CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

உபத்திரவம் எமக்கு எதைக் கற்றுத்தருகிறது?

உபத்திரவம் எமக்கு எதைக் கற்றுத்தருகிறது?

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

வாழ்க்கைப் பாதையில் நாம் பயணிக்கையில் இன்பம், துன்பம் எல்லாம் மாறி மாறி வரும்போது எமது விசுவாசத்தின் படிகள் எப்படி அமைகிறது..? கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராய் நாம் ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்ட போது நாம் கொண்டிருக்கும் விசுவாசம் இன்பமான வேளைகளில் நிலைகொண்டிருந்தாலும் பாடுகள், பிரச்சனைகள், உபத்திரவங்கள் என வரும்போது நிலைத்திருக்கின்றதா?

அப்போஸ்தலனாகிய பவுல் 2 தீமோத்தேயு 3:12-இல் இவ்வாறு கூறுகிறார். “அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவ பக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” ஆச்சரியமாயிருக்கிறதா? “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்“ என்று கூறிய அதே பவுல் அப்போஸ்தலன்தான் தீமோத்தேயுவுக்கு இப்படிப் போதிக்கிறார். அப்படியானால் சந்தோஷமாய் இருக்கவேண்டிய கிறிஸ்தவனுக்கு பாடுகள், துன்பங்கள், உபத்திரவங்கள் ஏன் வருகிறது?

வேதாகம அடிப்படையில் இதைக்குறித்து சற்று ஆராய்ந்து பார்ப்போமானால், உபத்திரவத்தைக் குறித்து 4 உண்மைகளை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

  1. உபத்திரவம் எமக்கு பொறுமையைக் கற்றுத்தருகிறது. (ரோமர் 5:3-4)
  2. நாம் உபத்திரவப்படுவதினால் மற்றவர்களுக்கு ஆறுதலாய் மாறுகிறோம். (2 கொரிந்தியர் 1:6)
  3. எமது விசுவாசம் சோதிக்கப்பட்டு பொன்னாய் விளங்க நாம் உபத்திரவப்படுகிறோம். (1 பேதுரு 1:7)
  4. தேவனுடைய பிரமாணங்களை உபத்திரப்படுவதன் மூலம் கற்றுக்கொள்கிறோம். (சங்கீதம் 119:71)

பிரியமானவர்களே!

உபத்திரவங்களைச் சந்திப்போம், உபத்திரவங்களில் மேன்மை பாராட்டுவோம், விசுவாசத்தைக் காத்துக்கொள்வோம்.

இயேசு கிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவி. (2 தீமோத்தேயு 2:3)

 

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]