[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]
“பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் பாத்திரமானது” (1 தீமோத்தேயு 1:15)
அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதிய மேற்கண்ட வசனத்தை எமது வாழ்நாளில் பல தடவைகள் கேட்டு அறிந்திருந்தாலும், இவ்வசனமே கிறிஸ்து இயேசுவின் இவ்வுலகுக்கான சுவிசேஷத்தின் சுருக்கம் என்பதை பலதடவை சிந்திக்கத் தவறிவிடுகிறோம். கிறிஸ்துவானவர் ஒரு சமயத்தை உருவாக்கவோ அழிந்து போகும் உலகில் தமக்கென ஒரு பெயரை நிலைநாட்டவோ இந்த உலகத்திற்குள் அவதரிக்கவில்லை. மாறாக உலகத்தில் வாழும் பாவிகளாகிய மக்களை மீட்டு இரட்சிக்கவே வந்தார். “இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்கு தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.” என்று காபிரியேல் தூதனால் கூறப்பட்ட செய்தி ஒரு சந்தோஷத்தின் செய்தியாக இருப்பினும், மறுபக்கம் விசுவாசிகளாகிய ஒவ்வொரு வரும் துக்கத்தோடு சிந்திக்க வேண்டிய செய்தியும் கூட. ஏனெனில் நாம் பெற்றுக் கொண்ட அந்த மீட்பைப் பெற்றுக் கொள்ளாமல் அன்றாடம் மரித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு ஆத்துமாவுக்காகவும் துக்கப்படாமல் எப்படி இருக்க முடியும்?
ஒருவர் தன்னை மீட்கப்பட்டவர் என்று கூறியும் ஆத்துமா பாரமற்று இருப்பாராயின் அவரை எவ்வாறு விசுவாசி என்று கூறிக்கொள்ள முடியும்? இதைக் குறித்து கர்த்தருடைய வார்த்தை இவ்வாறாகக் கூறுகிறது, “முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும், அடையாளங்களினாலும் பல விதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்து கொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படி தப்பித்துக் கொள்வோம்” (எபிரெயர் 2:3-4)
தமது பிறப்பின் மூலமாக நித்திய வாழ்வின் நிச்சயத்தை அவருடைய பிள்ளைகளாகிய எமக்குத் தந்த எமது அன்பான தேவனுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்? பல விதமான சிறையிருப்புக்களின் பிடியில் அகப்பட்டு, அதிலிருந்து வெளிவரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் எமது சகோதரர்களுக்காக நாம் எதைசெய்யப்போகிறோம்? வாழ்வைக் குறித்து கலக்கத்துடன் இருக்கும் ஒருவரின் உள்ளம் தனது விடுதலையைக் குறித்து எவ்வாறு ஆவலோடு எதிர்பார்க்குமோ, அதே ஏக்கத்தோடு இன்று பல உள்ளங்கள் எம்மைச்சுற்றிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நாம் பெற்றுக் கொண்ட இரட்சிப்பைக் குறித்து மேன்மை பாராட்டுவதை விடுத்து, நாள்தோறும் மீட்பைக் காணாமல் நித்திய ஆக்கினைக்குள் பிரவேசித்துக் கொண்டிருக்கும் ஆத்துமாக்களுக்காக தாகத்தோடு உழைக்க, அவர்களை இரட்சிப்பின் தேவனிடம் கொண்டு சேர்க்கும் கருவிகளாக மாற நம்மை அர்ப்பணிப்போமாக!
[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]