CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

கிறிஸ்தவனும் பணமும்

கிறிஸ்தவனும் பணமும்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

உலகில் வாழ்வதற்கு பணம் அவசியம். சர்வ உலகத்தையும் சிருஷ்டித்த இயேசு கிறிஸ்து இவ்வுலகில் மனு உருவம் எடுத்து வாழ்ந்த போது அவருக்கே வரி செலுத்துவதற்கு பணம் தேவைபட்டது என்றால் நாம் எம்மாத்திரம். உலகம் மனிதனை ஏழை, ஐசுவரியவான் என்று இரு பிரிவுகளாக பிரித்திருப்பது பணத்தை அடிப்படையாகக் கொண்டு தான். பணம் இல்லாத வாழ்க்கையை ஒருவராலும் நினைத்து பார்க்க முடியாது தான். உணவு உடை உறைவிடம் மனிதனின் வாழ்க்கைக்கு அவசியம். பணம் என்ற மூலதனம் தான் இவை யாவையும் பெற அத்தியாவசியமாயிருக்கிறது. கிறிஸ்தவனும் மனிதன் தானே. விதிவிலக்கா என்ன? வேதம் பணத்தை குறித்து குறிப்பிடுகையில் “பணம் எல்லாவற்றிற்கும் உதவும்” பிர 10:19. என்று தான் கூறுகிறது.

.
பின்பு ஏன் இயேசுகிறிஸ்து ஐசுவரியவானைக் குறித்துக் குறிப்பிடும் போது ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பது அரிது என்கிறார்? அப்படியென்றால் பணம் சம்பாதித்து வசதிகளை ஏற்படுத் திக் கொள்வது தவறானதா?

.
ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, தாவீது, யோபு. இவர்;கள் யாவருமே செல்வ சீமான்களாக வாழ்ந்த வர்கள்தான். இவர்கள் யாவருமே தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரித்தார்கள் என்றல்லவா வேதம் கூறுகிறது. அப்படியென்றால் ஐசுவரியவானாய் இருப்பதும் பணத்தை சம்பாதிப்பதிலும் தவறல்ல.
ஆனால் நம் மனம் அந்தப் பணத்தில் எவ்வண்ணமாக இருக்கிறது? நாம் சம்பாதிக்கும் விதம் எப்படிப் பட்டதாக இருக்கிறது? மேலும் அதை கையாளுகிற விதம் எப்படிப் பட்டதாயிருக்கிறது என்பதில் தான் விஷயமே அடங்கியிருக்கிறது தேவ வசனங்களோடு இணைத்து படிக்க உங்களை கேட்டுக்கொள்கிறோம்.

.
பணத்தின் பிறப்பிடம்
நமக்கு கிடைக்கிற ஊதியம் தேவனிடத்திலிருந்து தான் வருகிறது என்பதை நாம் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். நம்முடைய தேவைகளையும், விருப்பங்களையும் தேவனிடத்தில் பகிர்ந்து கொள் ளுகிற நல்ல நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தேவன் தருவார் என்பதை விசுவாசத் தோடு காத்திருக்க வேண்டும். அப்பாழுது நிச்சயமாக கர்த்தர் தருவார். உடனடியாக அவருக்கு நன்றி செலுத்தி மகிழ்ந்து தேவனுக்கு கொடுக்க வேண்டிய காணிக்கையையும் கொடுத்து அவரை மகிமைபடுத்த வேண்டும்;. 1 நாளா 29:12, ஆகா-2:8
ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரிர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும். 1 நாளா 29:12

வெள்ளியும் என்னுடையது, பொன்னும் என்னுடையது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஆகா-2:8

நமது நம்பிக்கை
இன்று நாம் அநேகர் கர்த்தர் கொடுத்த ஆசீர்வாதத்தை மேன்மை பாராட்டி ஆசீவாதத்தை கொடுத்த கர்த்தரை மறந்து விடுகிறோம்;.

.
இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும், 1 தீமோ6:17
நம்முடைய நம்பிக்கை பணத்தின் மேலோ அல்லது நம்முடைய பொருட்கள் மேல் நம்பிக்கை வைக் காமல் கர்த்தர் மேலேயே நம்பிக்கை வைக்க வேண்டும். பொதுவாக தமிழில் இப்படியாக சொல்லுவார் கள் “நம்முடைய பணம் ஒரு தலைவலிக்கு தாங்காது”. நாம் பேசும்பொழுதோ அல்லது சிந்திக்கும் பொழுதோ எனக்கு இவ்வளவு சொத்து இருக்கிறது, இவ்வளவு பணம் சேமிப்பு வங்கியில் வைத்தி ருக்கிறேன், எனக்கு கல்வியிருக்கிறது என்று ஒரு போதும் சொல்லாமலும் சிந்திக்காமலும் தேவனு டைய நாமத்தை மாத்திரம் மேன்மை படுத்துவோம.;

.
சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.
அவர்கள் முறிந்து விழுந்தார்கள்; நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம். சங் 20:7-8
விக்கிரக ஆராதனை

.
ஒருவர் காலையில் எழும்பினதும் தன்னுடைய பணப்பையை எடுத்து அதில் ஒரு பணத்தை எடுத்து அதை தன்னுடைய கண்களில் வைத்து ஏதோ செய்தார். ஏன் இப்படி செய்கிறீர் என்று கேட்டதற்கு இந்த பணம் என்றாலே ஒரு தேவதை தான் என்றார். எனக்கு அருமையானவர்களே! பணத்தையல்ல, அதை தந்த தேவனையே மகிமை படுத்தவேண்டும்.. விக்கிரக ஆராதனை தேவனுக்கு அருவருப்பானது என்று தெரியுமே! புதிய ஏற்பாட்டில் பொருளாசையும் ஒரு விக்கிரக ஆராதனை என்பதை மறந்து விடக்கூடாது.
விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே.  எபே 5:5
பணம் “பாதாளம்” மட்டும் பாயும் என்பது பழமொழி. அது மட்டும் அல்ல அது தன்னை நம்புகின்ற யாவரையும் தப்பாமல் அங்கு அழைத்துச் செல்லும். எச்சரிக்கையுடன் இருப்போமாக!
பணத்தை கையாளும் விதம்
நேர்மையாய் உழைப்பவனுக்கு வரும் ஊதியத்தில் தேவனுடைய ஆசீர்வாதமும் இணைந்திருப்பதினால் அந்த ஆசீர்வாதமான பணத்தை தக்கபடி செலவழிக்க அறிந்திருக்க வேண்டும். நாம் எண்ணம் போல்  நடப்போமானால் உண்மையாய்  நேர்மையாய் உழைத்தும் கூட துயரமான முடிவுகளைத் தான் சந் திக்க நேரிடும்.

.
ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று நினைப்பீர்களானால், அதனை வாங்குவதற்குரிய பணம் நம்மி டத்தில் உள்ளதா என்று பார்க்க வேண்டும். ஒரு வேளை அப்பொருளை வாங்குவதற்குரிய பணம் நம்மிடத்தில் போதுமானதாக இல்லையென்றால், அப்பொருளை வாங்குவது தேவனுக்கு சித்தமில்லை. ஒரு வேளை நாம் ஆசைப்பட்ட பொருள் தற்சமயத்திற்கு தேவையல்லாததாய் இருக்கலாம். தேவனுக்கு சித்தமில்லாத ஒரு காரியத்தை நாம் பெற நினைத்தால், அது நம் வாழ்வில் ஆசீர்வாதமானதாய் இருக் காது.

.
குறைந்த வட்டியில்..
இன்று பிசாசு இக்காரியத்தில் தான் அநேகரை தன் வலையில் விழ வைக்கிறான். எப்படியெனில், பொருளை வாங்குவதற்கு பணம் போதவில்லையென்றால், குறைந்த வட்டியில்(டழயnஇ உசநனவை உயசன)  சீட்டுப்பணம் என்று பல விதங்களில் அக்குறிப்பிட்ட பொருளையோஃகாரியத்தையோ பெறுவதற்கான சலுகைகளை, இவ்வுலகம் அள்ளி வழங்குகிறது. கிறிஸ்தவர்களாகிய நாம் இவற்றில் ஜாக்கிரதையாய்   இருக்க வேண்டும்.
நம்முடைய விருப்பத்தில்.. சரி, ஒரு பொருளை வாங்கவேண்டும் என்று விரும்புகிறோம், தேவையான பணமும் நம்மிடம் உள்ளது, கண்ணைமூடி விட்டு வாங்கிவிடலாமா? அப்பொருள் நமக்கு அவசியமானது தானா? அப்பொருளினால் நம் ஆவிக்குரிய ஜீவியமும், பரிசுத்தமுள்ள வாழ்க்கையும் பாதிக்கப்படுமா? நம் சந்தோசத்தையும் சமாதானத்தையும், நாம் தேவனோடுக் கொண்டுள்ள உறவையும் பறித்து விடக்கூடியதா? என்றெல்லாம் ஆராய்ந்து, நிதானித்து பெற்றுக்கொண்டோமானால், அது நமக்கு ஆசீர்வாதமாய் அமையும்.

.
“ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்” (1கொரி 2:15).
இப்படிபட்ட விதங்களில் நாம், நம்முடைய பணத்தை கையாளும் போது, பண ஆசையோ, பொரு ளாசையோ நம்மை நெருக்காமல் நம்முடைய ஆத்துமாவும் காக்கப்படும். பணமும் விரயமாக செலவழியாது.

.
பட்டயமாய் மாறும் பணம்
ஆம்! பணத்தை சேமிப்பது முக்கியமே. ஆனாலும் அதுவே நம்முடைய பிரதான நோக்கமாய் மாறி விடக்கூடாது. பணத்தை சேமிக்கவேண்டும் என்ற ஆசையே நமக்கு பிரச்சனையாக மாறிவிடும்.
பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; நம் எல்லாருக்கும் தெரியும் அதே வசனத்தில் சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள் 1தீமோத் 6:10 ஆம்! பணம் விசுவாசத்தை விட்டு நழுவ செய்துவிடும். ஆகவே தான் ஐசுவரியவானிடம் எல்லாவற்றையும் விற்று தரித்திரனுக்கு கொடுத்து விட்டு என்னை பின்பற்றி வா என்றார். அந்த பணமே நமக்கு வேதனைகளாயும் கண்ணியாயும் மாறி நம்மை அழிக்கும் ஆயுதமாக மாறி விடும். எத்தனையோ உதாரணங்களை சொல்ல முடியும். ஆகவே போதும் என்ற மனப்பான்மையாக இருப்போம்.

.
நினைவில் நிறுத்தி கொள்ளுங்கள்
நம் மனம் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்குரிய காரியங்களாகிய நன்மை செய்வதற்கும், நற்கிரியைகளை நடப்பிப்பதற்கும், உதாரணமுள்ளவர்களாய் கிரியைகளைச் செய்வதற்கும் இல்லாதபடி முட்டுக்கட்டை போடுவதாய் இருக்குமானால், பணம் தான் நம் மனதை ஆளுகிறது. பண ஆசை வேர் விட்டு வளர்ந்து விடுகிறது என்று அர்த்தம்.

.
மேலும் ஐசுவரியம் பணம் விருத்தியடையும் போது நம் மனம் அதையே குறியாய் வெறியாய் எடுத்துக் கொள்ளாதபடி தேவனுடைய பரலோக ராஜ்யத்திற்குரிய காரியத்தை மாத்திரம் நிறைவேற்றும்படிக்கே நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் சங் 62:10

.
கர்த்தர் தாமே இப்படிப்பட்டக் காரியங்களில் நம் ஒவ்வொரும் உண்மையாக இருக்க உதவி செய்வாராக!

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]