CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

ஜீவ தண்ணீர்

ஜீவ தண்ணீர்

[cmsmasters_row data_width=”boxed” data_padding_left=”3″ data_padding_right=”3″ data_top_style=”default” data_bot_style=”default” data_color=”default” data_bg_position=”top center” data_bg_repeat=”no-repeat” data_bg_attachment=”scroll” data_bg_size=”cover” data_bg_parallax_ratio=”0.5″ data_padding_top=”0″ data_padding_bottom=”50″][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

என் நண்பரொருவரை மலையுச்சிக்குக் கூட்டிச் சென்ற மக்கள், “நீ உன்னைக் காப்பாற்றிக்கொள்ள விரும்பினால் உன் மதத்தைக் கைவிட்டு விடு. இல்லாவிட்டால் உன்னை தூக்கி எறிந்துவிடுவோம்” என்று பயமுறுத்தினர். அவரோ, ‘நான் குற்றமேதும் செய்யவில்லை. என்னைத் தண்டிப்பானேன்? என் மீட்பரைப் பற்றி மட்டுமே மற்றவருக்குச் சொல்கிறேன்’ என்றார். அவர் தம் விசுவாசத்தைக் கைவிடமாட்டார் என்று கண்டுகொண்ட மக்கள், “இப்பொழுதே உன்னைக் கொல்கிறேன்” என்று சூளுரைத்து மலையுச்சியிலிருந்து கீழே தள்ளினர். ‘தேவனே உம்முடைய கரங்களில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்’ என்று கூறியபடியே பள்ளத்தில் வீழ்ந்த அவர்மீது அம்மக்கள் கற்களை வீசியெறிந்தனர். ‘மரணமடைந்து விட்டான்’ என்று கூறி, பின்னர் கலைந்து சென்றனர். அரைமணி நேரத்துக்கு மயக்கமுற்ற நிலையில் இருந்த பின் உணர்வுற்றுத் தம் தலையை உயர்த்திப் பார்த்தார். அவர் தம் உடல் முழுவதும் இரத்தம் பெருக்கெடுத்தோடுவதைக் கண்டு ‘எனக்குத் துணை செய்ய யாரும் இல்லை. எல்லோரும் என்னைத் தனியே தவிக்க விட்டுவிட்டனர்’ என்று புலம்பினார்.

அப்போது இனிமையானதொரு குரல் அவருக்குக் கேட்டது. ‘எல்லோரும் உன்னைக் கைவிடலாம். ஆனால் நான் உன்னோடிருக்கிறேன்’ என்றது. யாரோவொரு உத்தமன் தனக்கு உதவி செய்ய வந்திருப்பதாக நினைத்துக்கொண்டார். சுற்றிலும் பார்த்த போது ஒரு மனிதர் வந்து கொண்டிருந்ததைக் காணமுடிந்தது. அம்மனிதர் அவரை ஒரு குன்றினருகில் சாய்ந்த நிலையில் உட்காரவைத்து, அவர் குடிப்பதற்குத் தண்ணீர் கொண்டு வந்தார். தனது மரணவேளைக்கு முன் தனக்குத் துணைசெய்ய வந்திருப்பவராகக் கருதி அவருக்குத் தன் நன்றியைத் தெரிவித்தாராம் என் நண்பர். அம்மனிதர் யாரென்று அவருக்குத் தெரியாவிட்டாலும், ஆண்டவரின் பிரசன்னம் தன்னோடிருப்பதை அவரால் உணர முடிந்தது.

தண்ணீரை மொண்டு வருவதற்கு எவ்வித பாத்திரமும் அங்கில்லை. அம்மனிதர் தம் கரங்களிலேயே அதைக் கொண்டு வந்தார். இருமுறை அவ்வாறு நீர் கொண்டு வந்து பருகச்செய்தார். மூன்றாம் முறை அவர் வந்தபோது, அவர் கைகளில் காயங்களிருப்பதை நண்பர் கண்டார். அக்காயங்களைக் கண்டதும் அவருக்கு ஆச்சரியமுண்டாயிற்று. அத்துடன் அவர் யாரென்பதும் விளங்கிவிட்டது. ‘என் ஆண்டவரே, என் தேவனே’ என்று அவர் பாதம் பணிந்தார். ‘என்னைக் கைவிட்டுவிட்டீரே என்று நினைத்தேன். ஆனால் இதோ என்னுடனிருக்கிறீர்’ என்று கூவி ஆர்ப்பரித்தார். அத்துடன் அந்த மனிதரும் மறைந்து விட்டார். படுகாயமுற்றிருந்த நண்பருக்குச் சில வினாடிகளில் பூரண சுகம் கிடைத்து. மரணத்தருவாயிலிருந்தவர் முற்றிலும் குணமானார்.

 

தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர் (சங் 46:1)

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]