CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

சோர்ந்து போகாமல் ஜெபிப்பது

சோர்ந்து போகாமல் ஜெபிப்பது

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

உண்மையான ஜெபம் என்பது பரிசுத்த ஆவியோடு ஜெபிப்பதுதான். பரிசுத்த ஆவியின் உதவி அல்லாமல், ஜெபித்தால் நீங்கள் விரைவில் சோர்ந்து போவீர்கள். ஜெபம் தேவனுடைய கட்டளையாயிருக்கிறது. ஆகவே அதை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். நான் முன்பு சொன்னது போல ஜெபத்தில் நம்முடைய இருதயத்தை தேவசமுகத்தில் உயர்த்த, அதைத் தொடர்ந்து காத்துக்கொள்ள பரிசுத்த ஆவியின் உதவி அவசியம் தேவை.

எப்பொழுது சோர்ந்துபோகாமல் ஜெபிக்க வேண்டும். என்பதை இயேசுகிறிஸ்து தம்முடைய சீடர்களுக்கு ஒரு உவமையோடு விளக்கினார். (லூக்கா 18:1) சோர்வு ஏற்படுமானால் தொடர்ந்து ஜெபிக்க முடியாது. அந்த ஜெபத்தில் வல்லமையிருக்காது. ஆனால் சோர்வை மறைத்து அதை வெளியே காட்டிக்கொள்ளாதபடி ஜெபித்தால் அது மாய்மாலமான ஜெபமாகும். அப்படிப்பட்டவனைக் குறித்து யோபு “அவன் சர்வவல்லவர் மேல் மன மகிழ்ச்சியாயிருப்பானோ? அவன் எப்பொழுதும் தேவனை தொழுது கொண்டிருப்பானோ?”(யோபு 27:10) என்று கூறுகிறார். ஆகவே இதுபோன்ற மாய்மாலக்காரர்கள் அநேக கேடுகளைச் சந்திப்பார்கள் என இயேசுகிறிஸ்து எச்சரித்தார். (மத் 23-ம் அதிகாரத்தை வாசிக்கவும்)

நூற்றுக்கணக்கானோர் ஜெபத்தின் வல்லமையிலிருந்து வீழ்ந்து மிகச் சாதாரண நிலவரத்திற்கு வந்து விடுகின்றனர். ஆனால் பரிசுத்த ஆவியானவரின் உதவியால் மாத்திரமே அவர்கள் ஜெபத்தில் தரித்திருக்க முடியும். நம்முடைய ஜெபங்கள் தேவனாகிய கர்த்தருடைய செவிகளுக்கு ஏறிச் செல்லவேண்டுமானால் பரிசுத்த ஆவியானவர் நம்மை அந்த சிந்தையின் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.

யாக்கோபின் ஜெபத்தைக் கவனித்துப்பாருங்கள். அவன் ஜெபிக்க ஆரம்பித்தான், அதிலே உறுதியாக தரித்து நின்றான். “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப்போகவிடேன் என்றான்.” (ஆதி 32:26) என்று வாசிக்கிறோம். இதுதான் வைராக்கியமான தேவபக்தி.

“அவன் தூதனானவரோடே போராடி மேற்கொண்டான், அழுது அவரை நோக்கிக் கெஞ்சினான். பெத்தேலிலே அவர் அவனைக் கண்டு சந்தித்து, அவ்விடத்திலும் நம்மோடே பேசினார். கர்த்தராகிய அவர் சேனைகளின் தேவன் யேகோவா என்பது அவருடைய நாமசங்கீர்த்தனம். இப்போதும் நீ உன் தேவனிடத்தில் திரும்பு. தயவையும் நியாயத்தையும் கைக்கொண்டு, இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு” (ஓசியா 12:4-6)

ஆனால் இந்த ஜெபத்தில் பரிசுத்த ஆவியானவர் இல்லாமல் இருக்க முடியாது. பரிசுத்த ஆவியானவர் மூலம்தான் பிதாவாகிய தேவனிடத்தில் நாம் நெருங்கிச்செல்லும் சிலாக்கியத்தைப் பெறுகிறோம். “அந்தபடியே நாம் இருதறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலக்கியத்தை அவர் மூலமாய் பெற்றிருக்கிறோம்.” (எபே 2:18) என்று வாசிக்கிறோம். இதே கருத்தை யூதா புத்தகத்திலும் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டிருப்பதை வாசிக்கிறோம். அவபக்தியாய் நடக்கும் துன்மார்க்கன் மீது வரயிருக்கும் நியாயத்தீர்ப்பைச் சுட்டிக்காட்டிப் பரிசுத்தவான்களை சுவிசேஷத்தின் மீது தங்களுக்குள்ள விசுவாசத்தைக் காத்துக்கொள்ளவும் அதில் நிலைத்திருக்கவும் கூறி அவர்களை அனல் மூட்டி எழுப்புகிறார். ஏனெனில் ஆவியில்லாதவர்களுடைய நிலை எப்படியிருக்கும் என்பதையும், ஆவியிலே ஜெபித்து விழிப்புடனிருப்போரின் பிரதிபலன் என்ன என்பதையும் யூதா எடுத்துக்கூறியுள்ளார். விசுவாசத்தில் நிலைத்திருக்க ஜெபம் மிக மேன்மையான வழிமுறையாகும். ஜெபமின்றி விசுவாசம் காக்கப்படவே முடியாது. யூதா “நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின் மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி…….. இரக்கத்தைப் பெற காத்திருங்கள்.” (வ.20) என்று கூறுகிறார். ஆகவே பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணாமல் விசுவாசத்தைக் காத்துக்கொள்ளவும் நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளவும் முடியாது என்பதை தெளிவுபடுத்துகிறார். ஆனால் சாத்தானும், அந்திக்கிறிஸ்துவும் பரிசுத்த ஆவி அல்லாமலே மேலோட்டமான ஒரு ஜீவயம் போதும் என்றும் மேலோட்டமான பிரசங்கத்தையும், கேட்கும் தன்மையையும், ஜெபத்தையும் கொடுத்து உலகத்தையே வஞ்சித்துக்கொண்டிருக்கிறான். இவர்கள் ”“தேவபக்தியின் வேஷத்தை தரித்து அதன் பெலனை மறுதலிக்கிறவர்களாயிருப்பார்கள்”                                         (2 தீமோத்தேயு 3:5)

ஜெபம்

பரிசுத்த பிதாவே, உம்முடைய பரிசுத்தஆவியை எனக்கு அனுப்பி என்னை நிறைத்து வல்லமையோடு ஜெபிக்கவும் உமக்கு சேவை செய்யவும் எனக்கு உதவி செய்யும். உம்மோடு ஐக்கியம் கொள்ளும் வேளைகளில் உலகக்கவலைகள் என்னை இழுத்துவிடாமலிருக்க என்னைத் தொடர்ந்து உம்முடைய வல்லமையால் நிரப்பியருளும். இரட்சிப்பு உம்மில் மாத்திரமே உள்ளது என்ற நிச்சயத்தை எனக்குத்தாரும். சுவிசேஷத்தை வார்த்தையாலும் செயலாலும் நான் மற்றவர்களுக்குச் சொல்ல என்னைப் பெலப்படுத்தும். ஏனென்றால் இந்த வேலை உம்முடையது. என் முழு ஆத்துமாவோடும் முழு சிந்தையோடும் விசுவாசத்தோடும், உண்மையோடும் உம்மில் நிலைத்திருக்கும் நிச்சயத்தை எனக்குத் தாரும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக ஆமென்.

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]