[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]
“சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.” (லூக் 18:1)
ஜெபம் நமக்கும், கர்த்தருக்கும் இடையே பெரிய ஐக்கியத்தை உண்டாக்குகிறது. ஜெபம்பண்ணி, பாவ அறிக்கை செய்து, இரட்சிக்கப்படுகிறோம். ஜெபிக்கும்போது. அப்பா பிதாவே, என்று உரிமையோடு தகப்பனிடத்திலே பேசுவதுபோல, கர்த்தரிடம் மனந்திறந்து பேசுகிறோம். நாம் ஜெபத்திலே மற்றவர்களுக்கு உதவி செய்ய, பரிந்து பேசுவதின் மூலம், அவர்களுடைய வாழ்க்கையிலே, மறு மலர்ச்சியைக்“ கொண்டு வருகிறோம். ஆகவே சோர்ந்து போகாமல் ஜெபியுங்கள்.
மத் 7:7-லே “கேளுங்கள் தரப்படும். தட்டுங்கள் திறக்கப்படும். தேடுங்கள் கண்டடைவீர்கள்” என்றிருக்கிறது. ஆனால் இந்த வசனம், மூல பாஷையிலே “கேளுங்கள் கேட்டுக்கொண்டேயிருங்கள்” என்று இருக்கிறது. சோர்ந்து போகாமல் பதில் கிடைக்கிற வரைக்கும், விசுவாசத்தோடே கர்த்தரிடத்தில் கேட்டுக்கொண்டேயிருங்கள். ஒரு தடவை கேட்டு விட்டோம், போதும் என்று நிறுத்திவிடாதிருங்கள். திறக்கிற வரையிலும், பரலோக கதவைத் தட்டிக்கொண்டேயிருங்கள்.
தெருவில் விளையாடுகிற பிள்ளைகள், தண்ணீர் குடிக்க வேண்டும் என்றால், தங்கள் வீட்டுக் கதவை தட்டும். திறக்கும் வரை காத்திராமல், மறுபடியும் பிள்ளைகளோடு சேர்ந்த விளையாட ஓடிப்போய்விடும். நாம் அப்படியிருக்கக்கூடாது. ஜெபத்தை விட்டுவிடவும் கூடாது. சோர்ந்து விடவும் கூடாது. நிச்சயமாய் பரலோக கதவு திறக்கும். மகிழ்ச்சியுண்டாகும்.
இயேசு, அதற்கான ஒரு உவமையை சொன்னார். “ஒருபட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான். அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான். அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள். அவள் அவனிடத்தில் போய். எனக்கும், என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயம் செய்ய வேண்டும் என்று விண்ணப்பம் பண்ணினாள்.
வெகு நாட்களுக்குப் பிறகு, இந்த விதவை, என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவளுக்கு நியாயம் செய்ய வேண்டும் என்று, தனக்குள்ளே சொல்லிக் கொண்டான். இந்த உவமையை சொன்ன பிறகு, கர்த்தர் சொன்னார், “அந்தப்படியே, தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில், நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ? சீக்கிரத்திலே மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார். (லூக் 18:2-8)
நம்முடைய தேவன் அன்புள்ளவர். மனதுருக்கமுள்ளவர். அவர் அந்த நியாயாதிபதியைப் போல, கடின இருதயமுள்ளவர் அல்ல. அன்புள்ள தகப்பன், அவருடைய பிள்ளைகளாகிய நமக்கு நியாயம் செய்யாமலிருப்பாரோ? நிச்சயமாய் நியாயம் செய்வார். கேட்க வேண்டியது உங்களுடைய கடமை. நீங்கள் ஜெபிக்காமல் பெற்றுக்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கக்கூடாது. கிறிஸ்து நமக்கு முன் மாதிரியாய் எப்போதும் ஜெபம்பண்ணும்படி, பிதாவின் பிரசன்னத்துக்கு கடந்துபோனார். ஜெபத்தை, கிறிஸ்தவர்களுக்கு ஒரு சட்டமாகவே கர்த்தர் வைத்திருக்கிறார். ஜெபத்திலே தொடர்ந்து கர்த்தரிடத்தில் கேளுங்கள்.
நினைவிற்கு :- “கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள். அவர் சமூகத்தை நித்தமும் தேடுங்கள்” (1நாளா 16:11)
[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]