CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

என்னால் அல்ல… கிறிஸ்துவின் இரத்தமே

என்னால் அல்ல… கிறிஸ்துவின் இரத்தமே

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

ஜாண்வெஸ்லி பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ் பெற்ற சுவிசேஷகர். ஒரு நாள் ஒரு இடத்தில்  இரவு கூட்டம் முடித்து விட்டு வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தார். ஆள் நடமாட்டமில்லாத ஒரு இடத்தைக் கடந்து வரும் போது திடீரென ஒரு திருடன் அவரை வழிமறித்து கத்தி முனையில் அவரை நிறுத்தி அவர் பையிலிருந்த பணத்தைக் கேட்டான். மிக சொற்ப பணமே அவரிடமிருந்ததால் எரிச்சலடைந்த திருடன், “உன்னிடம் இவ்வளவு தான் இருக்கிறதா?” என்று மிகக் கோபமாகக் கேட்டான். ஜாண்வெஸ்லி கொஞ்சம் கூட பதறாமல், “நண்பனே, உனக்குத் தருவதற்கு என்னிடம் விலையேறப்பெற்ற ஒன்றிருக்கிறது” என்று சொல்லிக்கொண்டே தன் தோள் பையிலிருந்து “இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தம்” என்ற தலைப்பிலான கைப்பிரதியொன்றை எடுத்து அவனிடத்தில் கொடுத்து “இயேசுவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும். இதுதான் நான் தரும் விலையேறப்பெற்ற காரியம்” என்று சொன்னார்.

அதை அவன் அலட்சியமாக வாங்கிக்கொண்டு விரைந்து சென்று விட்டான்.. ஜாண்வெஸ்லி, “ஆண்டவரே, நீர் சிந்திய இரத்தம் வீண்போகக்கூடாது. இன்று அந்த இரத்தம் அவனை சந்திக்கவேண்டும். அவன் கைப்பிரதியை படிக்காமல் எறிந்துவிட்டாலும் உமது இரத்தத்தைக் குறித்து நான் சொன்ன வார்த்தைகள் அவனை சந்திக்க வேண்டும்” என்று உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஜெபம் பண்ணினார்.

பல ஆண்டுகள் கழித்து ஒரு ஆலயத்தில் ஞாயிறு ஆராதனை முடித்து விட்டு ஜாண்வெஸ்லி நண்பர்களை சந்தித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அறிமுகமில்லாத ஒருவன் அவர் முன்பாக வந்த நின்றான். அவன் உடுத்தியிருந்த உடையிலிருந்தும் தோற்றத்திலிருந்தும் அவன் ஒரு செல்வந்தன் என்று மட்டும் புரிந்தது. “ஐயா, என்னை நினைவிருக்கிறதா? என்று கேட்டான். வெஸ்லி நினைவுபடுத்த முயன்றார். சில ஆண்டுகளுக்கு முன் உங்களைக் கத்திமுனையில் கொள்ளையடித்தேன். அதுதான் என்னுடைய கடைசி திருட்டு. அதிலிருந்து நான் முற்றுமாய் மாறிவிட்டேன். ஒரு நல்ல கிறிஸ்தவனாக வாழ்கிறேன். என்னுடைய வியாபாரத்தை கர்த்தர் நிறைவாய் ஆசீர்வதிக்கிறார். இன்று நான் இப்படி இருக்கிறேன் என்றால் அது உங்களால்தான்” என்றான். ஜாண்வெஸ்லி அவனது இரண்டு கரங்களையும் அன்போடு பற்றிக்கொண்டு மிகுந்த மகிழ்ச்சியோடு “நண்பனே என்னால் அல்ல, இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தமே உன்னை சுத்திகரித்து மாற்றியது” என்றார்.

ஜாண்வெஸ்லி அன்று இரவுதான் கத்திமுனையில் கொள்ளையடிக்கப்பட்ட சூழ்நிலையில் கொஞ்சம் கூட பதட்டமடையாமல் கைப்பிரதியையும் கொடுத்து அவனுக்காக ஜெபிக்காமலிருந்திருப்பாரானால், அந்த திருடன் இரட்சிப்பைக் கண்டிருப்பானோ தெரியவில்லை.

நம்முடைய வாழ்க்கைப் பாதையில் ஒவ்வொரு நாளும் எத்தனையோ பேர்களைச் சந்திக்கிறோம். நாம் இரட்சிப்பின் நற்செய்தியை அவர்களோடு பகிர்ந்து கொள்கிறோமா?

“மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷமுண்டாயிருக்கும். (லூக் 15:7)

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]