CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

இரத்தசாட்சிகள் சிம்போரோசாவும் ஏழு பிள்ளைகளும்

இரத்தசாட்சிகள் சிம்போரோசாவும் ஏழு பிள்ளைகளும்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

விசுவாசத்தின் பலியாடுகள்

மகனே நான் எனது விசுவாசக் கண்களை உயர்த்திப் பார்க்கும் இந்த நேரத்தில் உனது ஆறு சகோதரர்களும் பரலோகத்தில் இருப்பதைப் பார்க்கிறேன். நீயும் அங்கு போய்ச் சேருவாய் என நான் விசுவாசிக்கிறேன். கூடிய சீக்கிரம் நானும் அங்கே உங்களுடன் வந்து சேர்வேன். இது தனது இளைய மகன் உமியில் எரிந்து கொண்டிருக்கும் போது சிம்போரோசா என்ற வீரத்தாய் அவனிடம் கூறிய விசுவாச வார்த்தைகளாகும். கிறிஸ்துவுக்காக உயிரைத் தியாகம் செய்த சிம்போரோசா மற்றும் அவரது பிள்ளைகள் ஜிறஷென்சியஸ், ஜுலியஸ், நெற்றஸ், பிறஹஷியஸ், ஜஸ்ற்றஸ், யுஜினியஸ் ஸ்டாக்கற்றஸ் ஆகியோரின் நினைவுப் பதிவுகள் இன்றும் விசுவாச உள்ளங்களை பெலனடையச் செய்கிறது.

மூன்றாம் கட்ட மதவெறி உபத்திரவங்கள் மிகவும் கடுமையாக இருந்த காலத்தில் (கி.பி 104-117) எல்லா ஜனங்களுக்கும் புறஜாதி கடவுள்களுக்கு பலியிட வேண்டுமென டிராஜன் சக்கரவர்த்தி ஆணை பிறப்பித்தான். பல இடங்களில் வாழ்ந்து வந்த கிறிஸ்தவர்களைக் கொன்று குவிப்பதுதான் அவனது பிரதான நோக்கம். அரசனின் ஆணையை மீறுபவர்களை சிறையிலடைப்பது வழக்கமாக இருந்தது. எனவே கிறிஸ்தவர்களால் சிறைச்சாலைகளெல்லாம் நிரம்பி வழிந்தது. மேலும் பலரை வேறு பல முறைகளை உபயோகித்துக் கொல்லவும் செய்தனர்.

புறஜாதி தேவனுக்கு பலியிட சம்மதிக்காத சிம்போரோவும் ஏழு பிள்ளைகளும் சிறையில் அடைக்கப்பட்டனர். சிம்போரோசா மிகவும் அழகுள்ளவளாகவும் அவளது மகன்கள் திட ஆரோக்கியமானவர்களாகவும் இருந்தனர். எனவே படைவீரர்களும், நியாயாதிபதிகளும் அவர்களை எப்படியாவது விடுவிக்க ஆசைப்பட்டனர் விசுவாசத்தை மறுதலிக்க பல வாக்குறுதிகளை வழங்கினர் நாட்டிலுள்ள வளமான பகுதியில் தங்கும் இடமும், பிள்ளைகளுக்கு ரோமப் படையில் வேலையும் வழங்கலாம் என உறுதியளித்தபோதும் சிம்போரோசாவின் விசுவாசம் அணுவளவு கூட உருக்குலையாமல் இருந்தது. கிறிஸ்துவுக்காக எந்தத் தியாகத்தையும் சகிப்போம், அவருடைய ராஜ்ய மேன்மைதான் எங்களது இலட்சியம் என்று அவர்கள் கூறியபோது படைவீரர்கள் மிகவும் கோபமடைந்தனர்.

படைவீரர்கள் சிம்போரோசாவையும் பிள்ளைகளையும் கடுமையாக அடித்து நொறுக்கினார்கள். அவளது நீண்ட தலைமுடியை உத்திரத்தின் மேல் சுற்றிக் கட்டித் தொங்கவிட்டார்கள். இதைக்கண்டு கலங்காமல் நின்ற சிம்போரோசாவை வேறுவிதமாகச் சித்திரவதை செய்தார்கள். தொடர்ந்து ஏழு மகன்களையும் தூண்களில் கட்டி வைத்தனர். உடலில் ஒவ்வொரு பகுதியையும் கயிறுகளால் கட்டி இழுத்தனர். வலியினால் நெளிந்தபோதும் ஒருவர் கூட முறுமுறுக்கவோ, பயப்படவோ செய்யவில்லை. படைவீரர்கள் சோர்வடைந்த தல்லாமல் சிம்போரோசாவுக்கும் பிள்ளைகளுக்கும் தனது விசுவாசத்தில் ஒரு மாற்றமும் வரவில்லை.

சிம்போரோசாவின் ஏழு பிள்ளைகளையும் கருணை காட்டாமல் கொலை செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. இவ்வாறு மூத்த மகன் கிறென்ஷியசைக் கொல்ல படைவீரர்கள் தயாராகும்போது சிம்போரோசா அவனைத் தேற்றியவாறு, “மகனே நீ எனக்கு முதல் பிள்ளை. உனது தந்தையின் மரணத்திற்குப்பின் நான் உன்னை தேவபக்தியில் வளர்த்தினேன். உன்னுடைய மாதிரியான வாழ்க்கையை இப்போது நடைமுறையில் அனுபவமாக்கிக் கொள்ளும் நேரம் வந்திருக்கிறது. மிகத் தைரியமாக நல்ல போர்ச்சேவகனாய் மரணத்தை ஏற்றுக் கொள். மீண்டும் நாம் நித்தியத்தில் சந்திக்கலாம்” என்று கூறினார். அம்மாவின் வாயிலிருந்து வந்த இதயபூர்வமான ஆறுதல் வார்த்தைகள் மகனைத் திடப்படுத்தியது. விசுவாசத்தை விட்டுப் பின்வாங்கப் போவதில்லை என்றுணர்ந்த படைவீரர் ஒரு பட்டயத்தால் மகனது கழுத்தை வெட்டினான். இரத்தம் பீறிட்டது. இரத்த சகதியில் அவன் மரித்துப் போனான்.

இரண்டாவது மகன் ஜீலியசின் நெஞ்சில் ஈட்டியால் குத்திக் கொலை செய்தனர். மூன்றாவது மகன் நெற்றசின் குரல்வளையிலும், நான்காவது மகன் பிறஷியசின் வயிற்றிலும், ஐந்தாவது மகன் ஜஸ்ற்றசின் முதுகிலும், ஆறாவது மகன் ஸ்டாக்கசின் மார்பிலும் ஈட்டியால் குத்திக் கொடூரமாகக் காலை செய்த போதும் அவர்கள் அலறவோ, கூக்குரலிடவோ செய்யாமல் அமைதியாக மரணத்தைத் தழுவினார்கள். விசுவாசச் சிறகுகளை விரித்துக்கொண்டு அவர்கள் பரலோகத்தை நோக்கிப் பறந்தனர்.

இளைய மகன் யுஜினியசை மிகவும் கொடூரமான முறையில் கொன்றனர். ஒரு குழியைத் தோண்டி சிறுவனை அதில் நிறுத்தினார்கள். கழுத்தளவு வரை உமியை நிரப்பி தீ வைத்தார்கள். இதைக்கண்ட படைவீரர்களின் விழிநீர் சிந்தியது. நெருப்பு நிறைந்த உமியில் சிறிது சிறிதாக எரிந்துச் சாம்பலாகும் முன் அந்தச் சிறுவன், “அன்புள்ள ஆண்டவரே, எனது ஆத்துமாவை உமது திருக்கரங்களில் ஒப்புவிக்கிறேன்” என்று முழங்கினான். அந்தச் சத்தம் அந்த பிரந்தியம் எங்கும் எதிரொலித்தது. அவனது ஆத்துமா விண்ணகம் நோக்கி விரைந்தது.

தனது அன்பான பிள்ளைகள் அனைவரையும் படுகொலை செய்த போதும் சிம்போரோசா தனது விசுவாசத்தை விட்டுப் பின்வாங்கவில்லை. அவரை படைவீரர்கள் உத்திரத்திலிருந்து கட்டவிழ்த்து கீழே இறக்கினார்கள். மிக அபூர்வமாகச் செயல்படுத்தும் மரணத்தண்டணையை சிம்போரோசாவுக்கும் கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி மிகவும் கனமான ஒரு கல்லை சிம்போராசாவின் கழுத்தில் கட்டினார்கள். ஒரு ஆற்றின் ஆழத்தில் கொண்டு போய் அவரை மூழ்கடித்தார்கள். சிம்போரோசா தனது பிள்ளைகள் சென்ற இடத்திற்கு பறந்து போனார்கள்.

சிந்தனைக்கு

கவர்ச்சியான வாக்குறிதிகள் வழங்கி சிம்போரோசாவையும், அவரது பிள்ளைகளையும் அவர்களது விசுவாசத்தை விட்டு வீழ்த்தலாம் என்ற எதிரிகளின் எண்ணம் கவிழ்ந்து போனது. ஏனெனில் அவர்கள் சுகமான வாழ்வை விட கிறிஸ்துவைப் பின்பற்றுவது மேன்மையாகும்  என்று நினைத்தார்கள். தங்களது தாய் கடைபிடித்த விசுவாச வாழ்க்கையைப் பாதுகாக்கும் பாதுகாவலர்ளாக ஏழு பிள்ளைகளும் மாறினார்கள். நொந்து பெற்றெடுத்த ஏழு பிள்ளைகளையும் தனது கண்களுக்கு முன்னால்கொன்று குவிப்பதைப் பார்த்தபோதும் அந்த வீரத்தாய், தேவ கிருபையால் ஆறுதலடைந்தாள். கிறிஸ்துவுக்காகக் கடைசி மூச்சு வரையிலும் போராடிய சிம்போரோசா மற்றும் அவரது ஏழு பிள்ளைகளின் கதை எந்தக் கடினமான இதயமுள்ளோரையும் கண்ணீரால்   நனையச் செய்யும்

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]