[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே எல்லாம் வல்ல இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.
விசுவாசம் என்றால் என்ன? விசுவாசத்தைக் குறித்து நம் மனதில் இருக்கும் பொதுவான கருத்து என்ன? நாம் ஒவ்வொருவரும் விசுவாசத்தில் எந்தளவு நிலைத்திருக்கிறோம்? இவற்றுக்கெல்லாம் நம் மத்தியில் வெவ்வேறு பதில்கள் இருக்கும் இருந்தாலும் பரிசுத்த வேதாகமத்தில் இதற்கு மேகம் போன்ற பல்லாயிரக்கணக்கான சாட்சிகள் உண்டு.
ஆம், அன்பார்ந்தவர்களே, கர்த்தர் சொல்லுகிறார் “விசுவாசித்தால் தேவ மகிமையைக் காண்பாய்.” விசுவாசம் என்பது “நம்பப்படுகின்றவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது” எபிரெயர் 11:1
ஆபிரகாம் விசுவாசத்தின் தந்தை என அழைக்கப்பட்டமைக்கான காரணம் என்ன? அவர் கர்த்தர் மீது வைத்த அளவில்லாத விசுவாசமானது எவ்வளவு சோதனைகளிலும் நெருக்கமான சூழ்நிலைகளிலும் எள்ளளவும் குறையாமல் இருந்தமையே அதற்கு உதாரணம் தனக்கு குழந்தையே இல்லாமல் நீண்ட காலங்களுக்கு பிறகு கிடைத்த மகனை பலி கொடுக்க துணிந்ததே. இதுவே ஆபிரகாமுக்கு கர்த்தர் மீது இருந்த விசுவாசம்.
இது மட்டுமல்ல விசுவாசத்தாலே சாராள் தனது 99-வது வயதிலே கர்ப்பம் தரித்து பிள்ளையை பெற்றாள் விசுவாசத்தினால் நோவா அழிவிலிருந்து தன் குடும்பத்தோடு மீட்கப்பட்டான், விசுவாசத்தினாலே எரிக்கோ கோட்டை இடிந்து வீழ்ந்தது.
இவ்வாறு ஏராளமான சாட்சிகள் நமக்காக இருக்கின்ற போது நம்முடைய விசுவாசம் எவ்வாறானது? நம்முடைய சாட்சிகள் எவ்வாறானது? சற்று சிந்திப்போமா?
நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு சூழ்நிலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கலாம். நமது வாழ்க்கையில் கடன் பிரச்சனையா? குடும்பத்தில் நிம்மதியில்லையா? தொழிலில்லையா? நோய், துன்பங்களா? சமூகத்திலே ஒதுக்கப்பட்டு மற்றவர்களால் அவமானப்படுத்தப்பட்டு வெட்கப்படுத்தப்பட்டு தலை குனிந்து ஆறுதல் சொல்ல யாருமில்லாத ஒரு நிலையா? நாம் நம்பினவர்கள் நாம் உயிரிலும் அதிகமாக நேசித்தவர்கள் நம்மைக் கைவிட்டாலும் நம் தேவனாகிய கர்த்தர் நம்மை ஒரு போதும் கைவிடமாட்டார்.
நாம் சில சமயங்களில் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் செய்யும் போது அவ் விண்ணப்பங்களுக்கு விரைவாக பதில் கிடைத்துவிடும் அப்பொழுது நாம் சந்தோஷப்பட்டு கர்த்தருக்கு நன்றி சொல்லி துதிப்போம். சில வேளைகளில் நம்முடைய வேண்டுதல்கள் ஜெபங்களுக்கு விரைவாக பதில் கிடைக்காது தாமதிக்கும் போது நாம் என்ன செய்கிறோம்? கர்த்தர் எமது ஜெபத்தைக் கேட்கவில்லை. அவர் என்னைக் கைவிட்டு விட்டார். என்று எண்ணி அவரை விட்டு தூரமாக விலகிப்போய் விடுகின்றோம்.
அன்பார்ந்தவர்களே ஏன் இவ்வாறு நம்முடைய ஜெபத்திற்கு சீக்கிரமாய் பதில் கிடைக்கும் போது சந்தோஷமாகவும் பதில் கிடைக்க தாமதிக்கும் போது சோர்ந்தும் போகின்றோம். பிரியமானவர்களே நாம் எப்பொழுதும் அற்ப விசுவாசிகளாக இருப்பது கர்த்தருக்குச் சித்தமில்லை. இயேசு கிறிஸ்து இவ்வாறு சொல்லியிருக்கிறார் “நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால்……மலையை பார்த்து நீ பெயர்ந்து சமுத்திரத்தில் தள்ளுண்டு போ என்று சொன்னாலும் அப்படியாகும்” மத்தேயு 21:21 “நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளை கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள்.” மத்தேயு 21:22
ஆம் பிரியமானவர்களே விசுவாசத்தை தொடக்கினவரும் முடிக்கிறவருமான இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட நாம் ஒவ்வொருவரும் நமக்கு நியமித்து இருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடு இருப்போம். நமக்கு வாக்குத்தத்தம் பண்ணின தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார். அவர் இன்றும் என்றும் சதா காலங்களிலும் ஜீவிக்கிறவராயிருக்கிறார். கர்த்தர் ஒரு போதும் நம்மை கைவிடமாட்டார்.
ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் பண்ணி 400 வருடங்களுக்கு பின்னும் அதை நிறைவேற்றிய தேவன், நமக்கும் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். நாம் மறந்தாலும் அவர் மறப்பதில்லை அவர் ஏற்ற காலத்தில் நமக்காக சகலத்தையும் செய்து முடிக்க வல்லவராயிருக்கிறார் என்பதை நான் விசுவாசிக்கிறேன் அதை நீங்களும் விசுவாசியுங்கள் பொறுமையோடே விசுவாசத்தில் நிலைத்திருங்கள்.
[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]