CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

ஆழ குழிதோண்டி!!!

ஆழ குழிதோண்டி!!!

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

ஆழ குழிதோண்டி ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை அது என்ன? என்று ஒரு விடுகதையை முன்வைத்தாள் ஜோஸி… ராணிக்கு தெரியவில்லை.. ஆனாலும் ஜோஸி விட்ட பாடில்லை.. சற்று நேரம்கொடுத்து யோசிக்க சொன்னாள்.. ராணியும் யோசித்து யோசித்து பார்த்துவிட்டு ளழசசல னய எனக்கு தெரியவில்லை என்றாள்..

.
இதுகூட தெரியவில்லையா என்று சொல்லிவிட்டு இங்க பாருமா வேறு ஒன்றும் இல்ல…. தேங்காய் தான்.. ஆழ குழி தோண்டி ஒரே ஒரு தேங்காயைதான் வைக்கிறார்கள்… அது காய்க்கும் பருவத்தில் குலை குலையாய் காய்த்து தொங்குகிறது.. இப்பம் புரிந்ததா என்றாள். ச்சீ ச்சீ நான் ஒரு டீயூப் லைட் என்று தலையில் தட்டிக்கொண்டாள் ராணி..

.
இது விடுகதையாக இருந்தாலும் யோசிக்க வேண்டிய சில காரியங்களும் இருக்கதான் செய்கிறது..
ஆழ குழிதோண்டி வைக்கப்பட்ட அந்த தேங்காய் முதலாவது நிலத்தில் விழுந்து செத்து முளையை உண்டாக்குகிறது என்பதை நாம் மறந்து போகக்கூடாது.. கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும். யோவ 12:24.

.
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு ஞானஸ்நானம் எடுத்த ஒவ்வோருவரும் அவருக்குள்ளாக மரித்து அடக்கம்பண்ணப்பட்டு உயிரோடு எழும்புகிற புதிய ஜீவனாக இருக்கிறோம். ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. கொலோ 3:3
கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன். ஏசா-27:3

.
1. ஆமா அனுதினமும் நாம் ஜெபிக்கும் பொழுது பரிசுத்த ஆவியாலே நிரம்பி அவருடைய பிரசன்னத்திற்குள்ளாக வைத்து காத்துக்கொள்ளுவார்.
2. உண்மையாகவே கர்த்தருடைய வர்த்தையை தியானிக்கும்பொழுது.. அவருடைய வார்த்தையை அனுப்பி நம்மை சுத்திகரிப்பார்.
“கனிகொடுக்கிற கொடிஎதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்”. யோவ 15:2
இப்படியாக ஒரு விதையின் மாமிசம் அழுகி அதன் முளை வந்த பிற்பாடு அதற்கு தண்ணீர் பாய்ச்சி அதை சுத்திகரித்து அதற்கு உரம் போடும்பொழுது.. அது வளர்ந்து தொண்ணூறு அல்ல.. நூறு முட்டைகளை தருகிறது. இதனால் நம்மை உண்டாக்கின தேவன் மகிமைப்படுகிறார்.
நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதனால் என் பிதா மகிமைப்படுவார்,
3. இதுவே தேவனுக்கு உகந்த ஆராதனையாக மாறுகிறது.
உலகத்தில் தேவனுக்கு ஆராதானை செலுத்தும்படி யாக ஜனங்கள் எத்தனை யோ முறைகளை கையாளுகிறார்கள்….

.
ஆனாலும் நம்மை படைத்த தேவன் பார்ப்பதெல்லாம் நம்முடைய ஜீவிதமே…
நம்முடைய வாழ்க்கையைப் பார்த்து தேவன் மகிழ்வாரானால் அதுவே தேவனுக்கு அதிக மகிமையை கொண்டு வருகிறது
.
தேவன்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]