CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

ஜெபமும் ஆவலும்

ஜெபமும் ஆவலும்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

“தத்துவங்களையும், இறையிலையும் கற்று வீணாக மனதை அலட்டிக் கொள்ளாமல், செருப்பு செப்பனிடும் தொழிலேயே தொடர்ந்து இருக்கும் படியாக என்னைக் கேலி செய்தவர்கள் உண்டு. தேவன் உண்டென்ற நிச்சயம் எனக்குள்ளாக அனல் விட்டு எரிந்து கொண்டிருந்ததால் நான் என்னுடைய பேனாவை எடுத்து, நான் கண்டவைகளை எழுத ஆரம்பித்தேன்”

ஆவல் என்பது வெறும் விருப்பமல்ல. அது வெகு காலமாக புதைந்திருந்த ஆசையாகும். ஆவிக்குரிய காரியங்களில் ஜெபத்திற்கு அது ஒருமுக்கியமான பக்கத்துணையாகும். அது அதிமுக்கியமானதொன்றாக இருப்பதால், ஜெபத்திற்கு ஆவல் முற்றிலும் தேவையுள்ள ஒன்றாக இருக்கிறது. ஜெபத்திற்கு முன் வருவது ஆவல். அதோடு இணைந்து வருவதும், பின் தொடர்ந்து வருவதும் அதுதான். ஜெபத்திற்கு முன்னால் செல்வது ஆவல். அதனால்தான் ஜெபம் செய்வது திவீரமடைகிறது. ஜெபம் என்பது தேவனிடத்தில் ஏதாவதொன்றைக் கேட்பதாக இருப்பின், ஜெபம்தான் அதை வெளிப்படுத்தும். ஜெபம் வெளிப்படையாக வெளிவருவதாகும். ஆசை அல்லது ஆவல் அமைதியானது. ஜெபம் கேட்கப்படுவது. ஆசை கேட்க இயலாதது. ஆசை அதிகமானால், ஜெபத்தின் வலிமை அதிகமாகும். ஆசை இல்லையெனில் ஜெபம் வெறும் அர்த்தமின்றி, கர்த்தரிடம் பேசும் வார்த்தைகளாகிவிடும். மனமில்லாத, உணர்வற்ற, உண்மையான ஆவலின்றி கடமைக்காக செய்யப்படும் ஜெபத்தை, நாம் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவ்விதம் செய்யப்படும் ஜெபம்

மதிப்புமிக்க நேரத்தை வீணடிப்பதாகும். மேலும் அதிலிருந்து எந்தவிதமான ஆசீர்வாதமும் கிடைக்காது.

ஒருவேளை உண்மையாக ஆவல் இல்லாமல் போனாலும், நாம் ஜெபிக்க வேண்டும். கண்டிப்பாக ஜெபிக்க வேண்டும். ஆவலும், வெளிப்படுத்துதலும் அதிகரிக்கப்படுவதற்கு, “கண்டிப்பாக” என்பது தவீர்க்க முடியாதது. இதை தேவனுடைய வார்த்தையும் உறுதி செய்கிறது. நம்மை நாமே நிதானித்தறிந்தால் நாம் கண்டிப்பாக ஜெபிக்கவேண்டுமென நாம் அறிந்துகொள்வோம். நாம் ஜெபிக்கவேண்டுமென உணருகிறோமோ இல்லையோ நம்முடைய ஜெபிக்கும் பழக்கத்தை தீர்மானிக்க நம் உணர்வுகளுக்கு இடமளிக்கக் கூடாது. அவ்விதமான சூழ்நிலைகளில், ஜெபிப்பதற்கு ஆவல் வரும்படி ஜெபிக்க வேண்டும். ஏனெனில் அவ்விதமான ஆவல் தேவனால் அருளப்படுவதும், பரலோகத்திலிருந்து உண்டாவதும் ஆகும். ஆவல் வரும்படி ஜெபிக்க வேண்டும். அப்போது அது எவ்விதமாக தீர்மானிக்கிறதோ அவ்விதமாக ஜெபிக்க வேண்டும். ஆவிக்குரிய ஆவல் இல்லாவிட்டால் நாம் வருத்தப்பட வேண்டும். அது இல்லாதது நம்மை துக்கப்படுத்த வேண்டும், நம்முடைய ஜெபங்கள் “ஆத்துமாவின் உண்மையான ஆவலாக” இனி வெளிப்படும்படியாக அமைய, அது அருளப்படும்படி ஆர்வத்துடன் அதை நாட வேண்டும்.

நமக்கு ஒரு பொருள் தேவை என்ற உணர்வு இருந்தால் அது உள்ளார்ந்த ஊக்கமுள்ள ஆவலை உண்டாக்கும் அல்லது உண்டாக்கவேண்டும். தேவனுக்கு முன்பாக தேவை என்ற உணர்வு உறுதியாக இருக்கும் போது, ஆவல் அதிகமாக இருக்க வேண்டும். ஜெபிப்பதற்கு அதிக முனைப்பாக இருக்க வேண்டும். “ஆவியில் எளிமையுள்ளவர்கள்..” (மத்தேயு 5.3) ஜெபிப்பதற்கு பெரிதும் திறமைமிக்கவர்கள்.

பசி என்பது சரீரப்பிரகாரமான ஒரு தேவையாகும். அது உணவின் தேவையை உணர்த்துகிறது. அவ்விதமாக, உள்ளான ஆவிக்குரிய தேவையின் உணர்வு ஆவலை உண்டாக்குகிறது. அவ்வித ஆவல் ஜெபமாக வெளிப்படுகிறது. ஆவலோடு கேட்பது என்பது நம்மிடம் இல்லாத, நமக்கு தேவையான, தேவன் நமக்கு வாக்களித்த, அவருடைய இரக்கத்தின் சிங்காசனத்தை நோக்கி ஊக்கமுடன் வேண்டுதல் செய்யும்போதும் நிறைவேறத்தக்க ஒன்றாகும். ஆவிக்குரிய ஆவல் மேலான நிலைக்கு எடுத்துச் செல்லப்படுவது, புதிய பிறப்பிற்கு ஆதாரமானது. அது புதுப்பிக்கப்பட்ட ஆத்துமாவில் பிறக்கும். “நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப் போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்” (1பேதுரு 2.3).

இருதயத்திலே இவ்விதமான பரிசுத்த ஆவல் இல்லாதது, ஆவிக்குரிய பரவச நிலையில் குறைவுபடுதலையோ அல்லது இதுவரை புதிய பிறப்பு ஏற்படாத நிலையையோ காட்டுகிறது. “நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் திருப்தியடைவார்கள்” (மத்தேயு 5.6). சரீரப்பிரகாரமான பசி ஜீவனுள்ள சரீரத்திற்குதான் பொருந்தும். உயிரற்ற உடலுக்கு அல்ல. ஆவிக்குரிய விருப்பம் தேவனுடைய ஜீவனோடு இருக்கும் ஆத்துமாவுக்குத்தான் பொருந்தும். புதிப்பிக்கப்பட்ட ஆத்துமா நீதியின்மேல் தாகத்துடனும், பசியுடனும் இருப்பதைப்போல், இந்த பரிசுத்தமான ஆவல்கள் ஊக்கம் மிகுந்த வேண்டுதலான ஜெபமாக வெளிப்படுகிறது.

ஜெபத்தில் நாம் பிரதான ஆசாரியராகிய இயேசுகிறிஸ்துவின் பெயரிலும், மேன்மையிலும் ஜெபிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். ஜெபத்துக்குரிய நிபந்தனைகளையும், ஆற்றல்களையும் ஆராயும்போது, மனித இருதயத்தில் குடிகொண்டுள்ள அதின் முக்கியமான தேவையைக் காண்கிறோம். அது நமது வெறும் தேவையல்ல. அது நமது தேவைக்கான இருதயத்தின் ஏக்கம். மேலும் அதற்காக நாம் ஜெபிக்கும் படியாக உந்தப்படுகிறோம். ஆவல் என்பது நம் சித்தத்தை செயல்படுத்துவது. சில நல்ல காரியங்களுக்காக உள்ளான இயல்பில் மகிழ்ச்சியடையும் நமது ஆவல் ஒரு பலமான உணர்வுள்ளதாகும். ஆவலுக்குத் தெரிந்துகொள்ளுதலும், நிலைப்படுத்தலும் உண்டு. மேலும் அது ஒளிவீசும். அதைச் சார்ந்துள்ள ஜெபம் வெளிப்படையாகவும், நமக்கு நம்பிக்கையளிப்பதாகவும் இருக்கும்.

பரிசுத்த ஆவலானது பக்தியுள்ள சிந்தையால் உதவி செய்யப்படுகிறது. நமது ஆவிக்குரிய தேவைக்காக தியானம் செய்யும் போது, அதை ஒழுங்குபடுத்த தேவன் ஆயத்தமாகவும், தயாராகவும் இருக்கிறார். என்பதும் ஆவலை வளர்க்கும். ஜெபிப்பதற்கு முன்னால் செய்யப்படும் ஆழ்ந்த சிந்தனையானது, ஆவலை அதிகரிக்கும். அதை இன்னும் அதிகமாக வலியுறுத்தும், மேலும் சுயநலமான ஜெபத்திலிருந்தும், அலைக்கழிக்கும் சிந்தனையிலிருந்தும் நம்மை விடுவிக்கும். வெளியே காணப்படுகிற காரியங்களுக்கு காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தம் அவாவின் மேல் கவனம் செலுத்தத் தவறிவிடுகிறோம். மேலே சரியாகக் தெரியலாம். ஆனால் உள்ளான ஜீவன் வறண்டு, கிட்டத்தட்ட கருகிப்போய் விடுகிறது.

தேவன் மேல், பரிசுத்த ஆவியின் மேல், கிறிஸ்துவின் நிறைவின்மேல் உள்ள ஆவல் மங்கிப்போவது, நம்முடைய ஜெபக்குறைவின் காரணத்தினாலா, மற்றும் ஜெபத்தை செயற்படுத்துவதிலிருந்து நாம் குறைவுபடுவதினாலா? பரம பொக்கிஷங்களைக் குறித்து உள்ளான ஆசையுடையவர்களாக, உண்மையான தாகம் கொள்ளுகிறோமா? வல்லமையான போராட்டங்களுக்காக நமது ஆத்துமாக்களைத் தாண்டி விடுகிறோமா? அனல் கொழுந்துவிட்டு எரியவில்லை. ஆத்துமாவின் அனல் குறைந்து வெதுவெதுப்பாய் ஆனது. இதுவே லவோதிக்கேயா கிறிஸ்தவர்களின் கவலைக்கிடமான, மோசமான நிலைக்கு முக்கியமான காரணமாயிருந்தது என்பதை நாம் நினைவுகூரவேண்டும். அவர்கள் “…நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவிய சம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறையுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்” என்று எழுதப்பட்டுள்ளது (வெளிப்படுத்தல்3.17)

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]


Warning: Array to string conversion in /home/u579205003/domains/zionchurch.lk/public_html/wp-content/plugins/fixed-bottom-menu/lib/class-fixedbottommenu.php on line 192