[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]
“தேவன் தெரிந்துகொண்டவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.”(ரோ 8.33)
அநேகர், “மற்றவர்கள் என்னைக் குற்றஞ்சாட்டுகிறார்கள். இதனால் நான் அதைரியமடைந்து விட்டேன், சோர்ந்து விட்டேன். முயற்சியை விட்டுவிட்டேன்” என்று சொல்லுகிறார்கள். ஆனால் கர்த்தர் உங்கள் மேல் வைராக்கியமாயிருந்து, உங்களை குற்றஞ்சாட்டுகிறவர்களைப் பார்த்து, “நீ யாரப்பா, என் பிள்ளைமேல் குற்றஞ்சாட்டுகிறது? நான் அவனுக்காக ஜீவனைக் கொடுத்து, நேசித்து, ஊழியக்காரனாக்கி இருக்கிறேன்” என்கிறார். “இரவும், பகலும் நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு, அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன், தாழத்தள்ளப்பட்டுப் போவான்”(வெளி 12:10)
நீங்கள் ஒன்றை திட்டமும் தெளிவுமாய் அறிந்த கொள்ளுங்கள். ஒரு மனுஷன் பாவம் செய்யும்போது, பரிசுத்த ஆவியானவர், அவனுக்குள் பாவ உணர்வை கொண்டு வந்து மனந்திரும்பச் செய்கிறார். ஆனால் பிசாசு, குற்ற உணர்வை கொண்டு வருகிறான். (Conviction is from the Holy Spirit. But Condemnation is from demonic power, from Satan)
“உன் குற்றம் மகா பயங்கரமானது. உனக்கு மன்னிப்பே கிடையாது. கர்த்தர் உன்னை வெறுத்து ஒதுக்கிவிட்டார். நீ கிறிஸ்துவை காலின் கீழே மிதித்துவிட்டாய். பரிசுத்த இரத்தத்தை, அசுத்தத்தின் இரத்தமாய் எண்ணிவிட்டாய். தற்கொலை செய்துகொள். உனக்கு வாழவே கிடையாது” என்று சாத்தான் சொல்லுவான், அதைரியப்படுத்துவான்.
பாருங்கள்! பேதுருவுக்கு வந்தது, பாவ உணர்வு. ஆகவே, அவர் மனங்கசந்து அழுது, கர்த்தருடைய கிருபையையும், இரக்கத்தையும் நாடி, பாவ மன்னிப்பைப் பெற்றுவிட்டார். மறுபடியும் தலைநிமிர்ந்து நடந்தார். வல்லமையாய் ஊழியம் செய்தார். ஆனால் யூதாஸ்காரியோத்துக்கு வந்தது, குற்ற உணர்வு. “குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால், பாவம் செய்தேன்” என்று புலம்பினார். அந்த குற்ற உணர்வினால், சாத்தான், யூதாஸ்காரியோத்தை, இயேசுவண்டை திரும்பி வரவிடவில்லை. அந்தோ! பரிதாபம் அவன் நான்று கொண்டு செத்தான்.
இதன் அடிப்படையில், துக்கத்தை அப். பவுல் இரண்டு பகுதியாய் பிரித்தார். “தேவனுக்கேற்ற துக்கம், பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல், இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது. லௌகிக துக்கமோ, மரணத்தை உண்டாக்குகிறது. பாருங்கள், நீங்கள் தேவனுக்கேற்ற துக்கமடைந்ததுண்டோ. அது உங்களிடத்தில் எவ்வளவு ஜாக்கிரதையையும், குற்றந்தீர எவ்வளவு நியாயஞ்சொல்லுதலையும், எவ்வளவு வெறுப்பையும், எவ்வளவு பயத்தையும், எவ்வளவு ஆவலையும், எவ்வளவு பக்தி வைராக்கியத்தையும், எவ்வளவு கண்டிப்பையும் உண்டாக்கிற்று. இந்தக் காரியத்திலே, நீங்கள் எல்லாவிதத்திலும் உங்களைச் சுத்தவான்களென்று விளங்கப்பண்ணினீர்கள்.” (2கொரி 7:10,11)
அப். பவுல், கொரிந்தியரை தட்டிக் கொடுத்துச் சொன்னார், “இப்பொழுது சந்தோஷப்படுகிறேன். நீங்கள் துக்கப்பட்டதற்காக அல்ல, மனந்திரும்புகிறதற்கேதுவானத் துக்கப்பட்டதற்காகவே சந்தோஷப்படுகிறேன். நீங்கள் ஒன்றிலும் எங்களால் நஷ்டப்படாதபடிக்கு, தேவனுக்கேற்ற துக்கம் அடைந்தீர்களே.” (2கொரி 7:9) ஆகவே, தைரியமாய் கிருபாசனத்தண்டை கிட்டிச்சேருங்கள்.
நினைவிற்கு :- “மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார். (சங் 103:12)
[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]