CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

அவள் மனம் கசந்து மிகவும் அழுது கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினாள். (1சாமு 1-10)

அவள் மனம் கசந்து மிகவும் அழுது கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினாள். (1சாமு 1-10)

அன்னாள் மனம் உடைந்து வேதனைப்பட்டு சக்களத்தியினால் அவமானப்பட்டு குழந்தைப் பாக்கியம் இல்லை என்று கண் கலங்கினாள். எல்கானாவாகிய அவளது கணவர் இரண்டாவது மனைவி பெனினாளையும், பத்துப்பிள்ளைகளைப் பார்க்கிலும் அதிகபாசம் உள்ளவனாக இருந்தார். பெனினாளுக்கு, பிள்ளைகளுக்கும் ஒரு மடங்குகொடுத்தால், அன்னாளுக்கு இரண்டு மடங்கு கொடுப்பார். ஆனால் அன்னாளுக்கு தனக்கு குழந்தை இல்லை என்றவேதனை பெருமூச்சாகவும், ஆறாத்துயராகவும் கண்ணீருடன் இருந்து. பிள்ளைப் பாக்கியம் எனக்கில்லையே என்ற வேதனையுடன் தனது உயிரை தற்கொலை செய்யப்போவதில்லை மாறாக தேவனுடைய ஆலயத்திற்கு ஓடினாள். அங்கே சந்நிதானத்தில் அமர்ந்திருந்து கண்ணீரோடு அழுது அழுது முழங்கால் படியிட்டு சத்தம் வெளிவராமல் மௌனமாக ஜெபித்தாள். தன் மனப்பாரங்களை ஆண்டவரின் பாதத்தில் கண்ணீரால் ஜெபத்தோடு ஊற்றினாள்.

அவள் மனம் கசந்து “சேனைகளின் கர்த்தாவே தேவரீர் உமது அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப்பார்த்து உம்முடைய அடியாளை மறவாமல் நினைத்தருளி உமது அடியானுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால் அவன் உயிரோடு இருக்கும் நாள் வரைக்கும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன். அவன் தலையின் மேல் சவரகன்கத்தி படுவதில்லை. என்று கண்ணீரோடு கதறி அழுது பொருத்தானை பண்ணினாள். (1சாமு 1-11) அன்னாளின் கண்ணீர் ஜெபத்திற்கு கர்த்தர் பதில் கொடுத்தார். ஆமென்.

அன்பான கிறிஸ்தவத் தாய்மார்களே? இன்று நாங்கள் எங்கே இருக்கிறோம். அன்று எஸ்தர் தன்னுடைய இனம் அழியக்கூடாது என்று உபவாசம் இருந்தாள். ரூத் தனது கணவரின் தாய் நகோமி (மாமி) அந்த வயோதிப தாய்க்காக வாலிபப்பிள்ளையான ரூத் தியாகத்தோடு கவனித்தாள். இப்படி வேதாகமத்தில் எத்தனை பெண்மணிகள் தாகத்துடன், விசுவாசத்துடன் நடந்த சம்பவங்கள் எத்தனை. இன்றைய காலகட்டத்தில் நாட்டில் எவ்வளவு வன்முறைகள் சொல்லி அடங்காது. எங்கள் தேசத்திலே நடக்கும் பாதகமான கெட்ட நடவடிக்கைகளை மாற்ற தேவ பக்தி தான் எங்களுக்கு உதவிபுரியும். தேவனின் தேவசித்தத்தைக்கேட்டு எங்கள் குடும்ப ஜெபத்துடன் 24 மணி நேரத்தில் ஒரு சிறு மணித்துளிகளை சேமித்து ஜெபிப்போம். முழு ஆத்துமாவும் இரட்சிக்கப்பட வேண்டும். கர்த்தரின் நாமம்  மாத்திரமே உயர்த்தப்பட வேண்டும். உலகம் முழுவதும் மனமாற்றம் அடைந்து விக்கிரகவழிபாடு எல்லாம் அழிக்கப்பட வேண்டும். இயேசப்பாவின் வருகையிலே புதிய மாற்றம் வரும். விசுவாசத்துடன் யாக்கோபு நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன். (ஆதி 32:26) அவனுடைய தொடைச் சந்து சுழுக்கிவிட்டதால் இயலாமல் இருந்தபோதிலும், தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெறவேண்டும். என்று உள்ளான இருதயத்தில் வந்த உணர்வு யாக்கோபு போராடி ஜெபித்தான். ஆம் பிரியமானவர்களே, யாக்கோபிற்குக் கிடைத்த ஆசீர்வாதம் தேவனை முகமுகமாகக் கண்டான். (ஆதி 32:30)

நிச்சயம் வெற்றி தருவார். தாவீதின் குமாரனே எனக்கிரங்கும் என் மகன் பிசாசினால் கொடிய வேதனைப் படுகின்றான் என்று சொல்லிக் கூப்பிட்டாள். (மத் 15:22) தீரு சீதோன் பட்டணத்தில் குடியிருந்து கானானிய ஸ்திரி அற்புதத்தை வேண்டி கண்ணீரோடு கதறினாள்.

இயேசு சுவாமி அவளுக்கு பதில் ஒன்றும் கூறவில்லை. அப்படி இருந்தும் அவள் அவரைத் தொடர்ந்து போய்க் கொண்டே இருந்தாள். பிள்ளைகளின் அப்பம் இல்லாவிட்டாலும் கீழ் விழுந்த உணவுகளில் தூள்களாவது எங்களுக்கு போதும் என்ற நிலைக்குத் தன்னைத் தாழ்த்தியவள். தான் விசுவாசத்தபடியே பெற்றுக்கொண்டாள்.      (மத் 14:27) ஆம் அருமையான தாய்மார்களே நாம் தேவசித்தத்துக்குள் நின்றுகொண்டு விசுவாசத்துடன் உறுதியாக ஜெபிக்கும் போது நம்முடைய வாழ்விலும் பெரியகாரியம் செய்வார். ஜெபிக்கமுடியாத பல சூழ்நிலை வந்தாலும் அது தடையாக இருந்தாலும் ஜெபித்துப் பலனில்லை என்று சோர்ந்து போகும் நிலைமை ஏற்பட்டாலும் நாம் தேவ பாதத்தை உறுதியாக பற்றி விசுவாசந்தளராதபடி காத்திருப்போமாக. நமது தேவையை அறிந்த ஆண்டவர் நமக்கு நன்மை உண்டாக சகலத்தையும் வெற்றியாக்குவார். ஆனால் தேவசித்தப்படி ஜெபிக்கிறோமா என்பதில் கவனமாய் இருக்க வேண்டும். சர்வ வல்லவர் ஒருவரே நமது வாழ்க்கையை முற்றாக அறிந்தவர். கானானில் வேவு பார்க்க வந்த பன்னிரண்டு கோத்திரங்களிலும் பன்னிரண்டுபேர் தெரிந்து எடுக்கப்பட்டனர். அவர்களில் பத்துப்பேர் துர்ச்செய்தியும், இரண்டுபேர் மட்டுமே நல்ல செய்தியும் கொண்டு வந்தனர். அந்த இருவரும் யார் காலேப்பும், யோசுவாவுமே, காலேப் தன் முழு இருதயத்தோடு விசுவாசித்தான் . கானானில் பெரிய பலமுள்ள ராட்சதர்களைக் கண்டான். அவர்களை எதிர்த்து போராட முடியும் என்ற நம்பிக்கை கொண்டான். எப்படி என்று பாருங்கள் உறுதியான விசுவாசம் கர்த்தர் நம்மோடு இருக்கிறார். (எண் 14:9) இதுதான் காலேப் கர்த்தருடன் வைத்திருந்த நம்பிக்கையின் இரகசியம். மற்ற 10 பேரும் அங்கே போனால் அழிந்து போவோம் என்று துர்ச்செய்தியைப் பரப்பினார்கள். அதனால் பயத்தோடு நின்ற மக்களிடம் நாம் உடனே அதைச்சுதந்தரித்துக் கொள்ளலாம். (எண் 13:30) என்று தைரியப்படுத்தியவர் இந்த காலேப்தான். இந்த விசுவாசமும், மனத்தைரியமும் காலேப்புக்கு இருந்த படியால்தான் 40 வயதில் அவரிடம் இருந்த பெலன் எண்பத்தைந்து வயதிலும் இருந்தது. யுத்தத்துக்குப் போக்கும், வரத்துமாயிருந்தார். அவர் விசுவாசித்தார் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டார். (யோ 14:10) மெய் விசுவாசத்துடன் கர்த்தரை உத்தமமாய் பற்றிக் கொண்டு வாழும் வாழ்வு என்றும் ஆரோக்கியமும், நன்மையும் கொண்டு வரும். யார் என்ன ஆலோசனை கூறினாலும், அது வேதவாக்கியங்களுக்கு ஏற்றபடி இருக்கின்றதா என்று நாம் ஆராய்ந்து நல்லவற்றைப் பற்றிக் கொள்வதே சரியான வழி (1தெச 5:21) இவ்வித மனப்பாங்குடன் வாழும்போது மலைபோல் தோன்றும் எந்தப் பிரச்சனைகளும் பனியைப்போல மறைவதைக் காணலாம். கர்த்தரை விசுவாசித்து உண்மையாக அவரைக் கிட்டி சேர்ந்து வாழும் போது கர்த்தர் நிச்சயமாய் நம்மையும் ஆசீர்வதிப்பார். எங்களை வாலாக்காமல் தலையாக்குவார்.