CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

அபிஷேகம்!!!

அபிஷேகம்!!!

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

கர்த்தரால் கொடுக்கப்படுகிற இந்த அபிஷேகத்தை குறித்து அநேகருக்கு அநேக குழப்பங்கள் உண்டு. உண்மையாகவே நான் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறேனா????? அப்படி என்றால் எனக்கு எப்படி நிச்சயமாக தெரியும்? இன்னும் அநேக கேள்விகளோடு ஒருவேளை நீங்கள் இருக்கலாம்…

.

twins-babies-wallpapers-13648-hd-wallpapers

.ஒருவர் ஒரு வீட்டிற்கு சென்றிருந்தபொழுது அங்கு இரட்டைகுழந்தைகளை பார்த்தாராம். ஒரே குழப்பமாக இருந்தது. இதில் யார் ராஜா யார் அரசன் என்று..அவர் அந்த பெற்றோர்களிடம் கேட்டாராம். எப்படி இந்த குழந்தைகளை அடையாளம் கண்டு கொள்ளு கிறீர்கள்??? ஆரம்பத்தில் எங்களுக்கும் சற்று கடினமாகதான் இருந்தது. இப்பொழுது சில அடையாளங்களை கண்டு வைத்திருக்கிறோம். ஆகவே எங்களுக்கு இலகுவாக இருக்கிறது.

.
அடையாளம் என்பது மிகவும் முக்கியமான ஒரு காரியம். இந்த குழப்பங்கள் நமக்கு இருக்கக்கூடாது என்பதற்கு தான் கர்த்தர் சொன்னார் “மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்க தரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.. யோவேலில் 2:28-32;. வாக்குதத்தத்தை கர்த்தர் கொடுக்கும்பொழுது அப்பொழுது வரம் என்கிற அடையாளத்தை பார்க்கிறோம். ஆவியானவர் நமக்குள் இறங்கின உடனே அடையாளங்கள் அல்லது வரங்களினாலே கர்த்தர் அலங்கரிப்பார். இதுவே அபிஷேகத்தின் நிச்சயம்.

.
உங்களை எந்த நோக்கத்தோடு கர்த்தர் அழைத்திருக்கிறாரோ அதற்கு ஏற்றாற் போல் அவர் அபிஷேகித்து வரங்களையும் இலவசமாக தருவார். மேலும் வரங்களை நீங்கள் கர்த்தரிடத்திலிருந்து கேட்டும் பெற்றுக் கொள்ளலாம்.

.
2 கொரிந்தியர் 12 ம் அதிகாரத்தில் அநேக வரங்களை நாம் பார்க்க முடியும். இதில் ஏதாவது ஒரு வரமோ அல்லது அதிகமான வரங்களோ உங்களிடத்தில் கர்த்தர் கிருபையாக கொடுத்திருப்பாரேயானால் நீங்கள் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறீர்கள் என்பது உறுதி.
வரங்கள்;;;
¨ ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும்,
¨ ஆவியினாலே அறிவை உணர்த்தும் வசனமும்,
¨ ஆவியினாலே விசுவாசமும்
¨ ஆவியினாலே குணமாக்கும் வரங்களும்,
¨ அற்புதங்களைச் செய்யும் சக்தியும்
¨ தீர்க்கதரிசனம் உரைத்தலும்
¨ ஆவிகளைப் பகுத்தறிதலும்
¨ பற்பல பாஷைகளைப் பேசுதலும்
¨ பாஷைகளை வியாக்கியானம் பண்ணுதலும்

.

அந்நிய பாஷை குறித்தே பேசுகிறார்களே???
இப்பொழுது உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும் என்பதை நாம்; விசுவாசிக்கிறோம். பொதுவாக அந்நியபாஷை உங்களுக்கு இருந்தால் தான் நீங்கள் அபிஷேகம் பண்ணப்பட்டீர்கள் என்பது சரியானது அல்ல. அந்நிய பாஷை இல்லாமலும் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களும் உண்டு. ஒரு வேளை நீங்கள் கேட்கலாம். ஏன் எல்லாரும் அந்நிய பாஷை குறித்தே பேசுகிறார்கள்???? அல்லது அதற்கே ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்???

.
அருமையானவர்களே! அந்நிய பாஷை உங்களுடைய பக்தியை விருத்தி(பெருக்கும்) அடைய செய்யும். என்னுடைய தனிப்பட்ட ஜீவிதத்தின் அனுபவம் என்னவென்றால் அந்நிய பாஷையின் வரத்தை பெற்றுக்கொண்ட பிற்பாடு ஆண்டவரோடு அதிக நேரம் செலவிட கர்த்தர் கிருபை செய்தார். ஆகவே அந்நிய பாஷையை வேண்டாம் என்று யாரும் ஒதுக்க வேண்டாம். அதுவும் ஒரு அடையாளமாகவே இருக்கிறது. அதை தேவனிடத்தில் வாஞ்சித்து பெற்றுக்கொள்ளுங்கள். ஆனால் அந்நியபாஷை இல்லாமல் வேறு ஏதாவது வரங்கள் கர்த்தர் கொடுத்திருப்பாரேயானால் அவர்கள் அபிஷேகம் பெறவில்லை என்று தாழ்வாக நினைக்க வேண்டாம்.

.

 யாரால் நடத்தப்படுகிறீர்கள்?

  இந்த நாட்களிலே அபிஷேகம்பண்ணப்பட்டோம் என்று சொல்லுகிற உங்கள் ஒவ்வொருவரையும் யாரால் நடத்தப்படுகிறீர் என்பது மிக முக்கியம்.

1. நாமே நம்மை நடத்துகிறோமா?
2. மற்றவர்கள் நம்மை நடத்துகிறார்களா?
3. தேவ ஆவியானவர் நம்மை நடத்துகிறாரா?

என்ற கேள்வியை உங்கள் உள்ளத்தில் கேட்டு பாருங்கள். முதல் இரண்டு கேள்விக்கும் இல்லை என்றும் மூன்றாவது கேள்விக்கு ஆம் என்றால் நீங்கள் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள்;. ‘கர்த்தருக்கு ஸ்தோத்திரம்’ அபிஷேகம் பண்ணப்பட்டவர்களுக்கு குழப்பங்களோ, சந்தேகங்களுக்கோ வாய்ப்பே இல்லை. தேவ ஆவியானவர் சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவாராக! ஆமென்.

.
1. இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றிருக்க வேண்டும்.
முன்னே துhரமாக இருந்த நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் சமீபமாகி அவருடைய பிள்ளையாக மாற வேண்டும். அப்பொழுது சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணம் உள்ளவர்களாயிருக்கிறீர்கள். கொலே 2:10

.
2. பாவங்களை விட்டுவிட வேண்டும்.
இரட்சிக்கப்பட்ட நாம் அனுதினமும் நம்மை சந்;திக்கும் பாவத்தை மேற்கொள்ள வேண்டும். ஒருவேளை நாம் தவறி பாவத்தோடு உடன்பட்டால் அந்த பாவங்களை அறிக்கை செய்து விட்டுவிட வேண்டும். “நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.(1யோவ1:8).
பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். அப் 2:38

.
3. உலகத்திற்கு முன்பாக அறிக்கை செய்ய வேண்டும்.
நாம் உலகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவன் என்பதை உலகம் அறியும் வண்ணம் நாம் நம் நடைமுறையில் காட்டி ஆண்டவர் பிள்ளை என்பதை அறிக்கை செய்ய வேண்டும். “கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். ரோம 10;:9 நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருக்கக்கடவோம். எபி4:14

.
4. கீழ்படிதல்
வேதம் சொல்லுகிறது. பரிசுத்த ஆவியால் நடத்தப்படுகிறவன் அவருடைய பிள்ளையாக இருக்கிறான். அப்படியென்றால் கீழ்படிகிறவர்களாக இருக்க வேண்டும். “தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்தஆவியும் சாட்சி என்றார்கள். அப் 5:32”

.
5. தாகம்
தாகமே பானம் பண்ணுவதற்கு ஆதாரமாக இருக்கிறது. யோவ7:37-38 ல்“இயேசு நின்று, சத்த மிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்;.

.
6. கேளுங்கள்
தாகத்தோடு ஆண்டவரிடத்தில் கேளுங்கள் பெற்றுக்கொள்வீர்கள். “பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார். லுhக் 11:13”

.
7: விசுவாசம்
முழுவிசுவாசத்தோடு ஜெபிக்கும்பொழுது பெற்றுக்கொள்வீர்கள். மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார். மத்-21:22
பாவங்களை அறிக்கையிட்டு கர்த்தருடைய கட்டளைகளுக்கு கீழ்படிந்து தாகத்தோடு எதிர்பார்ப்போடு உங்களை முழுவதும் அர்ப்பணித்து உண்மையாக கேட்போமானால் கர்த்தர் நிச்சயமாக உங்களை அபிஷேகிப்பார்.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]