CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

ஆவியானவரின் ஆச்சரிய உதவி

ஆவியானவரின் ஆச்சரிய உதவி

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

அந்தபடியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர் தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார். (ரோமர் 8:26)

ஜெபம் என்பது அபிஷேகம்:

நீங்கள் ஜெபவீரர்களாக வேண்டுமா? உங்களுடைய ஜெபங்கள் வல்லமையுள்ளதாய் இருக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் நீங்கள் அறிந்திருக்கவேண்டிய முக்கிய விஷயம், ‘ஜெபம், ஒரு அபிஷேகம்’ என்பதை தான். இந்த அபிஷேகத்தை நாம் பெற்றுக்கொண்டு அதில் தேறினவர்களாகும் பொழுது ஜெப வீரர்களாக மாறுகிறோம்.

அநேகர் பல மணிநேரங்கள் ஜெபிக்க தீர்மானம் எடுக்கிறார்கள். பின்பு தங்கள் சொந்த பலத்தினால் ஜெபிக்க முயற்சித்து தோற்றுப்போகிறார்கள். அதனால் சோர்வடைந்து நம்மால் இதெல்லாம் முடியாது என தீர்மனித்து விடுகிறார்கள். இன்னும் பலருக்கு ஜெபம் என்பது பாறையில் தலையை மோதுவது போன்ற அனுபவத்தை ஏற்படுத்துகிறது. சிலர் ஒரு மணி நேரம் ஜெபித்து முடிப்பதற்குள் அறுபது முறை கடிகாரத்தை பார்ப்பார்கள்.

ஆனால் நாம் ஜெப அபிஷேகத்தோடு ஜெபித்தால் பல மணிநேரங்கள் ஜெபித்த பிறகும் ஏதோ சில நிமிடங்கள் மட்டுமே ஜெபித்ததுபோலத் தோன்றும். இந்த அபிஷேகம் நம்முடைய இருதயத்தில் தணியாத பசிதாகத்தை உண்டாக்கும். அப்பொழுது நம்மை யாரும் ஜெபிக்க தூண்டவேண்டியது ஏற்படாது. அது மட்டுமில்லாமல் ஜெப அபிஷேகத்தோடு ஜெபிக்கும்பொழுது ஜெபம் நமக்கு கடமையாய் அல்ல களிப்பாய் இருக்கும். பாரமாய் அல்ல பரவசமாய் இருக்கும்.

இயேசு தம்முடைய சீஷர்களுக்கு ஜெபத்தைப்பற்றி பல விஷயங்களைப் போதிப்பதை லூக்கா11ம் அதிகாரத்தில் நாம் வாசிக்கலாம். அப்படி ஜெபத்தைப் பற்றி போதிக்கும்பொழுது பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ள ஜெபிக்கும்படி சொல்லிக்கொடுக்கிறார். ஏனென்றால் பரிசுத்த ஆவியானவரின் துணையின்றி யாராலும் வல்லமையாய் ஜெபிக்க முடியாது.

“எனவே நான் தாவீதின் குடும்பத்தாரின் மேலும் எருசலேம் குடிகளின்  மேலும் கிருபையின் ஆவியையும், விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்….”(சகரியா 12:10) என ஆண்டவர் நமக்கு வாக்குப்பண்ணியுள்ளதை நாம் சுதந்தரிப்போம். விண்ணப்பங்களின் ஆவியை பெற்றுக்கொள்வதே நமது முதல் விண்ணப்பமாய் இருக்கட்டும்.

ஜெபிக்கத்தூண்டும் ஆவியானவர்:

பரிசுத்த ஆவியானவரின் முக்கியப் பணிகளில் ஒன்று நம்மை ஜெபிக்க தூண்டுவதுதான். அவர் நமக்குள் இருக்கும் பொழுது ஜெபிப்பது நமக்குக் கடினமாக இருக்காது. ஜெபிக்காமல் இருப்பது தான் கஷ்டமாக இருக்கும். அவர் நம்மிடத்தில் வந்து வாசம்பண்ணுவதே நம்மை ‘அப்பா பிதாவே’ என்று கூப்பிடப்பண்ணத்தான். ”…அப்பா பிதவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்” என்று (ரோமர் 8:15) – ல் வேதம் சொல்லுகிறது. ”நான் உங்களை திக்கற்றவர்களாக விடேன்” (யோவான் 14:18) என்று அவர் வாக்குப்பண்ணியிருக்கிறார்.

நம்முடைய அருமை இரட்சகர் இயேசுகிறிஸ்து தன்னுடைய ஊழியத்தைத் துவங்கும் முன்பு ஞானஸ்நானம் பெற யோர்தான் நதிக்கரையில் யோவான் ஸ்நானகனிடத்தில் வந்தார்.

“…இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம் பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது. பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல அவர்மேல் இறங்கினார்.” (லூக்கா 3:21,22)

இயேசுவை பரிசுத்த ஆவியானவர் நிறைத்தவுடன் செய்த முதல் பணி, அவரை உபசவாச ஜெபத்திற்காக வனாந்திரத்திற்கு அழைத்துச் சென்றதுதான். இங்கு நாம் கவனிக்க வேண்டியதுதான் என்னவென்றால், இயேசு பரிசுத்த ஆவியைப் பெறுவதற்காக நாற்பது நாட்கள் ஜெபிக்கவில்லை. ஆனால் பரிசுத்த ஆவியில் நிறைந்தவராய் வனாந்திரத்திற்கு சென்று நாற்பது நாட்கள் ஜெபித்தார். அதுதான் ஆவியானவரின் செயல். ஆம் அவர் நம்மை ஜெபிக்கத்தூண்டுகிறார்.

அப்போஸ்தலனாகிய பேதுரு இயேசுவோடு இருந்தபொழுது ஜெபத்தில் பலமுறை தோற்றும் போனவன். மறுரூபமலையிலும், கெத்செமனே தோட்டத்திலும் தூக்கம் அவனை மேற்கொண்டது. இயேசு அதிகாலையில் எழுந்து ஜெபிக்கச் சென்றுவிடுவார். தாமதமாக எழும் பேதுரு அவரைத் தேடிச் செல்வான். இவையெல்லாம் அபிஷேகம் பெறும் வரைதான்.

இயேசு பரிசுத்த ஆவியைப் பெறுவதற்காக நாற்பது நாட்கள் ஜெபிக்கவில்லை:

மேல் வீட்டறையில் ஆவியானவர் வந்திறங்கினார்.என்று அப் 2:1-ல் வாசிக்கிறோம். அப் 3:1-ல் பேதுருவும் யோவானும் தேவாலயத்திற்கு ஜெபவேளையில் ஜெபிக்க செல்வதை வாசிக்கலாம். என்னதோர் மாற்றம்! அதன் பின்பு பேதுரு ஒரு ஜெப வீரராக மாறிவிட்டார்.

“பேதுரு எல்லாரையும் வெளியே போகச் செய்து, முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி…..”    (அப் 9:40)

“….பேதுரு ஆறாம் மணிநேரத்திலும் ஜெபம்பண்ணும்படி மேல்வீட்டில் ஏறினான். (அப் 10:9) “நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவ வசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள்” (அப் 6:4) பின்பு ஜெபத்திலே சோர்ந்துபோன அதே பேதுரு அபிஷேகம் பெற்ற பின்பு “….ஜெபம் பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாக இருங்கள்”          (1 பேதுரு 4:7) என்று புத்தி சொல்லி எழுதுகிறார்.

ஆம், ஆவியானவர் நம்மை ஜெபிக்கத் தூண்டுகிறவர். அபிஷேகம் நம்மை விண்ணப்பிக்க வைக்கும்.

ஜெபத்தில் உதவும் ஆவியானவர்:

ஆவியானவர் ஜெபிக்க தூண்டுபவர் மட்டுமல்ல நமக்கு உதவுபவரும் கூட. அவர் சத்தியத்தைப் போதிப்பவர் மட்டுமல்ல அந்த சத்தியத்திற்குள் நம்மை நடத்துபவரும் அவரே.

“….நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர் தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார். ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின் படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால்…..” (ரோமர் 8:25,27)

மூன்று விதங்களில் ஆவியானவர் நமக்கு ஜெபத்தில் உதவி செய்கிறார். என்பதை பவுல் இங்கு குறிப்பிடுகிறார். ஆவியானவர் நமக்காக வேண்டுதல் செய்கிறார். தேவ சித்தத்தின் படி வேண்டுதல் செய்கிறார்.

முதலாவதாக, நமக்கு இருக்கும் மிகப்பெரிய பலவீனம் எப்படி ஜெபிப்பது என்று தெரியாததுதான். எனக்கு எல்லா விஷயத்திற்கும் சரியாய் ஜெபிக்கத்தெரியும் என்று யாராவது சொல்வார்களானால் அவர்களுக்கு ஆவியானவருடைய உதவி தேவையில்லை. ஆனால் அப்போஸ்தலனாகிய பவுல் “நமக்கு ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால்” என்று தன்னையும் சேர்த்துச் சொல்கிறார். குறிப்பிட்ட ஒரு காரியத்திற்காக எப்படி ஜெபிக்க வேண்டும்? என்ன ஜெபிக்க வேண்டும்? என்று புரியாதபொழுது அந்நியபாஷையில் ஜெபியுங்கள். ஏனென்றால் அந்நியபாஷையில் ஜெபிக்கிறபொழுது நாம் அல்ல ஆவியானவர் தாமே ஜெபிக்கிறார். அந்நிய பாஷையில் பேசும்பொழுது நாம் தேவனிடத்தில் பேசுவது மாத்திரமல்ல, தேவனாலேயே பேசுகிறோம். என்பது எத்தனை அற்புதமான காரியம்! நம்முடைய பலவீனத்தில் உதவி செய்யவே அவர் காத்திருக்கிறார்.

இரண்டாவதாக, ஆவியானவர் நமக்குள் இருந்து மற்ற பரிசுத்தவான்களுக்காக மன்றாடி ஜெபிக்கிறார். ஊக்கமான ஜெபம்தான் மிகவும் பலமுள்ளதாய் இருக்கும். ஆனால் சிலவேளைகளில் மற்றவர்களுக்காக ஜெபிக்கும்பொழுது நம்மால் அப்படி ஊக்கமானதொரு ஜெபத்தை செய்ய முடிகிறதில்லை. ஆனால் ஆவியானவர் ஜெபிக்கும்பொழுது ‘வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு’ வேண்டிக்கொள்கிறார்.

நம்முடைய சொந்த பாஷையில் ஜெபிக்கும்பொழுது அந்த வார்த்தையில் உள்ள வல்லமையின் அளவுதான் ஜெபத்திலும் வெளிப்படும். அதனால் ஜெபவல்லமையை ஒரு எல்லைக்குள் நாமே கட்டுப்படுத்தி வைக்கிறோம். ஆனால் நாம் அந்நியபாஷைகளில் பேசி ஜெபிக்கும்பொழுது மிகப்பெரிய வல்லமை வெளிப்படுகிறது.

மூன்றாவதாக நாம் அந்நிய பாஷைகளைப்பேசி ஜெபிக்கும்பொழுது தேவனுடைய சித்தத்தின்படி ஜெபிக்க முடிகிறது. அவர் இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறார். ஆவியின் சிந்தை இன்னதென்று அறிந்தவர். அவரைப்போல தேவனுடைய சித்தத்தை சரியாய் அறிந்தவர்கள் வேறுயாருமில்லை. “ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால்….” என்று எழுதப்பட்டுள்ளது. தேவனுடைய ஆழங்களை ஆவியானவர் அறிந்திருக்கிறபடியால் நாம் ஜெபிக்க வேண்டிய காரியத்திற்கு நூறு சதவீதம் சரியாய் ஜெபிக்க அவர் உதவி செய்கிறார். அவர் நமது நாவைப் பயன்படுத்தி நமக்காக தேவனுடைய சித்தத்தின்படியான ஜெபத்தைச் செய்கிறார். எனவேதான் அந்நியபாஷையில் பேசி ஜெபிக்கும்பொழுது அந்த ஜெபத்திற்குக் கட்டாயம் பதில் கிடைக்கும் என விசுவாசிக்கலாம். ஏனென்றால் “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்கு செவி கொடுக்கிறாரென்பதே அவரைப்பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்”(1யோவான் 5:14)

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]