[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]
மறுபடியுமாக நாம் கேட்கலாம் – தேவனோடு நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்ளும்படியாக நம்மை உந்தும் ஆவல் நமக்கு உண்டா, அது அனலினால் நிறையப்பட்டு, ஆத்தும விருப்பத்தின் வேண்டுதல்களோடு கர்த்தரை நோக்கி ஜெபம் செய்கிறதா? நம்முடைய இருதயங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. தன்னிடத்திலிருந்து தீமையான காரியங்களை வெளியாக்குவது மட்டுமல்லாமல், நற்காரியங்களை தன்னுள் கொண்டு வரவேண்டும். உள்ளே வரும் நற்காரியத்தின் அடித்தளமும், ஊக்கமும் பலமாக இருந்து ஆவலைத் தூண்டுகிறது. ஆத்துமாவிலுள்ள இந்த பரிசுத்தமான, தீவிரமான அக்கினி, பரலோகத்தைப்பற்றி ஆர்வத்தை உயிர்ப்பித்து, தேவனுடைய கவனத்தை ஈர்க்கும். மேலும் அளவில்லாத பரலோக கிருபையின் பொக்கிஷங்களை அதை செயல்படுத்துபவர்களுக்கு கிடைக்கும்பொருட்டு அவர்கள் வசம் தரும்.
அக்கினியின் பரிசுத்த ஆவலைத் தணியச் செய்வது திருச்சபை வாழ்வின் முக்கியமான, தீவிரமான ஆக்கத்திறனை அழித்து விடும். தம் சார்பாக செயல்பட தேவனைப் பிரதிநிதிப்படுத்த ஒரு தீவிரமான திருச்சபை வேண்டும். வேறெந்த சரியான முறையிலும் அவரை பிரதிநிதிப்படுத்த இயலாது. தேவன் அக்கினியாக இருக்கிறார். அவருடைய திருச்சபையும் அவரைப் போல் இருக்க வேண்டுமெனில் அவியாத அக்கினியாக இருக்க வேண்டும். மேலான, நித்தியமான பரம காரியங்களைக் குறித்த ஆவலும், தேவன் தந்த மார்க்கமும் மட்டுமே அக்கினியாய் இருக்கும் திருச்சபையின் நோக்கமாயிருக்க வேண்டும். ஆனாலும் பரிசுத்த ஊக்கம், சுட்டெரிக்கும் படியாக இருக்கக்கூடாது. நம் ஆண்டவர் ஊக்கமும் பண்புமுடையவராக இருந்தார். சகிக்க முடியாத, ஆரவார, ஆவேசப்பேச்சை எதிர்ப்பவர். ஆனாலும் தேவனுடைய ஆலயத்தின் மேல் இருந்த வைராக்கியம் அவரை ஆட்கொண்டது. அவரது பற்றியெரியும். ஆட்கொள்ளும் அக்கினிப் பிரகாசத்தை இன்னும் உலகம் உணர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் எப்பொழுதும் அதிகரித்துக் கொண்டிருக்கிற ஆயத்தநிலையிலும், விரிவாக பதில் அளிப்பதில் தயாராயிருப்பதன் மூலமாகவும் மறுமொழி கொடுத்துக் கொண்டிருக்கிறது.
ஜெபம் செய்வதில் உள்ளார்ந்த விருப்பம் இல்லாமை, ஆர்வத்தின் குறைவையும், தீவிரம் இல்லாததையும் வெளிக்காட்டும் ஒரு நிச்சயமான அடையாளமாகும். தீவிரமான ஆர்வம் இல்லாதது தேவன் இருதயத்தில் இல்லை என்பதற்கு ஒரு நிச்சயமான அடையாளம்! உள்ளார்வத்தின் உறுதி குறைவது தேவனைவிட்டு விலகுவதாகும். தேவன் தம்முடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் வரும் குறைபாடுகளையும், தவறுகளையும் பொறுத்துக்கொள்ளக் கூடும், பொறுத்தும் கொள்கிறார். மனம் திரும்பியவர் ஜெபிக்கும் போது அவரது பாவத்தை அவரால் மன்னிக்க முடியும். மன்னிக்கவும் செய்கிறார். ஆனால் பொய்யானதையும், வெதுவெதுப்பான நிலையையும் அவர் பொறுத்துக் கொள்ளமாட்டார். இருதயமற்ற தன்மையையும், அனலற்ற நிலையையும் அவர் வெறுக்கிறார். நிச்சயமான கடும் தண்டனைக்குட்படுத்தும் வார்த்தைகளால் லவோதிக்கேயாரைப் பார்த்து இவர் கூறுகிறார். “நீர் குளிருமல்ல அனலுமல்ல”
“இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிற படியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப் போடுவேன்” (வெளி 3:15-16)
ஏழு திருச்சபைகளில் ஒரு திருச்சபையில் அனல் இல்லாததால் தேவன் தமது நியாயத்தீர்ப்பை கூறினார். ஜெபத்தில் அக்கினிதான் ஒருவரை ஊக்குவிக்கும் வல்லமையாகும். அனலாக வெளிப்படாத சமய கோட்பாடுகளுக்கு வல்லமையோ, விளைவோ கிடையாது. அக்கினிதான் விசுவாசம் உயர எழும்ப உதவும் சிறகாகும். உள்ளார்வமே ஜெபத்தின் ஆத்துமாவாகும். அதனால்தான் “…நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கும்” (யாக்கோபு 5:16). அன்பு அக்கினியால் தூண்டப்படுகிறது. அது வாழ்வில் ஆர்வம் கொள்ளுகிறது. உணமைக் கிறிஸ்தவனின் அனுபவ சுவாசக்காற்று அக்கினியாகும். அது நெருப்பை உட்கொள்ளுகிறது. வலிமையற்றதாக இருப்பதைக்காட்டிலும் அதனால் எதையும் சகித்துக்கொள்ளமுடியும். அதன் சுற்றுப்புறசூழல் விறைப்பானதாகவோ அல்லது வெதுவெதுப்பாகவோ இருக்கும் போது அது மரித்து, குளிர்ந்து, தனக்கு முக்கியமானவற்றை இழந்துவிடுகிறது.
உண்மையான ஜெபம் அக்கினியாக இருக்கவேண்டும். கிறிஸ்தவனின் வாழ்க்கையும், குணங்களும் அனலாயிருக்க வேண்டும். விசுவாசக் குறைபாட்டைவிட ஆவிக்குரிய அனலற்ற தன்மை அதிகமாக விசுவாசக் கேட்டை உண்டாக்கும். பரம காரியங்களைக் குறித்து தீவிர ஆவல் இல்லாவிடில், அதைக் குறித்து எந்தவிதமான கரிசனையும் இருக்காது. அக்கினிமயமான ஆத்துமாக்கள் தான் போர்க்காலத்தில் வெற்றி பெறும். அவர்களிடமிருந்து பரலோக ராஜ்யம் மிகத் தீவிரமானதை சந்திக்கும். தீவிரமான ஆவலோடு உண்மையாக முயற்சிப்பவர்களால்தான் தேவனுடைய கோட்டையைப் பிடிக்கமுடியும். அவர்கள் அக்கினிமயமான தீவிர ஆவலுடன் அதை முற்றுகையிடுகிறார்கள்.
தேவனுக்காக சுட்டெரிக்கிற நெருப்பாய் இருக்கிறவர்களினால் தான் இந்தக் குளிரான நாட்களில் பரலோகத்துக்கான கொழுந்து விட்டு எரியும் அனலை தங்கள் இருதயத்திலே கொண்டிருக்க முடிகிறது. பழங்காலத்தில் இருந்த மெதடிஸ்ட் திருச்சபையாருக்கு அவர்கள் ஆலயத்தில் சூடு உண்டாக்கும் கருவிகள் எதுவும் இருக்கவில்லை. ஆலயத்தின் சாய்விருக்கைகளில் இருந்து அனலும், பிரசங்க மேடையிலிருந்த அக்கினியும் அவர்களை கதகதப்பாக வைப்பதற்கு போதுமானதாக இருந்ததாக அவர்கள் கூறினார்கள். இந்தக் காலங்களில், தேவனுடைய ஆலய மேடையிலுள்ள ஜீவனுள்ள நெருப்புத்தழல் நமக்கு வேண்டும். மேலும் சுட்டெரிக்கும் பரலோகத்தின் பரிசுத்த அக்கினி நம் இருதயங்களில் கொழுந்து விட்டெரிய வேண்டும். இந்த அக்கினி மனதை உணர்ச்சிவயமாக ஊக்குவிக்கிற அல்லது சரீரத்தைப் பெலப்படுத்துகிற சக்தியல்ல. அது ஆத்துமாவிலுள்ள பரலோக அக்கினி. தீவிரமான, மதிப்பற்ற எல்லாவற்றையும் சுட்டெரிக்கக்கூடியது. அதுவே தேவனுடைய ஆவியின் சாரம்.
அக்கினியின் குறைப்பாட்டை ஒருவரது கல்விப் புலமையோ சொல்லாற்றலின் திறமையோ, ஆழ்ந்த அறிவோ, பேச்சாற்றலின் வல்லமையோ, பண்பு நலனோ, ஈடு செய்ய இயலாது. ஜெபம் அக்கினி மூலம் உயர எழும்பும். அக்கினி ஜீவாலை ஜெபத்திற்கு அடைவதற்கான வழியையும், சிறகுகளையும் கொடுக்கிறது. ஏற்றுக்கொள்ளப்படுதலையும், பலத்தையும் அளிக்கிறது. நெருப்பு இல்லாமல் நறுமணம் கிடையாது. அக்கினி ஜீவாலை இல்லாமல் ஜெபம் கிடையாது.
[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]