[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]
கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே,
மீண்டும் இம்மலரின் மூலம் உங்களை சந்திக்க தேவன் தந்த தருணத்திற்காக கர்த்தரைத் துதிக்கிறோம். வாழ வைக்கும் அவர் நாமத்தில் இவ்வருடத்தின் 75 சதவீத நேரத்தை கழித்துவிட்டோம். நாம் கடந்த காலங்களில் கடந்து சென்ற பாதையில் கர்த்தருக்காக எப்படி வாழ்ந்தோம் என்பதை நாம் ஆராய்ந்த பார்ப்பது நலம்.
- நம்மை உய்த்து ஆராய்ந்து சோதிப்பது (செப் 2:2)
- கர்த்தரை வேதனைப்படுத்தும் வழிகள் உண்டோ என்று ஆராய்வது. (சங் 139:24)
- கர்த்தருக்குப் பிரியமானது இன்னது என்பதை சோதிப்பது (எபே 5:10)
- நம்மை நாமே நிதானித்து அறிவது (1கொரி 11:31) போன்ற காரியங்களை நாம் செய்வது நலம்
ஆராயப்படாத வழிகளை உடைய தேவன் (ரோமர் 11:33,தானி 12:5b) நம்மை நாமே, நமது வழிகளை ஆராய்ந்து பார்க்க சொல்வது எத்தனை மேன்மை. கர்த்தருக்குப் பயந்து கர்த்தரின் பரிசுத்த, பக்குவபண்புகளில் நடப்போருக்கு தேவன் ஆயத்தம் பண்ணிக்கொண்டிருப்பதும், ஆயத்தப்படுத்தி வைத்திருப்பதும் ஆச்சரியமல்லவா? (யோவான் 14:3, கொரி 2:9-11, 1சாமு 9:24) தீர்க்கதரிசிகள் தேவன் நமக்கு வைத்திருக்கும் இரட்சிப்பை கருத்தாய் ஆராய்ந்தார்கள் (1பேதுரு 1:11) கிறிஸ்துவின் காலத்தில் விசேஷம் இன்னதென்பதை ஆராய்ந்தார்கள். வேத வாக்கியங்களை நாம் ஆராய்ந்து பார்த்தால் எத்தனை அதிகமாய் நித்திய ஜீவனை அறிந்து கொள்ளமுடியும். (யோவான் 5:39) நமது வாழ்க்கையில் திருப்தியானதினால் மாத்திரம் கர்த்தரைத் தேடுகிறோமா? அல்லது நித்திய ஜீவன் வரை நிலைநிற்கிற காரியங்களுக்காக கர்த்தரைத் தேடுகிறோமா? (யோவான் 6:27)
எங்கும் குழப்பமா, குளறுபடியா, குற்றச்சாட்டா? கலங்காதிருங்கள் தேவனுக்கு பயப்படுவோரை தேவன் காப்பார். (பிர 7:16-18) வழுவாதபடி காப்பார். (யூதா 24) எல்லா தீமைக்கும் விலக்கி காப்பார். (சங் 121:7-8) ஆசீர்வதித்து காப்பார் (எண் 6.24) யோசேப்பை போன்ற உங்களுக்கு எத்தனை பிசாசும், மனிதரும் தீமை செய்ய நினைத்தாலும் தேவன் அனுமதிக்கும் தீமையே உங்களை நெருங்க முடியும். அத்தீமையையும் தேவன் நன்மையாக முடியப்பண்ணுவார். (ஆதி 50:20)
யோசனையில் பெரியவர் செயல்களில் வல்லவர் உங்களுக்காக, உங்களைக் கொண்டு செய்ய நினைத்தது தடைபடாது. அவர் சகலமும் செய்ய வல்லவர் (யோபு 42:2) அறிவில்லாத வார்த்தைகளால் ஆலோசனையை
- அந்தகாரப்படுத்துகிற மனிதரை (யோபு 38:2)
- ஆலோசனையை மறைக்கிற (யோபு 42:2) மனிதரைக் குறித்து கவனமாய், விழிப்பாய், எச்சரிக்கையாயிருங்கள்.
என்ன வந்தாலும், எது நடந்தாலும், எந்த சூழ்நிலையிலும் எந்தக்காலத்திலும் கர்த்தரைத்தேடும் தேவப்பிள்ளையே வெற்றி உங்களுக்கே (நீதி 21.30,31) துர்ச்செய்தி கேட்கிறதினால் பயப்படாதிருங்கள். உங்கள் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும். (சங் 112:7-9) ஆமென்.
[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]