CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

எங்கே சமாதானம்

எங்கே சமாதானம்

*உலகம் முழுவதும் சமாதானம்

*இதுவே எங்கள் இருதயத்தின் கதறுதல்

*இதுவே எங்கள் ஜெபம்

 .

மேற்கண்ட மூன்று வரிச் செய்தி சடாக்கோ சசாக்கி (Sadako Sasaki) என்ற சிறுமியின் சிலைக்கு கீழ் எழுதப்பட்டிருப்பவை. இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது 1945ம் ஆண்டு ஓகஸ்ட் 6ம் நாள் ஹிரோஷிமா என்ற ஜப்பானிய நகரில் அமேரிக்க விமானம் மூலம் மிகச் சக்தி வாய்ந்த அணுகுண்டை (Atom Bomb) வீசியது. ”சிறுவன்” (Little Boy) என்று செல்லமாக பெயர் சூட்டப்பட்ட அந்த அணுகுண்டை கர்னல் பால் டிப்பெட்ஸ் (Colonel Paul Tibbets) என்ற விமானப்படை அதிகாரி அதை வீசினார். அணுகுண்டு வெடித்ததின் விளைவாக 38,000 அடி உயரத்திற்கு குடைக்காளானைப் (Mushroom) போன்ற தீப்பிளம்பு ஏற்பட்டது. அதை 100 மைலுக்கு அப்பாலுள்ள மக்களும் காண முடிந்தது. வெடித்த சத்தத்தையும் கேட்க முடிந்தது. அதன் விளைவாக ஏற்பட்ட பயங்கர உஷ்ணத்தினால் குண்டு விழுந்த இடத்திலிருந்து 800 அடி தூரத்திலிருந்து அய்யோய் (Aioi iron Bridge) என்ற இரும்புப் பாலம உருகியோடியது என்றால் அந்த உஷ்ணத்தின் தன்மையை நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது. அப்படியானால் மனிதர்களின் நிலையும் மற்ற கட்டிடங்களின் நிலையும் என்ன ஆவது. சுமார் 90,000 மக்கள் அடையாளம் கண்டுகொள்ள முடியாத அளவு அப்பொழுதே (Instant Death) எரிந்து சாம்பலானார்கள். 1,45,000 பேர் தீக்காயத்தின் விளைவாக பின்னர் இறந்தனர். எவ்வளவு கொடிய சம்பவம் என்பதை எண்ணிப்பாருங்கள். குண்டு விழுந்த இடத்தில் உஷ்ணத்தின் தன்மை சூரிய வெப்பத்தைவிட 10,000 மடங்கு கூடுதலாக இருந்தது என்று கணிக்கப்படுகிறது.

சடாக்கோ சசாக்கிக்கு அப்பொழுது வயது இரண்டு. கொடிய தீப்புண்களுடன் உயிர் தப்பினாள். ஆனால் லூக்கேமியா (Lukamia) அல்லது ”அணுகுண்டு வியாதி” (Aton Bomb Disease) என்று சொல்லப்படுகின்ற நோயால் பாதிக்கப்பட்டாள். அவளது கொடிய வியாதிக்கு மத்தியிலும் கல்வி கற்பதில் மிகுந்த ஆர்வம் காரணமாகப் பள்ளி சென்றாள். அணுகுண்டு வீச்சுக்கு தப்பிய சிலர் உண்டு. வெளியூர்களுக்கு சென்றவர்கள் தப்பியுள்ளார்கள். பள்ளியிலுள்ள அவளது சிநேகிதிகள் ”நீ பேப்பரை மடித்து 1000 வெள்ளைக் கொக்குகளைச் செய்து பறக்க விட்டால் ஆண்டவர் உனது விருப்பத்தை நிறைவேற்றுவார் என்று ஆலோசனை சொன்னார்கள். அதைக் கேட்டு அவளும் சோர்ந்து போகாமல் கொஞ்சம் கொஞ்சமாக பேப்பரில் கொக்குகள் செய்து பறக்கவிடுவாள். அவர்கள் சொன்னது போல 1000 கொக்குகள் செய்து பறக்கவிட்டாள். ஆனாலும் அவள் சுகமாகவில்லை. அவளது 12வது வயதில் வெடிகுண்டு வியாதியால் மரித்தாள். அவள் பயின்ற பள்ளியின் மாணவிகள் பணம் சேகரித்து அவள் பேப்பர் கொக்கைப் பறக்க விடுவது போன்ற நிலையில் அவளது சிலை ஒன்றைச் செய்ய ஏற்பாடு செய்து ஹிரோஷிமா நகரில் நிறுவினார்கள். அதில் உலக சமாதானத்திற்காக அவர்களது இருதயக் கதறுதலையும், அதற்காக அவர்களது ஜெபத்தையும் வெளிப்படுத்தும் வகையில் மூன்று வரிச் செய்தியைப் பதித்துள்ளனர். நொந்து போன இருதயத்தின் குமுறலைப் பாருங்கள். ஹிரோஷிமாவில் நடந்த வெடிகுண்டு  வெடிப்பு நடந்து முடிந்து 63 ஆண்டுகள் ஆயினும் அதன் நினைவுகள் இன்னும் அச்சுறுத்துவதாகவே உள்ளது. யுத்தத்தை நிறுத்தி சமாதானத்திற்கான முயற்சி என்ற பெயரால் இப்படி ஒரு பேரழிவா? அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஹேரி எஸ். ட்ரூமன் (Harry s. Truman) ”வரலாற்றிலேயே இது மகா பெரிய நாள்” (The Gratest Day in History) என்று கூறினார். (“In the Name of Peace”) என்ற தலைப்பில் (Hindu) இந்து 5.8.08 பத்திரிகையில் வந்த செய்தியின் சுருக்கும்)

சமாதானத்திற்கான இருதயக் கதறுதல் தொடர்கிறது. உலகத் தலைவர்கள் இவ்வுலகில் சமாதானத்தை நிலைநாட்ட விரும்பி செயல்படுகின்றனர். ஆனால் எதிர்பார்க்கிற சமாதானம் வாய்க்காமல் தள்ளிப்போகிறது. (Elusive) சமாதானம் எட்டாத ஒன்றாய்க் தோன்றுகிறது. ஏனெனில் உலகம் முழுவதும் பயங்கரவாதத்தால் (Terrorism) நிறைந்திருக்கிறது. யாவரும் சமாதானத்தை விரும்பினாலும் அதை அடையப் பெருமுயற்சிகள் மேற்கொண்டாலும் ஏன் சமாதானம் கிடைப்பதில்லை.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே ”சமாதானப்பிரபு” என்றும் ” சமாதானத்தின் தேவன்” என்றும் ”சமாதானக்காரணர்” என்றும் வேதம் வர்ணிக்கின்றது. ஆகவே அவர்தான் சமாதானத்தின் ஊற்று. (Source) அவரிடத்திலிருந்துதான் சமாதானம் வரவேண்டும். ஆனால் சமாதானத்தைப் பெற்றுக் கொள்ள உலகம் அவரை அனுகாமல் எங்கோ திசை மாறிச் சென்று கொண்டிருந்தது. ”அவரே நம்முடைய சமாதானக் காரணராகி இருதிறத்தாரையும் ஒன்றாக்கி பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமானத்தை தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாக சிருஷ்டித்து இப்படிச் சமாதானம் பண்ணி பகையைச் சிலுவையினால் கொன்று அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார். அல்லாமலும் அவர் வந்து தூரமாய் இருந்த உங்களுக்கும் சமீபமயிருக்கிற அவர்களுக்கும்  சமாதானத்தை சுவிசேஷமாய் அறிவித்தார்.” (எபே 2:14-17) என்று வாசிக்கின்றோம். அந்த சமாதானத்தின் சுவிசேஷத்தை பற்றிக்கொண்டு அதை அருளிய இயேசுவை முற்றிலும் அண்டிக் கொள்வதே சமாதானத்திற்கு வழி. ஏனெனில் பகையை சிலுவையில் கொன்றவர் அவரே. ஆகவே இயேசு கிறிஸ்து தம்முடைய மக்களுக்கு ” என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். உலகம் கொடுக்கிற பிரகாரமாய் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை.” (யோவா 14:27) என்று சொல்லி சமாதானத்தைக் கொடுத்தார். அந்த சமாதானம் நம்முடைய இருதயங்களில் ஆளுகை செய்யும் போது  நம்மில் சமாதானம் தங்கும். (கொலோ 3:15) அப்படிப்பட்ட நிலையை அடைந்தால் தான் நாம் மற்றவர்களோடு சமாதானமாக இருக்க முடியும். யாவரோடும் சமாதானமாய் இருங்கள் (எபி 12:14) என்றுதான் நமக்குக் கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அனுபவத்தை அடைந்து அதைக் காத்துக் கொள்பவர்கள் தான் மற்றவர்களைச் சமாதானம் செய்ய முடியும். ”சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்” (மத் 5:9) என்று வாசிப்பதின் படி அவர்கள் தேவனுடைய புத்திரர் என்ற நிலைக்கு உயர்த்தப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களே சமாதானத்தை நிலை நாட்ட முடியும்.