CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

கடனில்லாது வாழ கற்றுக் கொள்ளல்

கடனில்லாது வாழ கற்றுக் கொள்ளல்

கடனில்லாது வாழ உதவுவதற்கு தேவ வார்த்தையில் இருந்து சில கிறிஸ்தவ படிப்பினைகள்.

  • தேவன் எமது ஊற்று என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

சங்கீதம் 24:01- பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது.

சங்கீதம் 50:10- பர்வதங்களில் ஆயிரமாயிரமாய் திரிகிற மிருகங்களும் என்னுடயவைகள்.(தெய்வீக சொந்தக்காரத்துவம்)

சங்கீதம் 89:11- வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது. பூலோகத்தையும் அதிலுள்ள யாவையும் நீரே அஸ்திபாரப்படுத்தினீர்.

ஆகாய் 2:8- வெள்ளியும் என்னுடையது. பொன்னும் என்னுடையது.

1நாளா 29:12- ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது.

1நாளா 29:14- எல்லாம் உம்மால் உண்டானது. உமது  கரத்திலே வாங்கி உமக்கு கொடுத்தோம்.

 

  • கொடுக்க கற்றுக் கொள்ளல்
  1. முதலாவது தேவனுக்குக் கொடுத்தல்

நீதி 3:9- உன் பொருளாலும் உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரை கனம்பண்ணு.

மல்கியா 3:10 -…. தசமபாகங்களையெல்லாம் பண்டகசாலையிலே கொண்டு வாருங்கள்.

லேவி 27:30 –தசமபாகமெல்லாம் கர்த்தருக்கு உரியது. அது கர்த்தருக்கு பரிசுத்தமானது.

மத்தேயு 23:23-, லூக்கா 11:42 இயேசு உறுதிப்படுத்துகிறார். (தசமபாகம்) –மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உஙங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி,

2கொரிந்தியர் 8:12 கொடுக்க விரும்பும் இருதயம்

க2கொரிந்தியர் 9:7- உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாய் இருக்கிறார்.

 

  1. மற்றவர்களுக்குக் கொடுத்தல்

எபே 4:28 –மற்றவர்களுக்கு கொடுப்பதற்காக நாம் பிரயாசப்பட்டு வேலை செய்ய வேண்டும்.

நீதி 19:17- ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான். அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.

மத் 5:42- உன்னிடத்தில் கேட்கிறவனுக்கு கொடு.

மத் 6:3- உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது

மத் 10:8- இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.

அப் 20:35- வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்.

 

  1. சேமிக்கக் கற்றுக்கொள்

நீதி 30:24.25- கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிருக்கிற எறும்பு.

நீதி 6:6-11 –எறும்பை போல் ஞானமுள்ளவர்களாய் இருங்கள். ஆகாரம் எல்லாவற்றையும் முடித்து விடாமல் வயோதிய காலத்திற்கும், குளிர்காலத்திற்கும் சேமித்து வையுங்கள்.

நீதி 21:20- வேண்டிய திரவியமும் எண்ணெயும் ஞானவானுடைய வாசஸ்தலத்தில் உண்டு. மூடனோ அதைசட செலவழித்துப் போடுகிறான். ஞானி தனது செலவை வரவின்படி அமைத்துக் கொளிகிறான்.

சங் 37:25- நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்திற்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை.

 

  1. கடனைத் தவிர்க்கவும்

 

நீதி 22:7- கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை. ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வதற்காக தங்கள் சுதந்திரத்தை விற்றுவிடுகிறார்கள்.

நீதி 3:27-28- கடனைத் திருப்பிக் கொடுக்க திராணி இருக்கும் போது கொடுக்கவும். பின் போட வேண்டாம். கடனை பின் போடாமல், வஞ்சனை செய்யாமல் கட்டி முடிக்கவும்.

ரோமர் 13:8 – ஒருவரிடத்திலொருவர் அன்புகூறுகிற கடனேயல்லாமல் மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்.

 

எப்படியாகிலும் கடன் கொடுத்தல் அனுமதிக்கப்பட்டுள்ளது.

உபாக 15:8- அவனுக்கு உன் கையைத தாராளமாய்த் திறந்து, அவனுடைய அவசரத்தினிமித்தம் அவனுக்குத் தேவையானதை கடன் கொடுப்பாயாக.

சங் 37:26- அவன் நித்தம் இரங்கி கடன் கொடுக்கிறான். அவன் சந்ததி ஆசிர்வதிக்கப்படும்.

சங் 112:5- இரங்கிக் கடன் கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன் பாக்கியவான்.

உபாக 28:12- நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய். அடுத்த வசனத்தில் நாங்கள் வாலாகமல் தலையாகுவோம் என கூறப்பட்டுள்ளது.

சங்கீதம் 37:21- துன்மார்க்கன் கடன் வாங்கிச் செலுத்தாமல் போகிறான். நீதிமானோ இரங்கிக் கொடுக்கிறான்.

 

 

  1. திருப்தியாயிருங்கள்.

பிலிப்பியர் 4:11 பவுல் திருப்தியாக இருக்க கற்றுக் கொண்டான்.

1தீமோத் 6:6-8 –பவுல் தீமோத்தேயுவை திருப்தியாக இருக்கும்படி ஆலோசனை கூறினான்.

லூக்கா 3:1- நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண் செய்யாமலும் பொய்யாய்க குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்று இருங்கள் என்றான்.

எபிரே 13:5 –நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள். நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.

 

  1. நாங்கள் வேலை செய்ய வேண்டும்

ஆதி 1 தேவன் ஆறு நாட்கள் வேலை செய்தார்.

யாத் 35:2- ஆறு நாட்கள் வேலை செய்து, 7ம் நாள் பரிசுத்தமாக வைத்திருங்கள் எனக் கூறினார்.

நீதி 14:23- சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு. உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும்.

2 தெச 3:10 ஒருவன் வேலை செய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று பவுல் கூறுகிறார்.

2தெச 3:12 வேலை செண்து சாப்பிடவும்

ஆதி 2:1 –தேவன் மனுஷன் தோட்டத்தை பண்படுத்தவும் காக்கவும் கூறினார்.

பிரச 9:10- உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்.

 

  1. வரவு செலவு திட்டத்தை திட்டமிடுங்கள் அல்லது ஒரு குறிப்பை வைத்துக் கொள்ளுங்கள்.

 

லூக்கா 14:28,29 ஒரு மனுஷன் கட்டிடத்தை கட்ட முன் செலவை கணக்கு பார்க்க வேண்டும்.

நீதி 24:3-4- ஞானத்தை பாவியுங்கள். வீழயடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும். அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான சகலவித பொருள்களும் நிறைந்திருக்கும்.

நீதி 24:2- வெளியில் உன் வேலையை எத்தனப்படுத்தி வயலில் அதை ஒழுங்காக்கி, பின்பு உன் வீட்டைக் கட்டு.

 

 

  1. தேவ ஆலோசனைகளைக் கேளுங்கள்.

நீதி 12:15- மதியீனனுடைய வழி அவன் பார்வைக்கு செம்மையாயிருக்கும் . ஆலோசனைக்குச் செவி கொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.

சங் 1:1-3 தேவனுடைய வார்த்தையை கைகொள்கிற மனுஷன் செழிப்பான்

யாக் 1:22 நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்கு திருவசனத்தை கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதன்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.

யாக் 1:25- …. அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்.