CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

இரத்தசாட்சிகள்

இரத்தசாட்சிகள்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

தாமஸ் கிரான்மா் (வலது கையை நீட்டி தீயை வரவேற்ற வீரர்)

“இந்தக் கைதான் அதை எழுதியது. இது முதலில் எரியட்டும்” கொளுந்து விட்டெரியும் அக்கினியில் தனது வலது கையை நீட்டியவாறு சத்தமாகக் கூறினார். விசுவாசித்தை மறுதலிக்க தூண்டிய போது எதிரிகளின் வற்புறுத்தலுக்குப் பணிந்து அவர்கள் கொடுத்த குறிப்பில் கையொப்பமிட்டதை நினைத்து மனம் வருந்தியது தான் அவ்வாறு செய்யத் தூண்டியது. இங்கிலாந்தின் வரலாற்றில் கறுத்த பக்கங்கள் என்று அழைக்கப்படும் மேரி ராஜாத்தியின் காலத்தில்தான் தாமஸ் கிரான்மர் இரத்த சாட்சியாக மரித்தார்.

1589-ல் இங்கிலாந்திலுள்ள நாட்டிங்காம் ஷெயர் பட்டணத்திற்கருகிலுள்ள ஆர்லிட் டண் கிராமத்தில் தாமஸ் கிரான்மர் பிறந்தார். சிறுவயதிலேயே தந்தையாரை இழந்தபோதும் கிரான்மர் படிப்பில் சிறந்து விளங்கினார். கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் படிப்புக்குப்பின் புரொபசரா நியமிக்கப்பட்டார். பின்னர் இறையியல் ஆசிரியராக மாறியபோது வேதாகம சத்தியங்கள் கிரான்மரை பெரிதும் கவர்ந்தது. கிரான்மர் இங்கிலாந்து மன்னன் எட்டாம் ஹென்ட்ரியின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார். இதனால் கான்ட்பெறி ஆர்ச் பிஷப்பாக நியமிக்கப்பட்ட கிரான்மர் சீர்திருத்த உபதேசங்களைக் கடைபிடிப்பவராக மாறினார். ரோமா சபையின் புரட்டு உபதேசங்களைப்பற்றிய தெளிவு உண்டான போது கிரான்மர் போப்பை தனது மேலதிகாரியாக ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என்றும், அது வேதாகமத்திற்கு முரண்பாடு ஆனதினால் தான் அப்படிச் செய்வதாகவும் ராஜாவிடம் அறிவித்தார்.

சீர்திருத்த உபதேசங்களைப் பரப்பி வரவே தோமஸ் கிரான்மருக்கெதிராக எதிரிகள் முளைத்தனர். கிரான்மரை கொலை செய்ய தருணம் தேடினார்கள். ஆனால் அரசனின் அன்பும், அரவணைப்பும் பிரச்சினைகளை மேற்கொள்ளும் வலுவைக் கொடுத்தது. எட்டாம் ஹென்றிக்குப்பின் ஆறாம் எட்வர்ட் அரியனையில் ஏறினான். அவர் கிரான்மரின் உபதேசங்களை விரும்பினார். மிக விரைவில் ஊழியம் நடைபெற்ற காலகட்டத்தில் எட்வர்ட் அரசன் இறந்து போனார். கொடுமைக்காரியான மேரி ஆட்சியில் அமர்ந்தாள். இந்த நாட்களில்நடந்த இரத்தம் சிந்துதல்கள் மேரிக்கு “இரத்த மேரி” என்ற பட்டப் பெயரைக் கொடுத்தது. அந்த அளவுக்கு கடுமையான உபத்திரங்களை அவள் அவிழ்த்து விட்டாள்.

மேரியின் கொடுமைகளைக் கேள்விப்பட்ட நண்பர்கள் கிரான்மரிடம் தப்பியோடுமாறு பணித்தபோது அவர் மறுத்துவிட்டார். மதத்துரோகி என்ற போர்வையில் கைது செய்யப்பட்ட கிரான்மரை கொன்றுவிட மேரி உத்தரவு வழங்கினாள். 3 வருடங்களாகத் தொடர்ந்து சிறையிலடைக்கப்பட்ட கிரான்மர் கடினமான துன்பங்களை அனுபவித்தார். தனது நண்பர்களான இலாட்டிமரும், ரிட்லியும் இரத்த சாட்சிகளாக மரித்ததை சிறையில் வைத்து அறிந்தார். விசுவாசத்தை விட்டுப் பின்மாறச் செய்ய எதிரிககள் பல தந்திரங்கள் செய்தனர். தொடர்ந்து வற்புறுத்தல்களுக்கு இணங்கிய கிரான்மர் அவர்கள் காட்டிய குறிப்பில் கையெழுத்திட்டார். “ரோம விசுவாசத்திற்கு எதிராகவுள்ள எல்லா உபதேசங்களையும் நான் வெறுக்கிறேன். போப் கிறிஸ்துவின் பிரதிநிதி. எனவே எல்லா ஜனங்களும் அவரை வணங்க வேண்டும். இதுதான் அந்தக் குறிப்பிலிருந்த பொருளடக்கம். மிகவும் விரவில் இதை பிரச்சாரம் செய்ய அவர்கள் முயன்றனர். தாமஸ் கிரான்மர் ரோமா மதத்தோடு சேர்ந்து விட்டார் என்ற செய்தி நாடு முழுவதும் பரவியது.

ஆக்ஸ்போர்டில் கிரான்மர் வெளியரங்கமாக அறிக்கையிடுகிறார் என்றறிந்தவர்கள் அங்கு வந்து கூடினார்கள். மோசமான வேடமணிந்து கிரான்மரை புனித மேரி ஆலயத்துக்குக் கொண்டு வந்தனர். முன்னர் உயர்ந்த பதவியில் இருந்து பிஷப்பைப் பார்த்த அனைவரும் கவலைப்பட்டனர். அந்த அளவுக்கு கீழ்த்தரமாகப் போடப்பட்டிருந்த வேடம் சங்கடத்தை வரவழைத்தது. பிரசங்க பீடத்துக்கு அருகிலிருந்த பீடத்தில் ஏறிய கிரான்மர் தனது கைகளை பரலோகத்துக்கு நேராக உயர்த்தி ஜெபித்தார். ரோம விசுவாசத்துக்குத் திரும்பி வந்த கிரான்மரை பிரசங்கியார் வாழ்த்தினார்கள். தொடர்ந்து தன்னிலை விளக்கம் தர கிரான்மரிடம் கூறப்பட்டது. “எனது மனசாட்சியை உறுத்தும் ஒரு காரியம் நான் செய்து விட்டேன்” என்று கூறி விட்டு சற்று நேரம் முழங்காலில் நின்று ஜெபித்த பின்னர் மேலும் “எனது பூலோக வாழ்வின் கடைசிக் கட்டத்தில் வந்திருக்கிறேன். எனினும் பரலோக வாழ்வின் ஆரம்ப நிலையை நான் காண்கிறேன். இனி என்னை வேதனைப்படுத்துவதும், உள்ளத்தின் நினைவுகளுக்கு எதிராக கை எழுதியதும், எனது உயிருக்குப் பயந்து கையெழுத்திடவும், உலகம் முழுவதும் பரவியதுமான அந்தக் காரியத்தை உங்கள் முன் கூறுகிறேன். “எனது மனவிருப்பத்திற்கெதிராக சத்தியத்தை எதிர்த்து எனது கை செயல்பட்டதினால் முதலாவது தண்டிக்கப்பட வேண்டியது எனது கை ஆகும். என்னை நெருப்பிலிடும் போது முதலில் வேக வேண்டியது இந்த கைதான். போப்பை நான் கிறிஸ்துவின் எதிரியாகவும், அந்திக்கிறிஸ்துவாகவும் நான் நினைப்பதால் அவரையும், புரட்டு உபதேசங்களையும் நான் மறுக்கிறேன்” என்று கூறினார்.

இந்த வார்த்தைகள் எதிரிகளை கோபமூட்டியது. பேசிக்கொண்டிருக்கும் போதே அங்கியை பிடித்து இருந்தனர். “பொய்யன்”, “அநியாயக்கரன்” என்று ஜனங்கள் கூச்சலிடவும், “தீயிலிடுங்கள்” என்று கத்தவும் தொடங்கினார்கள். உடனடியாக கிரான்மரை தீயிலிடக் கொண்டு சென்றனர். தீச்சூளைக்கு நேராக நடந்த பயணத்தில் கிரான்மரின் முகம் பிரகாசமாக இருந்தது. அங்கு சென்ற போது முழங்காலில் நின்று ஜெபித்தார். அவரை படைவீரர்கள் ஒரு மரக்கட்டையோடு சேர்த்துக்கட்டினா்கள். மிகவும் பயங்கரமான தோற்றத்தைப் பார்த்த பலரும் அலரினார்கள். தனது வலது கையை நீட்டியவாறு அக்கினியை வரவேற்ற கிரான்மர், “இது முதலில் எரியட்டும்” என்று கூறினார். உடல் முழுவதும் தீ பற்றி பிடிக்கும் முன்னமே அந்தக் கை சாம்பலானது. பின்னர் உடலில் எல்லாப் பகுதியிலும் நெருப்புப் படர்ந்து பரவியது. இந்த நேரத்திலும் தனது கண்களை மேலே உயர்த்தி, “அதை எழுதினது இந்தக் கை தான்” என்ற குரல் ஒலித்துக்கொண்டேயிருந்தது. இறுதியில் “தந்தையே எனது ஆத்துமாவை ஏற்றுக்கொள்ளும்” என்று சத்தமாக ஜெபம் செய்தார். கிரான்மர் இப்போது முழுமையான விசுவாசத்துடன் நித்தியமான இளைப்பாறுதலில் பிரவேசித்தார்.

சிந்தனைக்கு:

இங்கிலாந்தில் சீர்திருத்த உபதேசங்களைப் பரப்புவதில் கிரான்மர் கவனம் செலுத்தினார். எதிரிகளின் வற்புறுத்தலால் இணங்கப்போன கிரான்மர் பின்னர் மனஸ்தாபப்படுவது சிந்திக்க வேண்டிய விஷயமாகும். குறிப்பில் கையெழுத்திட்ட கிரான்மரின் வெளியரங்கமான குற்ற சம்மதம் கேட்க வந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது அவரது பதில். போப்பை வெளியரங்கமாக எதிர்க்க அசாதரண தைரியம் அவருக்கிருந்தது. செய்த தவறு கிரான்மரின் மனசாட்சியை கடைசி வரையும் தண்டித்துக்கொண்டேயிருந்தது. மேரி ராஜாத்தியின் சித்திரவதைகள் கிரான்மரை விசுவாசத்தில் உறுதியடையவே செய்தது.

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]