[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]
ஊக்கமாக ஜெபிக்க வேண்டுமானால் பரிசுத்த ஆவியின் வல்லமையோடு நாம் ஜெபிக்க வேண்டும். ஏனென்றால் பரிசுத்த ஆவியோடு இணைந்து செய்யாத ஜெபம் மதிகேடானதாயும், மாய்மாலமானதாயும், குளிர்ந்த அனுபவத்தில் தகாத ஜெபமாயிருக்கும். பரிசுத்த ஆவியானவரின் உதவி அல்லாமல் தேவனுக்கு முன்பாக நம்முடைய ஜெபம் பரிதாபத்திற்குரியதாக இருக்கும். இயேசு “மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக, நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள்.” (மத் 23:14) என்று சொன்னார்.
தேவன் ஜெபத்தில் உங்கள் குரலின் தன்மையைக் கவனிப்பதில்லை, வெளித்தோற்றமான அன்பான வார்த்தைகளைக் கவனிக்கப்போவதில்லை. பரிசுத்த ஆவியானவருடைய உதவியோடு ஜெபம் இருக்கிறதா என்பதுதான் அவருக்கு முக்கியம். பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதல் அல்லாமல் மனிதன் அவனுடைய வார்த்தையையும், எண்ணங்களையும் காத்துக்கொள்ள முடியாது. ஆகவே இந்த நிலையில் சுத்தமான, தேவன் அங்கீகரிக்கத்தக்கதான ஜெபத்தை இயேசுகிறிஸ்வின் மூலமாக ஏறெடுக்க முடியாது. இந்த காரணத்தினால்தான் பரிசேயர்களுடைய ஜெபங்களை தேவன் நிராகரித்தார். பரிசேயர்கள் தங்களுடைய ஜெபங்களில் அநேக வார்த்தைகளால் அலப்பிக்கொண்டார்கள். அப்படிப்பட்ட ஜெபத்தில் நீண்ட நேரத்தைச் செலவழித்தனர். அவர்களுடைய ஜெபத்தில் பரிசுத்த ஆவியானவருடைய உதவி இல்லை. ஆகவே அவர்கள் தங்களுடைய பலவீனத்தோடுதான் ஜெபித்தார்கள். அவர்களுடைய ஜெபம் மனப்பூர்வமின்றி, உள்ளுணர்வின்றி, உள்ளன்பின்றி, தங்களுடைய ஆத்துமாவை தேவனிடத்தில் ஊற்றிவிடும் அனுபவமின்றி, பரிசுத்த ஆவியின் பலமுமின்றி இருந்தது.
ஜெபம் பரலோகத்திற்கு ஏறிச்செல்ல வேண்டுமானால் பரிசுத்த ஆவியானவர் மூலம் அது அனுப்பப்பட்டால்தான் அது அங்கு சென்றடையும். அப்படிப்பட்ட ஜெபம் மாத்திரமே ஊக்கமான ஜெபம்.
ஒரு மனிதனுடைய ஜெபம் சரியானதாக இல்லை என்பதை சுட்டிக்காட்டி சரிசெய்ய உதவுவது பரிசுத்த ஆவியானவர் தான். அநேகருடைய ஜெபங்கள் உதட்டளவிலேயே உள்ளதாக இருக்கின்றன. பாவத்தின் விளைவாகிய பரிதபிக்கதக்க நிலை இருதயத்தில் இருக்கும் வரை அந்த ஜெபம் மாய்மாலமானதாகவே இருக்கும். ஆகவே பரிசுத்த ஆவியானவர் இருதயத்திலிருக்கும் பாவத்தையும் அதன் விளைவாகிய பரிதபிக்கும் நிலையையும் சுட்டிக்காட்டி உணர்த்துவார். அவ்வாறு உணர்த்தப்படும் போது சரி செய்து கொண்டால் நம்முடைய ஜெபம் இயேசுகிறிஸ்துவின் மூலமாக அங்கீகரிக்க கூடியதாக மாறும். அப்பொழுது அது உள்ளுணர்வும், உள்ளன்புமுள்ள தேவனுடைய வார்த்தைக்கு ஏற்புள்ள ஜெபமாகும். இயேசு அளித்த வாக்குத்தத்தம் என்னவெனில்
“நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தை கண்டித்து உணர்த்துவார். அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக் குறித்தும், நீங்கள் இனி என்னைக்காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும், இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக் குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.” (யோவான் 16:7-11)
பொதுவாக மக்கள் தங்களிலுள்ள பாவத்தைக் காணும்பொழுது அவர்களால் ஜெபிக்க முடியாது. ஏனெனில் பரிசுத்த ஆவியானவரின் உதவி அவர்களுக்கு இல்லை. ஆகவே தேவனை விட்டு, விரக்திநிலையில் ஒடிவிடுவார்கள். இதே நிலை தான் ஆதாம், ஏவாள், காயீன், யூதாஸ் இவர்களுக்கு ஏற்பட்டது. தன்னிலுள்ள பாவத்தைக்குறித்த உணர்வும் தேவனுடைய சாபத்தைக் குறித்த உணர்வும் ஒரு மனிதனில் இருக்கும்வரை அவனால் ஜெபிக்கமுடியாது. அவனை ஜெபிக்க வைக்க என்ன முயற்சி எடுத்தாலும் ஜெபிக்க முடிவதில்லை. பரிசுத்த ஆவியானவரின் தாக்கம் அல்லாமல் ஒரு பாவி சொல்லுகிற காரியம் “அது கூடாத காரியம், நாங்கள் எங்கள் யோசனையின்படியே நடந்து, அவரவர் தம்தம் பொல்லாத இருதயத்தினுடைய கடினத்தின்படியே செய்வோம் என்கிறார்கள்.” (எரே 18:12) பாவியாகிய ஒரு மனிதன், பொதுவாக ஒரு முடிவுக்கு வருகிறான். “நான் ஒரு பொல்லாதவன், பரிதாபத்திற்குரியவன், ஆகவே ஒரு சபிக்கப்பட்ட ஜீவன். தேவன் என்னை ஒருபோதும் கண்டுகொள்ளவேமாட்டார்” என்று தான் அவன் சிந்தித்துக் கொள்ளுகிறான். ஆனால் பரிசுத்த ஆவியானவர் வந்து இந்த எண்ணத்தை மாற்றுகிறார். அவனுடைய இருதயத்தில் இரக்கத்தின் மனபான்மையை உருவாக்கி உற்சாகப்படுத்தி தேவனை நோக்கிப்பார்க்கச் செய்கிறார். இந்த காரணத்திற்காகத்தான் பரிசுத்த ஆவியானவரை “தேற்றரவாளன்” என்று அழைக்கின்றோம்.
ஜெபம்:
அன்பின் பரலோக பிதாவே, என்னுடைய வாழ்க்கையில் நீர் செய்கிற செயல்களைக்குறித்து அறிந்து கொள்ளாத குருடனாயிருக்கிறபடியால் என்னை மன்னியும். உம்மை நான் மகிமைப்படுத்தவில்லை என்பதை நான் அறிக்கை செய்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவர் செய்யும் ஆச்சரியமான செயல்களை இப்பொழுது நான் விளங்கிக்கொண்டேன். நீர் அன்புள்ள, கிருபை நிறைந்த தேவன் என்பதை அறிந்து கொள்ளத்தவறிவிட்ட என்னை மன்னியும். உம்மைப்பற்றிய சிந்தனையற்றவனாக நான் இருளிலே வாழ்ந்தாலும் பரிசுத்த ஆவியானவரை என்னிலே அனுப்பி என்னுடைய வாழ்க்கையில் வெளிச்சத்தைப் பிரவேசிக்கச் செய்தபடியால் நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். என்னுடைய ஜீவியத்தில் நீர் செய்த மகத்தான காரியங்களை அந்த நற்செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு உம்மை கனப்படுத்துகிறேன். பாவியாயிருக்கையில் பரிசுத்த ஆவியானவர் வந்து முறையாக ஜெபிக்க கற்றுத்தந்து உம்மோடு ஐக்கியம் கொள்ள உதவி செய்த படியால் நான் நன்றி செலுத்துகிறேன். ஆமென்.
[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]