CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

இரத்தசாட்சிகள் டாக்டர். ரோலன்ஸ் டெய்லர்

இரத்தசாட்சிகள் டாக்டர். ரோலன்ஸ் டெய்லர்

புரட்டுபதேசங்களை எதிர்த்த சுவிசேஷப் போர்வீரர்

“தேவனுக்கு மகிமை. நான் எனது வீட்டிக்கு மிகவும் அருகில் இருக்கிறேன்”. கொலைக்களத்தை அடைந்த போது டாக்டர். ரோலன்ஸ் டெய்லர் கூறிய வார்த்தைகள் படைவீரர்களைக் கூட வியப்பிலாழ்த்தியது.

ரோலன்ஸ் டெய்லர் இங்கிலாந்திலுள்ள ஸபோக் என்ற ஊரில் பிறந்தார். சீர்திருத்தக் கருத்துக்களைப் பிரசங்கிப்பதில் டெய்லர் மிகவும் கவனம் செலுத்தினார். புரோகிதராக மாற   வேண்டுமென்ற தனது ஆசை நிறைவேறியது. ஹாட்லி சபையில் செய்த அவரது ஊழியம் அனைவருக்கும் ஆசீர்வாதமானதாக இருந்தது. சத்திய சுவிசேஷத்தை அறிவிக்க எந்தவித தயக்கமும் அவரிடம் இல்லை. அடித்தட்டு மக்களுக்கு அவர் ஒரு ஆதரவாளனாகச் செயல்பட்டார். உதவி தேடிவருபவர்களை திருப்பியாகத் திருப்பி அனுப்புவதில் டெய்லர் கவனம் செலுத்தினார். இவ்வாறு எல்லா நிலையிலும் சுவிசேஷம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருந்த வேளையில் எட்வர்ட் அரசன் மரணமடைந்தான்.

அதற்குப்பின் ஆட்சியைக் கைப்பற்றிய மேரி ராஜாத்தி உபத்திரவங்களுக்குத் துவக்கம் குறித்தார். ஹாட்லி சபையில் ரோம மத ஆச்சாரங்களைப் புகுத்த முயன்றபோது டெய்லர் அதை வன்மையாக கண்டித்தார். எந்த விதத்திலும் புரட்டு உபதேசங்களை சபையில் அனுமதிக்க மாட்டேன் என்று கண்டிப்பாய்க் கூறினார். இரு அரசியின் அதிகாரிகளைக் கோபமடையச் செய்ததால் டெய்லர் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டார். எனினும் அவர் மதற்றமடையவில்லை.

விபரமறிந்த மேரி டெய்லரை விசாரணைக்காக ஆஜர் படுத்துமாறு ஆணையிட்டார். டெய்லர் சந்திக்கப் போகும் அபாயங்களை அறிந்த அவரது நண்பர்கள் அவரிடம் தலைமறைவாகப் போகப் பணித்தனர். ஆனால் டெய்லர் அவர்களிடம், “துன்மார்க்கரைப் பார்த்துப் பயந்து ஒளிவதை விட சத்தியத்திற்காக சாவதே மேல்” என்று கூறினார். தங்களது வேண்டுகோளை நிராகரித்த டெய்லரை அவரது சினேகிதர்கள் மிகவும் கவலையுடன் வழியனுப்பி வைத்தனர்.

டெய்லர் பிஷப்புக்கு முன் நிறுத்தப்பட்டு விசாரணை தொடங்கியது. அரசியின் ஆணைகளை எதிர்த்ததால் குற்றவாளியாக தீர்ப்புக் கூறி சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்த வேளைகளில் துதி ஸ்தோத்திரங்களை முழங்குவதில் டெய்லர் தனது நேரத்தை செலவிட்டார். ஒன்றரை வருடத்திற்கு பின் டெய்லருடைய அபிப்ராயத்தை கேட்டபோது விசுவாசத்திற்காக மரிக்கவும் ஆயத்தமாயிருக்கிறேன் என்று பதில் கூறினார். டெய்லரை மிகவும் கடுமையாக சித்திரவதை செய்து இறுதியில் தீயிலிட்டு கொல்லுமாறு கட்டளையிடப்பட்டது.

சிறையில் தன்னை பார்க்க வந்த மனைவியிடமும், மகனிடமும் டெய்லர் ஆறுதலான வார்த்தைகளைப் பேசினார். அநீதிக்கும், பாவத்திற்கும் அடிமையாகாமல் கடைசி வரையும் விசுவாசத்தைக் காத்துக்கொள்ள வேண்டுமென்றும்,அம்மாவுக்கு கீம்ப்படிய வேண்டுமென்றும், வயதான ஊழியர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டுமென்றும் மகனுக்கு அறிவுரை கூறினார் மேலும் பசி பட்டினியால் வாடுவோர்க்கு உதவி கரம் நீட்ட வேண்டும் எனவும் கூறினார். அவரது மனைவியிடம் பேசியதிலும் நம்பிக்கை நிரம்பி வழிந்தது. “உண்மையான நண்பர்களாக வாழ்ந்ததினால் ஆண்டவர் உனக்கு பிரதிபலன் தருவார். ஆனாலும் நமது குடும்ப வாழ்க்கை உடனடியாகவே தீர்ந்து போகிறது. நீ இளமையாக இருப்பதால் உன்னையும், குழந்தைகளையும் காப்பாற்ற தேவன் வேறொருவரை ஆயத்தம் செய்வார். நான் ஆண்டவரோடு சேர்ந்து ஆராதிக்க போவதினால் என்னை நினைத்து துக்கமடையக்கூடாது. மகிமையில் நாம் மீண்டும் சந்திக்கலாம்” என்று பேசினார்.

பிரியமானவர்களிடம் ஆறுதலாகப் பேசிய பின்பு அவர்கள் ஒன்று சேர்ந்து ஜெபித்தார்கள். பின்னர் தனது மனைவியிடம் கையிலிருந்த வேதாகமத்தையும், மகனிடம் இரத்த சாட்சியாக மரித்தவர்களின் வரலாறும் அடங்கிய புத்தகத்தையும் கொடுத்தார். அவர்கள் அதை மிகவும் உயர்ந்த பரிசுகளாக பெற்றுக்கொண்டனர். டெய்லரை நெருப்பிலிடுவதற்காக சிறையிலிருந்து ஹாட்லிக்கு கொண்டு வந்தனர். இதைக்கேள்விப்பட்ட மனைவியும் மகளும் வழியருகில் காத்து நின்றனர். கொலைக்களம் நோக்கிப் பயணம் செய்யும் அப்பாவைக் கண்ட மகள் அழுதாள். “அப்பா, நாங்கள் அப்பா இல்லாதவர்களாக மாறிவிட்டோமே!” என்று அழுதாள். பரலோகத்தில் உனக்காக ஒரு தந்தை உண்டு என்றுக் கூறி மகளை முத்தமிட்டார். தனது அருமை மனைவியை ஒருமுறைகூட தைரியப்படுத்திய டெய்லர் புன்முறுவலுடன் விடைபெற்றார்.

விசுவாசத்தை மறுதலித்தால் விடுதலைக் கிடைக்கும் என்று பலர் பேசியபோது டெய்லர் அசைந்து கொடுக்கவில்லை. ஹாட்லி சபையில் விசுவாசிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கவலை படிந்த முகத்துடன் அங்கு கூடி நின்றனர். அவர்களை ஆறுதலளிக்க முயன்ற டெய்லரை ஒரு படைவீரன் கூர்மையான கம்பினால் வாயில் குத்தினான். ஆனாலும் கடைசி நிமிடங்களில் “தேவபிள்ளைகளே பரிசுத்த வேதாகமத்திலிருந்து மட்டுமே உங்களுக்குப் போதித்தேன் ஆனால் அந்த ஆச்சாரங்களையெல்லாம் இப்போது எனது குருதி மூலம் உங்களின் இருதயங்களில் பதியச் செய்கிறேன்” என்று பேசினார். பின்பு ஒரு படைவீரன் ஒரு பெரிய தடியால் அடித்தபோது டெய்லர் முழங்காலில் நின்று ஜெபம் செய்தார். பரலோகத்திற்கு நேராக கண்களை உயர்த்தியபோது  படைவீரர்கள் சிதைக்கு தீ மூட்டினார்கள். சதைப் பாகங்கள் எரிந்து பொசுங்கும் போது டெய்லர் தேவனைப் பாடி துதித்துக் கொண்டிருந்தார். “இரக்கமுள்ள பிதாவே எனது ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்” என்ற பிரார்த்தனையுடன் அந்த விசுவாச வீரன் பரலோகம் நோக்கிப் பறந்தார்.

சிந்தனைக்கு:

அரசனுடைய ஆணை எதிராக இருந்தபோது புரட்டுபதேசங்களை எதிர்ப்பதில் டக்கடர். ரோலன்ஸ் டெய்லர் உற்சாகம் காட்டினார். தமது சபை மக்கள் தேவ கற்பனைகளை கடைபிடிக்க வேண்டுமென்பதில் டெய்லர் உறுதியாக இருந்தார். ஏழைகளை நேசிக்கவும், உதவவும் கவனம் செலுத்திய டெய்லர் கடைசி நேரம் தனது மகனிடம் பேசும்போது தனது கருணையை வெளிப்படுத்தினார். மனைவியின் எதிர்கால பாதுகாப்பை பற்றி சிந்தித்த டெய்லர் என்ற சுவிசேஷப் போர்வீரன் மனைவியை. நேசித்தவரும், குழந்தைகளை நேசித்தவரும், ஏழைகளின் தேவைகளை அறிந்திருந்தவரும் தனது சபை மக்களுக்கு உண்மையான வழிகாட்டியுமாக இருந்தார்.