CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

ஜெபத்தின் தன்மை

ஜெபத்தின் தன்மை

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

நற்பிரகாசமான அறிவு, ஜெபத்தின் தன்மைக்கும், ஜெபத்தில் ஏறெடுக்கும் காரியத்திற்கும் பாராட்டத்தக்க பயனைத்தரும். நன்மை எது தீமை எது என்பதை பகுத்தாயத்தக்க பயிற்சிக்கப்பட்ட அறிவும், மனிதனுடைய பரிதபிக்கத்தக்க நிலையை அறிந்து கொள்ளத்தக்கதான நல்லுணர்வும் அல்லது தேவனுடைய இரக்கத்தைக்குறித்த அறிவும் ஒருவருக்கு இருக்கும்பொழுது மற்றமனிதர்கள் எழுதி வைத்திருக்கும் ஜெபக்குறிப்புகள் தேவையே இல்லை. மிகுந்த வேதனையிலிருக்கும் ஒரு மனிதனுக்கு அழுவதற்கு கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாததுபோலவே பரிசுத்தஆவியானவர் நம்முடைய அறிவை மனக்கண்ணைத் திறந்திருக்கும்பொழுது ஜெபிப்பதற்கு மற்றவர்கள் கற்றுத்தரவேண்டியதில்லை. மற்றவர்களுடைய ஜெபக்குறிப்புகளும் நமக்கும் தேவைப்படாது. உணர்ச்சிகளும், உள்ளுணர்வுகளும், அழுத்தங்களும் ஆவியில் வரும்பொழுது அந்த ஆவி தேவனிடத்தில் நாம் வேண்டிக்கொள்வதற்கான தவிப்பை உண்டாக்கும்.

தாவீது, நரகத்தின் வேதனையால் பிடிக்கப்பட்டபொழுது, அதன் துக்கம் அவனைச் சூழ்ந்து கொண்டபொழுது, அங்கு பேராயர் தன்னுடைய நீண்ட அங்கியுடன் வந்து “கர்த்தாவே, என்னை இரட்சியும்” என்று கற்றுத்தரவேண்டிய அவசியமிருக்கவில்லை.

“மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாள இடுக்கண்கள் என்னைப் பிடித்தது. இக்கட்டையும் சஞ்சலத்தையும் அடைந்தேன். அப்பொழுது நான் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு : கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும் என்று கெஞ்சினேன். கர்த்தர் கிருபையும் நீதியுமுள்ளவர், நம்முடைய தேவன் மனஉருக்கமானவர். கர்த்தர் கபடற்றவர்களைக் காக்கிறார். நான் மெலிந்து போனேன், அவர் என்னை இரட்சித்தார்.”(சங் 116:3-6)

தேவனுக்கு முன்பாகத் தன்னுடைய இருதயத்தை ஊற்றிவிடுவதற்கு மற்றவர்கள் தயாரித்து வைத்திருக்கும் ஜெபக்குறிப்புகளை தாவீது நாடவில்லை. வியாதியின் கொடூரத்தால் வேதனையைப் போக்கிக்கொள்ளும் வழியாக தன் அருகாமையிலிருப்பவரிடம் மிகுந்த தவிப்போடு முறையிடுவான். தாவீதுடைய கூப்பிடுதலைக் கவனித்துப்பாருங்கள். “கர்த்தாவே, என்னைக் கைவிடாதேயும்; என் தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும். என் இரட்சிப்பாகிய ஆண்டவரே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும்” (சங் 38:21-22) என்று கூப்பிடுகிறார். இரட்சிப்பின் தேவன் ஸ்தோத்தரிக்கப்படத்தக்கவர். தேவனுடைய கிருபையை பெற்ற அனைவருக்கும் தேவனைக் கூப்பிடும் இப்படிப்பட்ட அனுபவங்கள் உண்டாகும்.

ஜெபவாழ்வில் தொடர்ந்து முன்னேற உங்களுக்குப்பிரகாசமான மனக்கண் அல்லது அறிவு இன்றியமையாததாகும்.

இயேசு கிறிஸ்துவை ஒரு எளிமையான ஆத்துமா ஏற்றுக்கொள்ள விரும்பும்பொழுது பிசாசானவன் பலவிதமான தீமையான காரியங்கள், தந்திரங்கள், சோதனைகள் இவைகளைக் கொண்டுவந்து அதைத் தடை செய்ய முயற்சிப்பான் என்பதை தேவனுடைய மக்கள் அறியாத காரியம் அல்ல. தேவனுடைய முகத்தை நாடுவதில் சோர்ந்து போகச்செய்வதும் “உன் மீது தேவன் இரக்கம் காட்ட விரும்பவில்லை” என்ற எண்ணத்தையும் கொண்டு வந்து உங்களை பெருத்த சோதனைக்குள்ளாக்குவான். சாத்தான் “நீ நன்றாக ஜெபிக்கிறவனாக இருக்கலாம். ஆனால் எதையும் நீ மேற்கொள்ள முடியாது. உன்னுடைய இருதயத்தைப்பார். அது கடினமடைந்து, குளிர்ந்து, மந்தமாகி, மரித்துப்போயிருக்கிறது. நீ ஆவியில் ஜெபிப்பதில்லையே. நீ உண்மையோடு ஜெபிப்பதில்லையே. நீ தேவனுக்கு முன்பாக ஜெபிப்பது போல் பாசாங்கு செய்து கொள்கிறாய். ஏனென்றால் உன்னுடைய எண்ணங்கள் எங்கெங்கோ அலைந்து திரிகிறதே, “மாயக்காரனே, என்னை விட்டு விலகிப்போ” என்று தான் அவர் சொல்லுவார். அப்படியானால் உன் ஜெபம் வீண். ஜெபத்தில் போராடி என்ன பயன்?” என்று சொல்லுவான். உங்களுடைய அறிவிலே சரியான தெளிவற்றவர்களாக இருப்பீர்களானால் “கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் மறந்தார்” (ஏசா 49:14) என்றுதான் நீங்கள் முறையிடுவீர்கள். ஆனால் உங்களுக்குப் பிரகாசமான மனக்கண் அல்லது பிரகாசமான அறிவு இருக்குமானால் “நல்லது எதுவானாலும் நான் தேவனைத் தேடுவேன், அவருக்குக் காத்திருப்பேன்“ தேவன் எனக்கு ஆறுதலான பதில் தராவிட்டாலும் தேவன் என்னுடைய ஜெபத்திற்கு தொடர்ந்து மௌனமாக இருந்தாலும் நான் அவரை நோக்கி ஜெபிப்பதை நிறுத்தமாட்டேன். அவர் யாக்கோபை நேசித்தார். ஆனாலும் அவன் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதற்கு முன்பாக போராட வேண்டியிருந்தது.                                                                         (ஆதி 20-ம் அதிகாரம் ஏசா 40-ம் அதிகாரம் வாசிக்கவும்)

தேவன் ஜெபத்திற்கு பதிலளிப்பதற்கு தாமதமாகத் தோன்றினாலும் அது நம்மீது அவருக்குள்ள அதிருப்தி என்று கருதக்கூடாது. சிலவேளைகளில் அவருக்கு அன்பான பரிசுத்தவான்களுக்குக்கூட தமது முகத்தை மறைக்கிறார். “நானோ யாக்கோபின் குடும்பத்துக்குத் தமது முகத்தை மறைக்கிற கர்த்தருக்காகக் காத்திருந்து, அவருக்கு எதிர்பார்த்திருப்பேன்.” (ஏசா 8:17) ஜெபத்தில் தரித்திருக்க தேவன் தமது பிள்ளைகளுக்கு உதவிசெய்ய ஆசையாயிருக்கிறார். பரலோகத்தின் வாசலை எப்பொழுதும் வந்து தட்டுவதை அவர் காணும்பொழுது அதில் பிரியப்படுகிறார். ஆனாலும் நீங்கள் “தேவன் என்னை சோதிக்கிறார் அல்லது அவருக்கு முன்பாக என்னுடைய பிரச்சனையின் நெருக்கத்தில் நான் தவிப்போடு ஜெபிக்கவேண்டுமென விரும்புகிறார். எல்லா தேவைகளுக்கும் அவரை மாத்திரம் சார்ந்து கொள்ள அவர் விரும்புகிறார்” என்று ஒருவேளை சிந்திக்கக்கூடும்.

ஜெபம்:

அன்புள்ள பரலோகபிதாவே, என்னுடைய ஜெபத்திலே நான் இருதயத்திலுள்ளதை உண்மையோடு வெளிப்படுத்த நீர் விரும்புகிறபடியால் நான் நன்றி செலுத்துகிறேன். என்னுடைய ஆழ்ந்த வேதனையின் மத்தியில் மாய்மாலமான சிரிப்பைக்காட்டி மறைத்துக்கொள்ளாமல் இயேசுகிறிஸ்துவின் மூலமாக நான் இருக்கிறவண்ணமாக உம்மிடத்தில் வர எனக்குக் கற்றுத் தந்திருக்கிறபடியால் நான் நன்றியோடு துதிக்கிறேன். என்னுடைய சொந்த குறைபாடுகளையும், போதாமைகளையும். பாவங்களையும் அறியாதிருந்த என்னை உணர்த்தி நான் நன்றியோடு ஸ்தோத்திரம் செலுத்துகிறேன். என்னுடைய தவிப்பும் என்னுடைய ஆத்துமாவின் உண்மையான புலம்பலும்தான் உண்மையான ஜெபம் என்பதை இதுவரை அறியாதிருந்தேன். என்னுடைய ஜெபங்களில் தவிப்பை நீர் காணமுடிகிறபடியால் நான் நன்றி செலுத்துகிறேன். உம்முடைய மீட்பின் அன்பினாலே உம்முடைய பரிசுத்த ஆவியானவரை அனுப்பி என்னுடைய ஆவியிலும், சிந்தையிலுமுள்ள வேதனையை நீக்க எனக்கு உதவி செய்யும். என்னுடைய இருதயத்திலுள்ளவைகளை எல்லாம் என்னுடைய வார்த்தைகளில் கொண்டுவர முடியாது. என்னுடைய இருதயத்தின் வேதனையை அறிந்திருக்கிற உம்முடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]