CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

கிறிஸ்துவுக்குள் நூறு மடங்கு பெருக்கம்

கிறிஸ்துவுக்குள் நூறு மடங்கு பெருக்கம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

ஈசாக்கு கேராரில் விதை விதைத்து நூறு மடங்கு பலனை அறுத்தான். ஈசாக்கின் ஆசீர்வாதங்களின் அம்சங்களை நாம் பார்க்கலாம்.

பாதக சூழ்நிலைகளிலும் பலன் தருவதுதான் அவரது ஆசீர்வாதம்:

அந்த தேசமெங்கும் கடுமையான பஞ்சம் நிலவி வந்தது. எனினும் ஈசாக்கின் நூறுமடங்கு அறுவடையை அதனால் தடுத்துவிட முடியவில்லை. (ஆதி 26:12) இயற்கை விதிகளால் இயக்கப்படாதவன் ஈசாக்கு. உலகப் பொருளாதார வீழ்ச்சி உண்மை விசுவாசியின் வாழ்க்கைப் பொருளாதாரத்தை பாதிக்க முடியாது. உங்களைச் சுற்றியுள்ள எல்லாம் தோற்கலாம். வியாபாரம் முடங்கலாம். ஆனால் உங்களுக்கு அது ஒரு பொருட்டல்ல. உங்கள் பக்கத்து வயல் விளைச்சல் அற்றுப் போகலாம். ஆனால் உங்களுடையது அப்படியல்ல. உங்களுடைய செழிப்பு தேவனிடமிருந்தேயன்றி வேறு எதிலிருந்தும் வருவதில்லை. விசுவாசத்தோடு உங்கள் ஆசீர்வாதங்களை உரிமை பாராட்டுங்கள்.

நூறு மடங்கானவை அவர் ஆசீர்வாதம்:

ஈசாக்கு நூறு மடங்கு அறுவடையை அறுத்தான். உங்கள் வாழ்விலும் ஊழியத்திலும் ஒருபோதும் முப்பது, அறுபது மடங்கு ஆசீர்வாதங்களில் திருப்தியடைந்துவிடாதீர்கள். நூறுமடங்கு ஆசீர்வதிப்பதே உங்களை குறித்த தேவசித்தம். அவர் சம்பூரணமான தேவன். அவரது அனைத்து ஆசீர்வாதங்களும் உங்கள் வாழ்வில் சம்பூரணமாக வேண்டும்.

ஏற்றக்காலத்தில் வருபவை அவர் ஆசீர்வாதம்:

பஞ்சம் வந்த அதே ஆண்டு ஈசாக்கு விதை, விதைத்து, நூறுமடங்கு அறுத்தான். தேவன் தம்முடைய ஜனங்களை மிகச்சரியாய் அவர்கள் தேவையிலிருக்கிற அந்தச் சரியான நேரத்தில் ஆசீர்வதிக்கிறார். தேவன் ஏற்ற காலத்தில் மழையை வாக்குப்பண்ணியிருக்கிறார். (உபா 11:14, 28:12, யோவேல் 2:23-24) நீங்கள் ஏற்றகாலத்தில் கனி கொடுப்பீர்கள். (சங் 1:3) காலந்தவறுதலும், அறுவடையில் தவறுதலும் ஆண்டவருடைய ஆசீர்வாதங்கள் அல்ல. இந்த சாபங்களிலிருந்து இயேசுவின் மூலமாய் நீங்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறீர்கள். ஏற்றக்காலத்தில் அறுவடையை எதிர்பாருங்கள். இந்த ஆசீர்வாதத்தை உரிமை பாராட்டுங்கள்.

பலுகிப்பெருகுவதே அவரது ஆசீர்வாதம்:

ஈசாக்கு ஐசுவரியவனாகி, வர வர விருத்தியடைந்து மகா பெரியவனானான். தேவனுடைய ஆசீர்வாதங்கள் எப்போதும் விருத்தியடைபவை. ஒரு தேவ பிள்ளைக்கு எப்போதுமே நாளை என்பது நேற்றைய விட நாளை நல்லதுதான். தேவன் கொடுப்பது எல்லாமே அதன் உச்சக்கட்டத்தை அடையும்வரை தொடர்ந்து வளர்ந்து கொண்டேதானிருக்கும். (ஆதி 26:13) நீதிமானுடைய பாதை அதிகம் அதிகமாய் பிரகாசிக்கும். (நீதி 4:19)

 எதிரிகளுக்கு எரிச்சலூட்டுபவை அவர் ஆசீர்வாதங்கள்:

ஈசாக்கு ஐசுவரியவானாகி விருத்தியடைந்ததால் பெலிஸ்தர் அவன் பேரில் பொறாமை கொண்டார்கள். (ஆதி 26:14) நீங்கள் அநேக ஆசீர்வாதங்களை, செல்வங்களை, கனத்தை ஜனங்கள் கண்டு பொறாமைப்படும்படி அடைய முடியும். யோசேப்பு, அவனது பெரிய தரிசனத்தின் நிமித்தம் சொந்த சகோதரர்களாலேயே பகைக்கப்பட்டான். (ஆதி 37:5,11) ஆரோனும், மிரியாமும் மோசேயின் மீதிருந்த மகிமையான அபிஷேகத்தைக் கண்டு அவன் மேல் பொறாமை கொண்டார்கள். (எண் 16:1-3) அப்போஸ்தலர்களும் திரள் கூட்டத்தை தங்கள் பக்கம் ஈர்த்ததினால் பகைக்கப்பட்டார்கள். (அப் 13:45) ஏன் இயேசுவேகூட பொறாமையினால் தான் சிலுவையில் அறையப்பட்டார். (மாற் 15:10) அன்பானவர்களே, ஜனங்கள் உங்கள் மேல் பொறாமை கொண்டால் மகிழ்ந்து களிகூறுங்கள். அது தேவ ஆசீர்வாதம் உங்கள்மேல் இருப்பதன் நிச்சயமான அடையாளம்.

எதிரிகளுடையதை விட ஏராளமானவை அவர் ஆசீர்வாதங்கள்:

கேராரின் ராஜாவும், ஈசாக்கு தங்களைவிட பலத்தவனானான் என்பதை ஒத்துக்கொண்டான். (ஆதி 26:16) எகிப்தின் ராஜா தேவஜனங்களைப் பார்த்து, இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்கள் நம்மிலும் ஏராளமானவர்களும் பலத்தவர்களுமாய் இருக்கிறார்கள் (யாத் 1:9) என்றான். புது சிருஷ்டிகளின் மேல் தேவ ஆசீர்வாதம் எப்போதும் அவிசுவாசிகளைவிட அதிகமாகவே இருக்கும். இந்த தனித்துவத்தை எதிர்பாருங்கள்.

எதிர்ப்புகளை ஏற்படுத்தும் அவர் ஆசீர்வாதங்கள்:

ஈசாக்கு மிகுதியாய் ஆசீர்வதிக்கப்பட்டதினால் பெலிஸ்தியர்களினால் துன்புறுத்தப்பட்டான். அவனைத் துரத்தி அவனுடைய துரவுகளை எல்லாம் தூர்த்துப் போட்டார்கள். (ஆதி 26:15-16) இஸ்ரவேலர் பெருகிக்கொண்டே போனதால் ஒடுக்கப்பட்டார்கள். (யாத் 1:9) உங்கள் ஆசீர்வாதங்களுக்காகவே நீங்கள் பாடுபடும் அளவுக்கு நீங்கள் ஆசீர்வதிக்கப்பட வேண்டும். கிறிஸ்துவுக்குள் வாழும் யாவருக்கும் இதுவே தேவ சித்தம்.

அன்பானவர்களே, ஈசாக்கு பெற்ற ஏழுவித ஆசீர்வாத அம்சங்களும் உங்களுக்கும் சொந்தம். ஈசாக்கு, ஆபிரகாமின் சரீரப்பிரகாரமான வாரிசு. நீங்கள் அவனது ஆவிக்குரிய வாரிசு. உங்களது முரணான சூழ்நிலைகளை ஒதுக்கித் தள்ளுங்கள். உணர்வோடு இந்த ஒவ்வொரு ஆசீர்வாதங்களையும் உரிமைபாராட்டி நூறுமடங்கு அறுவடையை அனுபவியுங்கள்.

ஆண்டவரே,

வறட்சியான காலங்களில் என் ஆத்துமாவை திருப்தியாக்குகிறீர். என் சத்துருக்களைப் பார்க்கிலும் நான் பலத்தவனாயிருக்கிறேன். எனக்கு வரும் நிந்தைகளிலும், துன்பங்களிலும் சந்தோஷப்பட்டு களிகூறுகிறேன், உமது மகிமையுள்ள ஆவியானவர் என்மேல் தங்கியிருக்கிறார். நான் நூறு மடங்கு பலனைப் பெறுவேன். எல்லாம் நான் கிறிஸ்துவுக்குள் இருப்பதால் உமக்கே நன்றி. (ஏசா 58;11, ஆதி 26:16, மத் 5:11-12)

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]