நீங்கள் வாசிக்கப் போகும் இந்தக் கடிதம் முற்றிலும் உண்மையானது. இந்த வார்த்தைகள் தேவனுடைய இருதயத்தில் இருந்து புறப்பட்டு வருகிற படியால் இவைகளுக்கு செவிகொடுங்கள்! அப்போது, ஜீவியம் நிச்சயமாக மாறிவிடும். அவர் உங்களை நேசிக்கிறார்! உங்கள் ஜீவகாலமெல்லாம் நீங்கள் வாஞ்சித்து தேடிய அன்புள்ள தகப்பன் இவரே!! இந்த அன்பின் கடிதத்தை அவர்தான் உங்களுக்கு இங்கு எழுதுகிறார். . என் பிள்ளைகளே.. என்னை நீ அறிந்திருக்கமாட்டாய், ஆனால் உன்னைப்பற்றிய சகலத்தையும் நான் அறிந்திருக்கிறேன்… சங்கீதம் 139:1 உன் உட்காருதலையும் உன் எழுந்திருக்குதலையும் நான் அறிந்திருக்கிறேன்… சங்கீதம் 139:2 உன் வழிகள் எல்லாம் எனக்குத் தெரியும்… சங்கீதம் 139:3 உன் தலையில் உள்ள மயிர்களைக் கூட நான் எண்ணியிருக்கிறேன்… மத்தேயு 10:31 ஏனெனில் நீ என்னுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறாய்…ஆதியாகமம் 1:27 நீ எனக்குள் […]
அமெரிக்க நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் நான் இராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்றினேன். கெட்டிஸ்பர்க் யுத்தக்களத்தில் நூற்றுக்கணக்கான யுத்த வீரர்கள் காயமடைந்து என்னுடைய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். . அவர்களில் பலர் மிக மோசமாகக் காயமடைந்திருந்தபடியால் சிலருக்கு கையையோ, காலையோ அல்லது இரண்டையுமே எடுத்துவிட வேண்டிய மோசமான நிலவரத்திலிருந்தனர். . 17 வயது நிரம்பிய சார்லி இராணுவ வீரனாக சேர்ந்து 5 மாதமே ஆகின்றன. அவனுடைய கையையோ, காலையோ எடுத்து விட வேண்டிய பரிதாபமான நிலையில் என்னுடைய மருத்துவமனையில் இருந்தான். ஆபரேஷனுக்கு முன்பு என்னுடைய மருத்துவ உதவியாளர்கள் அவனுக்கு மயக்க மருந்து கொடுக்க சென்ற போது, அவன் மயக்க மருந்தை ஏற்றுக் கொள்ள மறுதலித்துவிட்டான். ”மருத்துவரை வரச் சொல்லுங்கள். நான் அவரோடு பேசிக் […]
“ஜெனரல் சார்ல்ஸ் ஜேம்ஸ் கார்டன், கார்ட்டும் (khartum) நகரின் கதாநாயகன். உண்மையிலேயே ஒரு கிறிஸ்தவ இராணுவ வீரன், சூடான நகரத்தில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் ஒராண்டு வீரத்துடன் நின்று இறுதியில் மேற்கொள்ளப்பட்டு கொலையுண்டார். வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில், அவருடைய நினைவிடத்தில் இவ்வாறு பொறிக்கப்பட்டுள்ளது. அவர் தம் பணத்தை ஏழைகளுக்கும், தம் இரக்கத்தைத் துயரப்படுகிறவர்களுக்கும், தம் வாழ்க்கையைத் தம் நாட்டுக்கும், தம்முடைய ஆத்துமாவைத் தேவனுக்கும் கொடுத்தார்.” ஜெபம் ஒருவரது நடத்தையை ஒழுங்குப்படுத்துகிறது; நடத்தை குணத்தை உண்டாக்குகிறது. நாம் செய்யும் காரியம் நம் நடத்தையைக் குறிக்கும். நாம் எப்படிப்பட்டவர் என்பது நம்முடைய குணத்தால் அறியப்படும். நடத்தை வெளியரங்கமான வாழ்க்கை. ஆனாலும் அது வெளியில் தெரியும்படி சாட்சி கொடுக்கும் ஒன்றாகும். நடத்தை வெளியரங்கமானது. வெளியில் பார்க்கப்படுவது குணம் உள்ளானது, உள்ளுக்குள் […]
அநேக சமயங்களில் நாம் விசுவாசத்தை விட்டு விட்டு தேவனுடைய வார்த்தைகளை எறிந்துவிட்டு சாத்தான் சொன்னதை விசுவாசிக்கிறோம். அவன் சொன்னதை நீ சொல்லும் போது அவனுடைய திறமையை வெளிப்படுத்துகிறாய். பயம் சாத்தானை செயல்படச் செய்கிறது. விசுவாசம் தேவனை செயல்படச் செய்கிறது. நீ நினைத்ததைச் சொல்வதற்கு முன் “யார் அதைச் சொன்னது, அது எங்கிருந்து வருகிறது” என்று பார். அது வசனத்திற்கு ஏற்றதாக இராவிட்டால் அது யாரிடமிருந்து வருகிறது என்று உனக்குத் தெரியும். அது சாத்தானிடமிருந்து வந்தால் அதைச் சொல்லாதே. அதைச் சொன்னால் வஞ்சிக்கப்படுவாய். சாத்தானுக்கு விசுவாசியின் மீது ஒரு அதிகாரமுமில்லை என்பது உனக்குத் தெரியுமா? அவனிடமிருக்கும் ஒரே ஒரு திறமை உன்னை ஏமாற்றுவதுதான். அவனது பொய்களை உன்னை நம்பும்படி செய்துவிட்டால் அவன் உன்னைத் தன் […]