சகோதரிகளே, உங்களோடு தொடர்பு கொள்ள செய்த தேவாதி தேவனுக்கு கோடானு கோடி ஸ்தோத்திரம். நாம் கர்த்தரோடிருக்க வேண்டும். நாம் கர்த்தரோடிருக்க வேண்டும் என்றால் அதிகாலையில் எழுந்து வேதம் வாசித்து ஜெபிக்க வேண்டும். இயேசப்பா இதை தான் விரும்புகிறார். என் பிள்ளைகள் என்னை விரும்புகிறார்களா? என்னோடு பேசுவார்களா? என்னோடு வாழ்வார்களா? என்று தான் நம்மிடம் எதிர்பார்கிறார். நாம் அவருடைய வசனத்தை குறித்து தியானிக்க வேண்டும். நாம் அவ்வாறு தியானிக்கும்போது நமது மனம் தெளிவடையும். மன கலக்கம், மன பாரம் எல்லாம் நம்மைவிட்டு அகன்று போகும். அவர் நம்முடைய மனதை தெளிவுபடுத்துவார். அன்றைக்குரிய காரியத்தை குறித்து நம்மிடம் பேசுவார். நாம் மட்டும் அல்ல- நம் வீட்டில் உள்ளவர்களையும், நமக்கு அருமையானவர்கள் அனைவரையும் இதை […]

11 Feb 2014

நிச்சயம் நினைத்தருளுவார்

‘என் தேவனே எனக்கு நன்மை உண்டாக என்னை நினைத்தருளும்’ (நெகோமியா 13:31). வேதத்திலுள்ள 66 புத்தகங்களும் ஒவ்வொரு விதமாக முடிவடைகின்றன. சில புத்தகங்கள் துதியோடு முடிவடைகிறது. பல புத்தகங்கள் வாழ்த்துக்களோடு முடிவடைகிறது தீர்க்கத்தரிசனங்களோடும் முடிவடைகிறது. ஏன்  புலம்பலோடும் கூட ஒரு புத்தகம் முடிவடைகிறது. ஆனால்  இந்த 66 புத்தகத்திலும் ஒரே ஒரு புத்தகம் ஜெபத்தோடு முடிவடைகிறது. ஆம்! நெகேமியா ஒரு பெரிய ஜெபவீராராக இருந்திருப்பார் என்று நான் நம்புகிறேன். அவர் ஜெபத்தோடு கர்த்தருக்காக பெரிய காரியத்தை  செய்து இறுதியில் ‘என் தேவனே எனக்கு நன்மை உண்டாக என்னை நினைத்தருளும்’ என்று வேண்டிக்கொள்கிறார். ஒரு மனிதன் நம்மை நினைத்தருள வேண்டுமென நாம் எதையெதையோ செய்கிறோம்.  எப்படியாகிலும் அவரிடத்திலிருந்து நன்மையை பெறவேண்டுமென்று பல வழிகளில் பிரயாசப்பட்டு […]

06 Feb 2014

இயேசுவின்பாதங்களும் மரியாளும்

இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்த நாட்களில் அவருடைய பாதங்கள் எங்கெல்லாம் பட்டதோ அந்த இடத்திலுள்ள ஜனங்கள் நன்மை பெற்றார்கள்! பிசாசின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்!  அவருடைய வல்லமையுள்ள வார்த்தைகள் ஜனங்களைச் சந்தித்து அறியாமையை போக்கியது. ‘பாதம் ஒன்றே வேண்டும் இந்தப் பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம்’ என்று ஒரு பக்தன் பாடினான். இயேசுவின் பாதங்களை நாம் பற்றிப் பிடித்துக் கொள்ளும் போது அது நமக்கு புகலிடமாக அமைகிறது. பெத்தானியா என்ற கிராமத்தைச் சேர்ந்த மரியாளைக் குறித்து நாம் வேதத்தில் மூன்று இடங்களிலே வெவ்வேறான சூழ்நிலைகளில் காண்கின்றோம்.  இதிலே ஒரு விசேஷம் என்னவென்றால் அந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் மரியாள் இயேசுவின் பாதத்தண்டையிலேயே காணப்பட்டாள் ஆசிர்வாதங்களைப் பெற்றுக் கொண்டாள். மரியாள் இயேசுவின் பாதத்தில் பெற்றுக்கொண்ட மூன்று அனுபவங்களைக் […]

12 Dec 2013

உன்னை போதித்து நடத்தும் தேவன்

ஒரு பாலத்தின் அருகே அவளுடைய பழக்கடை இருந்தது. தன்னிடம் பழங்கள் வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் வராத சமயங்களில் அவள் தனது பைபிளை எடுத்து வாசிப்பது வழக்கம். அவளது விலை மதிக்க முடியாத செல்வம் அது ஒன்றே! ஒருமுறை ஒரு வாடிக்கையாளர் கேட்டார். “எப்பொழுது பார்த்தாலும் எதை அம்மா வாசித்து கொண்டிருக்கிறீர்கள்?” “ஐயா, இது கடவுளுடைய வார்த்தைகள் அடங்கிய வேதாகமம். அதைத்தான் நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன்”என்றாள் அவள். “ஏனம்மா, இது கடவுளுடைய வார்த்தைகள்தான் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? யாராவது அப்படிச் சொன்னார்களா?” என்று வாடிக்கையாளர் வியப்போடு கேட்டார். “அவரே அப்படிக் கூறியிருக்கிறார் ஐயா” என்றாள் அவள். “கடவுள் உங்களோடு தனிப்பட்ட முறையில் பேசி அப்படிச் சொன்னாரா?” சற்று நேரம் அவள் நிலை தடுமாறினாள்.வேதாகமம் கடவுளுடைய […]

12 Dec 2013

தவறான அன்பிற்குத் தப்ப

ஒரு பெண் உடை உடுத்தும் விதமும் அவளது பார்வையும், செய்கைகளும் அவளைச் சுற்றியுள்ள டீன் ஏஜ் வாலிபர்களை மட்டுமல்ல, 60 வயது வயோதிபரையும், 80 வயது கிழவனையும் பார்வைகள் வழியாய் பாதிக்கின்றது.    மற்றவர்கள் என்ன நினைத்தால் என்ன,    நான் என் விருப்பம்போல் என் அழகினை வெளிப்படுத்த எனக்கு உரிமையுண்டு எனக் கூறாமல் உன் உடலையும்,    அழகையும், மறைவாயிருக்கவேண்டிய மார்பகங்களையும் மூடும்படி நீ உடை உடுத்த வேண்டும். இதை உன்னிடம் யாராவது கூறினால் கோபம் கொள்கிறாய். ஆனால் நீ கவர்ச்சியாக உள் அவயங்கள் தெரியும்படி உடுத்தும்போது பிறர் பாவ இச்சைகளால் தூண்டப்பட்டு அதினிமித்தம் பாலியல் பாவங்கள் செய்ய நீ காரணமாகிறாயே. எனவே எந்த வகையிலும் உன் நடை, உடை, பேச்சு பிறரைப் பாவத்திற்கு உள்ளாக்காமல் இருக்க நீ கவனமாய் […]