CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார்

கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார். (2 சாமுவேல் 5:24) தேவஜனமாகிய நாம் பலவிதமான பிரச்சனைகள், போராட்டங்கள், நெருக்கங்கள் சற்றும் எதிர்பாராத விபரிதமான காரியங்கள் நேரிடும்போது, இந்த சூழ்நிலையை நாம் மேற்கொண்டு கடந்து போய் விடுவோமா எனத் திகைக்கிறோம். அங்கலாய்த்துக் கண்ணீர் சிந்துகிறோம். ஆனால் கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிற வார்த்தை 2 சாமு 5:24-ன்படி “நான் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பேன்” என்பதே. எனவே கலங்காதே, சோர்ந்து போகாதே, நீ ஏன் முடங்கிப்போக வேண்டும்? உன்னுடைய யுத்தங்களை நடத்துகிறவர் கர்த்தரல்லவா? இதைத்தான் தேவனுடைய மனிதனாகிய மோசே யாத் 14:13,14-ல் இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார். ஆதலால் பயப்படாதிருங்கள். கர்த்தர் உங்களுக்குச் செய்யும் ரட்சிப்பை நீங்கள் நிச்சயமாகப் பார்ப்பீர்கள்.

மோசேக்குப்பின்பாக வந்த யோசுவாவும் இஸ்ரவேல் ஜனங்களை நோக்கி சொல்லுகிற வார்த்தை என்னவென்றால் “கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார்” யோசுவா 3:5 நம்முடைய கர்த்தர் அற்புதங்களைச் செய்கிற கர்த்தர். அவர் உன்னைக்கொண்டே அற்பதங்களைச் செய்வார். யோசுவா 23:10-ல் உங்களில் ஒருவன் ஆயிரம் பேரைத் துரத்துவான் என்றும், ஒரு மனுஷனை முறிய அடிப்பதுபோல மீதியானியரை முறிய அடிப்பாய் என்றும். ஒரு திரி அணைகிறதுபோல பார்வோனையும் அவன் சேனையையும் செங்கடலிலே அமிழ்ந்து போகப்பண்ணினவர் நிச்சயமாய் உனக்கு எதிரான போராட்டங்கள், பிரச்சனைகள். நீ முன்னேற முடியாதபடி; கடந்துபோக முடியாதபடி உன் வாழ்க்கை, உன் தொழில், உன் பிள்ளைகளின் காரியம், உன் ஊழியம் இவைகளுக்கெதிரான வல்லமைகளை உன்னைக் கொண்டே முறியடிப்பார்.

சபைக்கு எதிராய், தேசத்துக்கு எதிராய், தேவபிள்ளைகளுக்கு எதிராய் சத்துருவின் கிரியைகள் பரவி இருக்கும் போது நீ சோர்ந்து போகாதே (நீதி 24:10) “ஆபத்து காலத்தில் சோர்ந்து போவாயானால் உன் பெலன் குறுகினது”  என்று உணர்த்துகிறது. ஆனாலும் பெலவீனர்களாகிய நாம் சோர்ந்து போவதே நமது வாடிக்கையாகிவிட்டது. நமக்கு அன்பானவர்களை நம்மை வழிநடத்திச் சென்ற தேவமனிதர்களை, பல நல்ல ஆவிக்குரிய தலைவர்களை நாம் இழந்து வாடும்போது இயற்கையாகவே நாம் சோர்ந்துபோய் விடுகிறோம்.

பழைய ஏற்பாட்டில் மோசே மிகப்பெரிய தேவமனிதன். அற்புதங்களினாலும். அடையாளங்களினாலும் தன்னோடுகூட இருந்த தேவனுடைய பலத்த கரத்தினாலும் ஆறு லட்சத்திற்கு அதிகமான இஸ்ரவேல் ஜனங்களை நடத்திக் கொண்டு வந்தான். பெரிய ஜனக்கூட்டம். பெரிய வேலை, பெரிய தேவமனிதன். ஆனால் திடீரென மரித்துவிட்டான். இந்த சூழ்நிலையில் கர்த்தர் யோசுவாவைப் பார்த்து சொல்கிறார் “பலங்கொண்டு திடமனதாயிரு” ஒரு முறையல்ல யோசுவா முதலாம் அதிகாரத்தில் 3 முறை கூறுகிறார். முதலாவது 6-ம் வசனத்தில் பலங்கொண்டு திடமனதாயிரு என்று கூறுகிறார். 2-வது முறை 7-ம் வசனத்தில் “மிகவும் பலங்கொண்ட திடமனதாயிரு என்கிறார். 3-வது விசை 9-ம் வசனத்தில் கர்த்தர் சொல்கிறார் நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு, திகையாதே, கலங்காதே, நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருக்க வேண்டும் என்பது தேவனுடைய கட்டளை. அது மாத்திரமல்ல, நீங்கள் திகைக்கக்கூடாது, கலங்கக்கூடாது, ஏன் தெரியுமா? 5-ம் வசனத்தில் கர்த்தர் கூறுகிறார், “நான் மோசேயோடு இருந்தது போல உன்னோடும் இருப்பேன்.” மேலும் 9-ம் வசனத்தில் நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார். ஒருவேளை மோசே மரித்துப்போயிருக்கலாம். சாமுவேல் கடந்து போயிருக்கலாம். ஆனால் மோசேயிலும் பெரியவர், சாலமோனிலும் பெரியவர், தேவாலயத்திலும் பெரியவர். அவர் மாறாதவராய் உன்னோடு கூடத்தான் இருக்கிறார். அவர் உன்னோடு இருக்க கலங்கக் காரணம் என்ன? திகைத்துத் தடுமாற காரணம் என்ன? உபா 32:18 கூறுகிறது. “உன்னை ஜெனிப்பித்த கன்மலையை நீ நினையாமல் போனாய்; உன்னைப்பெற்ற தேவனை மறந்தாய்.” நீ உன்னோடு கூட இருக்கிற கர்த்தரை நினையாமல் போனதினால், அவரை மறந்து போனதினால் உன் பிரச்சனைகளினூடே, உன் போராட்டங்களின் மத்தியில் நீ சோர்ந்து, உன் பெலனை இழந்து, முடங்கிப்போயிருக்கிறாய் தாவீதைக்குறித்து வேதம் சொல்லுகிறது. 1 சாமுவேல் 30:6-ல் தாவீது மிகவும் நெருக்கப்பட்டான். ஆனால் ஒன்று செய்தான் தன்னோடு கூட இருந்த, தன்னை அபிஷேகித்த தேவனாகிய கர்த்தருக்குள் தன்னைத் திடப்படுத்திக் கொண்டான். தேவனை நன்கு அறிந்த நாம் இன்றைக்குச் செய்யத்தவறுவதும், மிகவும் பரிதாபத்திற்குரிய காரியமும் இதுதான்.

2 சாமு 5-ம் அதிகாரத்தில் 18 முதல் 25வரையுள்ள வேதப்பகுதியை வாசிக்கும் போது தாவீது தனக்கும் பெலிஸ்தருக்கும் எதிரான யுத்தத்திலே போகலாமா? ஒப்புக்கொடுப்பீரா என்று கர்த்தரிடத்தில் போய் விசாரிக்கிறார். 2 நாளா 14:11-ல் ஆசாவும் இதைத்தான் செய்கிறார். தேவனை நோக்கி கூப்பிடுகிற எப்பேர்ப்பட்ட நபருக்கும், உதவி செய்வது தேவனுக்கு லேசான காரியம். அவர் துணை நிற்க எவ்வளவு பெரிய கூட்டத்தையும் முறியடித்து விடலாம். என்பதுதான் ஆசாவின் நம்பிக்கை. 2நாளா 20:12-ல் யோசபாத் கூறுகிறார். இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்கு பெலனில்லை. நாங்கள் செய்ய வேண்டியது இன்னதென்று எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் யோசபாத்துக்கும் ஒன்று தெரியும். எந்த சூழ்நிலையிலும் தேவனை மாத்திரம் நோக்கிக்கொண்டிருக்கத் தெரியும். மோவாபியரும், அம்மோனியரும் திரளாய் எதிர்த்து வந்த போது, யோசபாத்தும் அவனுடைய ஜனங்களும் கர்த்தரிடத்தில் சகாயந்தேடி கூடினார்கள். ஆனால், இன்றைய ஆவிக்குரிய உலகின் அவல நிலை, கர்த்தரை விட்டு விட்டு உலக அரசாங்கத்திடமும், அதின் அதிகாரிகளிடம் சகாயந்தேடி அலைகிற கூட்டம் அரசியல்வாதிகளின் பின்னால் அலைகிற கூட்டம் பெருகி வருகிறது. அன்றைய தலைவன் யோசபாத், தேசமெங்குமுள்ள ஜனங்களை உபவாசித்து ஜெபிக்க ஒருமுகப்படுத்தினான். ஜெயத்தைக் கண்டான். ஆனால் இன்றைய ஆவிக்குரிய உலகின் நிலைமையோ? 1நாளா 10:13-ல் சவுல் கர்த்தரைத் தேடாமல் அஞ்சனம் பார்க்கிறவர்களைத் தேடினான். செத்துப்போனான், உன் காரியங்களுக்காக இன்றைக்கு நீ யாரைத் தேடுகிறாய்? இதை வாசிக்கிற தேவஜனமே நீ உனக்காக, உன் பிள்ளைகளுக்காக, உன் சபைக்காக, உன் தேசத்துக்காக கர்த்தரைத் தேட வேண்டிய நாட்களுக்குள் வந்திருக்கிறாய் என்பதை மறந்து போகாதே. தாவீதைப் போல, ஆசாவைப்போல, யோசபாத்தைப்போல கர்த்தரை நோக்கி கூப்பிடு. கர்த்தரிடத்தில் விசாரிக்கும்போது, நீ ஜெயமெடுக்க உன்னைப் பெலப்படுத்துவார். சத்துருக்களை முறியடிக்க உனக்கு வழிகாட்டுவார். யோசபாத்தைப்போல உபவாசித்து ஜெபிக்கும் போது சத்துருக்களை உன் கையில் நிச்சயமாய் ஒப்புக்கொடுப்பார். தனிப்பட்ட உன் வாழ்க்கையிலே, உன் குடும்பம், தொழில், ஊழியம், தேசத்திலே சத்தருவை முறியடிக்க, கர்த்தர் உனக்கு முன்பாக புறப்பட்டிருப்பார்.

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]