CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

கிறிஸ்துவுக்குள் உரையாடும் ஜெபம்

கிறிஸ்துவுக்குள் உரையாடும் ஜெபம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

தேவனுக்கும் ஆபிரகாமுக்கும் இடையே நடந்த உரையாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆபிரகாமும், தேவனும் ஒன்றாக உறவாடி, நடந்து, உரையாடின அந்த அனுபவத்தை நானும் வாஞ்சிக்கிறேன். தேவன் எப்படி ஆபிரகாமை வெளியே அழைத்து, நட்சத்திரங்களைக் காட்டி அவைகளை எண்ணச்சொல்லியிருப்பார் என்பதை கற்பனை செய்யும் போது மெய்சிலிர்க்கிறது (ஆதி 15:5) ஒவ்வொரு உரையாடல் முடிந்ததும் கர்த்தர் விடைபெற்றுச் சென்றதை வியந்து பார்க்கிறேன். (ஆதி 17:22, 18:33)

ஆபிரகாமின் ஒவ்வொரு ஜெபமும் உரையாடல் ஜெபங்கள்தான். கர்த்தருடைய வெளிப்பாடுதான் அவனை சோதோமுக்காக மன்றாடத்தூண்டியது. இந்த மன்றாட்டு இருவரும் ஒருவரோடு ஒருவர் கலந்துரையாடின ஜெபம்                     (ஆதி 18:17-33) “நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே, எனக்கு என்ன தருவீர்?” என்று மிக சாதாரணமாக ஆண்டவரோடு ஆபிரகாம் உரையாடுவதைப் பாருங்கள். ஆபிரகாமின் சந்ததியாகிய உங்களுக்கும், அவனுடைய சகல ஆவிக்குரிய அனுபவங்களும், சொந்தம்.

நீங்கள் கிறிஸ்துவுக்குள் வந்துவிட்ட பிறகு இந்த உரையாடல் ஜெபம் உங்களுக்குத் திரும்பக் கிடைத்துவிட்டது. ஏதேனில் மனிதன் தேவனோடு உரையாடினான். விழுகைக்குப் பிறகு, அதை இழந்தான். ஆனாலும் உடன்படிக்கையின் மக்கள் அவ்வப்பொழுது இப்படிப்பட்ட உரையாடல் ஜெபங்களைச் செய்து வந்தார்கள். தேவன் மனிதனுக்குச் செவிகொடுப்பதை ஒரு நாளும் நிறுத்தவில்லை. தனது சகோதரனைக் கொன்று போட்ட காயீனிடம் கூட ஆண்டவர் உரையாடினார்.(ஆதி 4:9)

கிறிஸ்துவுக்குள், விசேஷித்த வாக்குத்தத்தங்களின் பேரில் விசேஷித்த உடன்படிக்கைக்கு கீழே நீங்கள் இருக்கிறீர்கள். (எபி 8:6) உரையாடல் ஜெபம் என்பது ஒவ்வொரு புது சிருஷ்டிக்கும் உரிய சிலாக்கியம். தேவனோடு கலந்துறவாடுவதுதான் தேவனோடுள்ள நட்புறவு. தேவனே இன்று உங்கள் சொந்தத் தகப்பனாகிவிட்டார். தகப்பனிடம் பதில், எதிர்பாராமல் பேசும் குழந்தை உண்டா? அப்படியே கிறிஸ்துவின் மணவாட்டியாக சபை இருக்கிறது. மணவாளனும், மணவாட்டியும், உரையாடி உறவாடாமல், ஒரு நெருக்கமான உறவு எப்படி சாத்தியமாகும்?

இயேசு பூமியில் வாழ்ந்த நாட்களில், அவருடைய சீஷர்கள் எப்பொழுதும் அவரோடு உரையாடிக்கொண்டே இருந்தார்கள். இயேசுவின் மாபெரும் போதனைகளும், இரண்டாம் வருகையைக் குறித்த வெளிப்பாடுகளும், சீஷர்கள் கேட்ட எளிய கேள்விகளுக்கான பதில்கள் தான். (மத் 24:3)

சீஷர்களை விட நீங்கள் எந்தவிதத்தில் குறைவானவர்கள்? பரிசுத்த ஆவியானவர் மூலமாக இயேசு உங்களுக்குள் வாழ்கிறார். (1கொரி 3:16)  என் ஆடுகள் என் சத்தத்தை அறியும் என்று வாக்குப்பண்ணியிருக்கிறார். (யோவா10:27) ஆதி பெந்தெகொஸ்தே நாள் முதலே பரிசுத்த ஆவியானவர் உங்கள் ஆவியோடு உறவாடி மகிழ துடித்துக் கொண்டிருக்கிறார். அவர் உங்கள் ஆவியுடன் பேசாத நேரமே இல்லை.

அந்நிய பாஷையில் ஜெபித்து அதை உங்கள் சொந்த மொழியில் வியாக்கியானம் செய்வது இரு வழி ஜெபத்திற்கு இன்றியமையாதது.                        (1 கொரி 14:2) ஆ! கிறிஸ்துவுக்குள் இருப்பதால் வரும் ஆசீர்வாதங்கள் எத்தனை! சர்வ வல்லவரோடு நமக்குக் கிடைக்கும் இந்த அரிய உறவை நாம் புறக்கணிப்பது அவருக்கு எத்தனை வேதனை!

அன்பானவர்களே, உங்கள் வாழ்வின் மிக முக்கியப் பிரச்சனைகளைக் குறித்து தேவன் உங்களோடு பேசவேண்டும் என்று ஏங்குகிறீர்களா? வேறு யாராவது எனக்காக தேவ சத்தம் கேட்கமாட்டார்களா என்று தேடிக் கொண்டிருக்கிறீர்களா? ஏன் இன்னும் காத்திருக்கிறீர்கள்? உங்களுக்குள் வாழ்பவர் உங்கயோடு உரையாட ஏங்கிக் கொண்டிருக்கிறார்? அவருடைய மெல்லிய சத்தத்தைக் கேட்பதற்கு உங்கள் ஆவியை உணர்வுள்ளதாக்கிவிட்டால் போதும். ஜெபிக்கும் பொழுதெல்லாம் அவர் உங்களிடம் பேச வேண்டும் என்று எதிர்பாருங்கள். தேவ சத்தம் கேட்பதற்கென்றே தனி நேரம் ஒதுக்குங்கள். உங்கள் வாழ்வின் மிகச் சிறிய காரியங்களைக் குறித்தும் தேவன் உங்களோடு பேசுவார். அமர்ந்திருந்து அவர் சத்தம் கேட்டுப் பழகுங்கள்.

ஆண்டவரே,

நான் உங்களுடைய ஊழியக்காரனாயிராமல் சிநேகிதனாயிருக்கிறேன். எனக்கு நீர் பிதாவினிடத்தில் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் அறிவிக்கிறீர். நான் பரிசுத்த ஆவியானவருடைய ஆலயமாயிருக்கிறேன். எல்லாரிலும் அதிகமாய் அந்நிய பாஷைகளைப் பேசி அதின் வியாக்கியானத்தையும் சொல்வேன். என் ஆவியினாலே உம்முடனே இரகசியங்களைப் பேசுகிறேன். எல்லாம் நான் கிறிஸ்துவுக்குள் இருப்பதால் உமக்கே நன்றி.

(யோ 15:15, 1கொரி 14:18-21)

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]