CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

ஜெபமும் ஆவலும்

ஜெபமும் ஆவலும்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

இடைவிடாத ஜெபத்திற்கு மிகுந்த ஆர்வமுள்ள தீவிரமான விருப்பமே அடிப்படையாகும். அது மேலோட்டமான, மங்கலான மனப்போக்கல்ல. ஆனால் அது ஒரு தீவிரமான ஏக்கம். ஒரு தணியாத ஆழ்ந்த விருப்பம், அது இருதயத்தை பெலப்படுத்தி, பற்றி எரியச் செய்து, நிலைப்படுத்துகிறது. அது தேவனை நோக்கி எழும்பும் வல்லமையாக செயல்படும் அடிப்படையான அனல். அதன் தீவிரம் ஆர்வத்தால் இயக்கப்படும். அது இரக்கத்தின் சிம்மாசனத்திற்குப் பிரகாசமாய் சென்று, தன் வேண்டுதலை பூர்த்தி செய்யும். ஜெபத்தின் கடுமையான போராட்டத்திற்கு, விடாப்பிடியான அவா வெற்றியைத் தருகிறது. அது கடுமையான போராட்டங்களிலிருந்து வெளிவந்த அமைதியற்ற ஆத்துமாவை அமைதிப்படுத்துகின்றது. இந்த ஆவலே ஜெபத்தை ஆயிரம் வேண்டுகோள்களுடன் பலப்படுத்துகிறது. மேலும் வலிமையான தைரியத்தாலும், எல்லாவற்றையும் மேற்கொள்ளம் பலத்தாலும் அதை மூடிக்கொள்ளுகிறது.

ஜெபத்தின் தாக்கத்தில் வலிமை குன்றாமல், விடாப்பிடியான துணிவு கொண்ட ஆவலை கானானிய பெண்ணிடம் நாம் கண்கூடாகக் காணலாம். மேற்கொண்ட கடினமான தடங்கல்கள் இருந்தபோதிலும் தான் சாதிக்க வேண்டியதை விடாப்பிடியாக வற்புறுத்திக் கெஞ்சிக்கேட்ட விதவையே ஒரு சிறந்த மாதிரியாவாள்.

ஜெபம் ஒரு நிகழ்ச்சிக்காக செய்யப்படும் ஒத்திகையோ அல்லது நிச்சயமற்ற, பரவலான ஆரவார வேண்டுகோளோ அல்ல. ஆவல், ஆத்துமாவைத் தூண்டும் போது, தான் தெரிந்து கொள்ளும் நோக்கத்தைப் பிடித்துக்கொள்ளுகிறது. ஜெபம் ஆவிக்குரிய பழக்கங்களில் தவிர்க்கமுடியாத ஒரு நிலை. ஆனால் அது வெறும் வழக்கமாக செய்யப்படும் பழக்கமாக மட்டும் இருந்துவிட்டால் அது ஜெபம் ஆகாது. ஆவிக்குரிய ஆர்வத்தின் ஆழமும், முனைப்பும் ஜெபத்திற்கு தீவிரத்தையும், உள்ளார்ந்த அழுத்தத்தையும் கொடுக்கிறது. மிகுந்த ஆவல் ஆத்துமாவை கொழுந்துவிட்டு எரியச் செய்யும்போது அது மந்தமாக இருக்க முடியாது. ஆவலைக் குறித்ததான அவசரம் நாம் விரும்பும் காரியத்தை எவ்வித குறைவோ, தளர்வோ இல்லாமல் விடாப்பிடியாக பிடித்துக்கொள்ளுகிறது. ஆசீர்வாதம் உறுதியாகக் கிடைக்கும்வரை அது தொடர்ந்து இருக்கும்.

ஆண்டவரே, நான் உம்மை விடமாட்டேன்

நீர் என்மேல் ஆசீர்வாதத்தை பொழியும்வரை

உம் முகத்தை எனக்கு மறையாதேயும்

நான் உடனே செயல்படவேண்டிய நிலையில்

இருக்கிறேன்

சோர்வான இருதயத்திற்கும், விடாப்பிடியாக கெஞ்சிக்கேட்கிற தன்மை இல்லாமைக்கும், ஜெபத்தில் தைரியம், வல்லமை இல்லாததற்கும், ஆவியின் ஆவலின் குறைபாடுதான் காரணமாகும். ஜெபம் செய்யாமல் இருப்பது அவ்விதமான ஆவல் முற்றிலும் ஜீவனற்றதாய் காணப்படுவதற்குக் காரணமாகும். தேவனை விரும்பும் எவருடைய வாஞ்சையும் இருதயத்தின் உள்ளான அறைக்குள் உட்பிரவேசிக்காவிடில் அவர்களின் ஆத்துமா தேவனை விட்டு விலகியிருக்கும். ஆட்கொள்ளும் ஆவல் இல்லாவிடின் ஜெபத்தில் வெற்றியடைய முடியாது. பலர் எந்தவிதமான ஆவலும் இல்லாமல் ஜெபம் செய்வதை நாம் காணலாம்.

ஆவல் என்பது தீவிரமானது ஆனால் குறுகியது. அதனால் பல பகுதிகளுக்குத் தானே பரவிக்கொள்ள இயலாது. அதற்கு சில காரியங்கள் நடைபெற வேண்டும். ஏனெனில் தேவன் பதில் அளிக்க விருப்பமுள்ளவர் என்பதைத் தவிர வேறெதுவும் அதற்கு நிறைவைத் தர இயலாது.

ஆவல் ஒரு குறியில் தனது நோக்கத்தை அடையும். பல காரியங்களில் ஆவல் கொள்ளலாம். ஆனால் அவை குறிப்பாகவும், தனிப்பட்ட முறையிலும் உணரப்பட்டு, வெளிப்படுத்தப்பட வேண்டும். தாவீது எல்லாக் காரியங்களின் மேலும் விருப்பம் கொள்ளவில்லை. தன்னுடைய ஆவலை எல்லா இடங்களிலும் சிதற விடவில்லை. தன்னுடைய ஆவல் சென்ற வழியையும், தன் அர்த்தத்தை கண்டுகொண்ட விதத்தையும் பின்வருமாறு கூறுகிறார்.

“கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன் நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும் படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்” (சங்கீதம் 27:4)

ஆவலை அல்லது ஆசையை நிறைவேற்றுதலில்  உள்ள பற்றுதல் ஜெபத்திற்கு தேவையானது. மேலும் அவை ஜெபத்தை பதில் அளிக்கும் மையத்திற்கு, அதாவது ஆண்டவரிடத்திக்கு எடுத்துச் செல்லுகிறது. மலைப்பிரசங்கத்தில் இயேசுவானவர் பேசிய போது, புதுப்பிக்கப்பட்ட ஆத்துமாவின் ஆவலில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் வாக்குத்தத்தமும் அருளப்பட்டது. “நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவா்கள். அவர்கள் திருப்தியடைவார்கள். (மத்தேயு 5:6)

எனவே இதுதான் ஒரு பதிலை உறுதிப்படுத்தும் ஜெபத்திற்கு அடிப்படை. அந்த பலமுள்ள உள்ளான விருப்பம் ஆவிக்குரிய பசியினுள் சென்று, திருப்தி அடையும் படியாக ஆரவாரிக்கிறது. ஆனால் நமக்கு ஐயோ! பொதுவாக நம்முடைய ஜெபங்கள் வறண்ட நிலத்தில் செயல்படுகிற வெறும் வேண்டுதல்களைப் போன்றோ அல்லது மனப்பாடம் செய்யப்பட்ட ஜெபமாகவோ இருக்கிறது. சில சமயங்களில், நம்முடைய ஜெபங்கள் ஒரே மாதிரியான வார்த்தைகளிலான வெளிப்பாடாக இருக்கிறது. பல வருடங்களுக்கு முன் புத்துணர்ச்சியும், ஜீவனும் அதைவிட்டு அகன்று போனதுபோல் இருக்கிறது.

ஆவல் இல்லாமல் ஆத்தும பாரம் இல்லை. தேவையின் உணர்வு இல்லை. உள்ளார்ந்த விருப்பம் இல்லை, தொலைநோக்கு இல்லை, வலிமை இல்லை, விசுவாசம் அனலாயில்லை, வலிமை மிக்க அழுத்தம் இல்லை. நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்” (ஆதியாகமம் 32:26) மோசேயிடம் காணப்பட்ட முற்றிலுமான சுய வெறுப்பு இல்லை, அவர் மிகவும் கடினமான சூழ்நிலையில், வீழ்ந்து போன நிலையில், விடாப்பிடியான, எல்லாவற்றையும் மேற்கொள்ளும் தொனியோடு தன் வேண்டுதலைக் கூறினார். “ஆகிலும், தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும். இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றான்.” (யாத்திராகமம் 32:32) ஜான் நாக்ஸ் “எனக்கு ஸ்காட்லாந்து நாட்டைத் தாரும் அல்லது என்னை எடுத்துக்கொள்ளும்” என்று வேண்டினார்.

தேவன் ஜெபம் செய்யும் ஆத்துமாவின் அருகில் வல்லமையாய் நெருங்கி வருகிறார். தேவனைக் காணுவதும், அவரை அறிந்து அவருக்காக வாழுவதும் தான் உண்மையான ஜெபம் செய்வதன் நோக்கமாகும். எனவே ஜெபம் செய்வது தேவனைத் தேடும் நோக்கத்தினால் உந்தப்படுகிறது. ஜெப ஆவல் தேவனைக் காணவும், தேவனைப்பற்றி தெளிவான, முழுமையான இனிமையான, செழுமையான வெளிப்பாட்டைக் கண்டு கொள்ளும்படியாக கொழுந்துவிட்டு எரிகிறது. எனவே இவ்வாறு ஜெபிப்பவர்களுக்கு உள்ளால் இருதயத்தின் வெளிச்சத்தினாலும், கிறிஸ்து ஒரு புதிய இரட்சகராகத் தெரிகிறது.

மிகுந்த ஆவல், ஜெபத்தின் மூலம் சிறந்த தாலந்துகளையும் கர்த்தரின் கிருபையையும் நமக்கு அருளச் செய்கிறது. சுயத்தையும், சேவையையும் பிரிக்கமுடியாது. எவ்விதத்திலும் பிரிக்க முடியாது. அதற்கு மேலாக ஆவலானது தனிப்பட்ட  முறையில் தீவிரமாக்கப்படவேண்டும். தேவன்மேலும், அவரது நீதியின்மேலும், தீவிரபசியும், தாகமும் உடையவர்களாய் அவரை மையமாகக் கொண்டு அவர்மேல் ஆவல் வைக்க வேண்டும். “என் ஆத்துமா தேவன் மேல் ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது…” (சங்கீதம் 42:2) எல்லா உண்மையான ஜெபத்திற்கும் முக்கியமானது நாம் மனதில் கொள்ளும் ஆர்வமேயாகும். அது தேவனை மட்டுமே தேடும். மேலும் தெரிந்தெடுக்கப்பட்ட பரலோகத்தின் பரிசுகள் கிடைக்கும் வரை, சமாதானமின்றி ஜெபத்தோடு நாடிக்கொண்டேயிருக்கும்.

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]