CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

ஜெபமும் கீழ்ப்படிதலும் 1

ஜெபமும் கீழ்ப்படிதலும் 1

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

ஜெபிப்பதற்கு சிறப்பான இடம் கொடுக்கப்பட்டிருந்தாலும் அதிலிருந்து பெரும் பயன்களைப் பெற்றுக்கொள்ளுவது வெறுமனே ஜெபத்தைச் சொல்வதாலல்ல, ஆனால் “பரிசுத்தமாக ஜெபிப்பதினால்” என்பது குறிப்பிடத்தக்கது. அது “பரிசுத்தர்களின் ஜெபம்,” தேவனுடைய பரிசுத்தர்களின் ஜெபம். பாவத்திலிருந்து முழுவதுமாக விடுபட்டு, முழுவதுமாக தேவனுக்கென்று பிரிக்கப்பட்ட ஆடவர், மகளீரின் ஜெபம், அதற்குப் பின்னால் வலிமையையும் ஒளியையும் தருகிறது. இவர்கள் தான் ஜெபிப்பதற்கு எப்போதும் ஊக்கத்தையும் ஆற்றலையும் வலிமையையும் தருபவர்கள்.

நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஜெபிப்பதில் தலைசிறந்தவராக இருந்தார். புனிதப்படுத்துகிற பரிசுத்தமான சுடரொளியை தன்னகத்தே கொண்டிருக்கிற முழுவதுமான ஒப்படைப்பு, முழுமையாக சரணடைதல் ஆகியவைகள் விசுவாசத்துக்கு சிறகுகளையும், ஜெபத்துக்கு ஊக்கத்தையும் அளிக்கின்றன. அது கிருபாசனத்துக்கு கதவுகளைத் திறக்கிறது; தேவனிடம் சிறப்பான செல்வாக்கையும் உண்டாக்குகிறது.

“……..பரிசுத்தமான கைகளை உயர்த்தி…….” (1தீமோத்தேயு 2:8) என்பது கிறிஸ்தவ ஜெபத்துக்கு அவசியமானது. தேவனுக்கு ஒரு மணி நேரம் ஒதுக்குகிற பரிசுத்தம் மாத்திரம் நம்மை அவரோடு தனி அறைக்கு ஒப்புவிப்பதில்லை. முழு வாழ்க்கையையும் தேவனுக்கு ஒப்புக்கொடுக்கிற ஒரு மனிதனுடைய முழுமையான புனிதம்தான் அப்படிச்செய்கிறது.

“……..பரிசுத்தமும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும்………” (எபிரெயர் 7:26) ஆகிய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஜெபத்தில் தேவனைக் கிட்டிச்சேர்வதற்கு முழு சுதந்தரமும் ஆயத்தமும் உள்ளவராயிருந்தார். கேள்வி கேட்காமல் அவருடைய பிதாவுக்குக் கீழ்ப்படிந்ததினால் இந்தச் சுதந்தரத்தை முழுமையாகப் பெற்றிருந்தார். அவருடைய பூலோக வாழ்க்கை முழுவதிலும் அவருடைய மேன்மையான ஆசை, பிதாவின் சித்தத்தைச் செய்வதாகவே இருந்தது. இதனுடன் இன்னொன்றும் சேர்ந்திருந்தது – அது அவருடைய வாழ்க்கையை அவ்வாறு ஒப்புக்கொடுத்த நெஞ்சார்ந்த உணர்வு. இவை அவருக்கு நம்பிக்கையையும் உறுதியையும் அளித்தன. கீழ்ப்படிதலினால் ஏற்பட்ட கட்டுக்கடங்காத நம்பிக்கை, வாக்குப்பண்ணப்பட்ட ஒப்புதல், தரிசனம், பதில் ஆகியவைகளோடு கிருபாசனத்தண்டைக்கு அருகில் வரமுடிந்தது.

அன்பான கீழ்ப்படிதல் “…..என்னுடைய நாமத்தினால் எதைக் கேட்டாலும்…..” என்கிற நிலையிலும், “அதை நான் செய்வேன்…….” என்கிற உறுதியையும் கொடுக்கிறது. (யோவான் 14:14) அன்போடு கீழ்ப்படிதல் ஜெபவட்டாரத்துக்குள் நம்மைக் கொண்டு வருகிறது;  நமக்குள் இருக்கப்போகிற, இருக்கிற பரிசுத்த ஆவியின் வருகையின் மூலம் கிறிஸ்துவின் ஐசுவரியத்துக்கும் அவருடைய கிருபையின் மகிமைக்கும் நம்மை ஏற்றவர்களாக ஆக்குகிறது. தேவனுக்கு மகிழ்ச்சியுடன் கீழ்ப்படிவது, பயனுள்ள வகையில் ஜெபிப்பதற்கு நம்மைத் தகுதிப்படுத்துகிறது.

தகுதிப்படுத்துவது மட்டுமன்றி, ஜெபத்துக்கே முன்னே செல்லும் இந்நக் கீழ்ப்படிதல் அன்பானதாகவும், மாறாததாகவும், எப்போதும் பிதாவின் சித்தத்தைச் செய்கிறதாகவும், தேவனுடைய கட்டளைகளின் பாதையை மனமகிழ்வோடு பின்பற்றுவதாகவும் இருக்க வேண்டும்.

எசேக்கியா ராஜாவின் வாழ்க்கையில் அவன் மரணத்தைக் கூட ஆற்றல்மிக்க ஜெபம் மாற்றியது. நோய்வாய்ப்பட்ட ராஜா, தான் தேவனுக்கு முன்பாக உண்மையாக நடந்ததையும், தான் உண்மையான இருதயத்துடன் இருந்ததையும் நினைத்துப் பார்க்கும்படி தேவனிடம் வேண்டினான். தேவன் இதைக் கணக்கில் எடுத்துக்கொண்டார். அவர் விண்ணப்பத்தைக் கேட்டருளினார். அதன் விளைவாக மரணம் எசேக்கயாவைவிட்டு 15 வருடங்கள் தள்ளிப் போடப்பட்டது.

இயேசு, துன்புறுதல் என்னும் பள்ளியில் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அதே நேரத்தில் கீழ்ப்படிதல் என்னும் பள்ளியில் ஜெபத்தைக் கற்றுக்கொண்டார். ஒரு நீதிமானுடைய ஜெபம் அதிகமாகப் பயனளிப்பது போல,  தேவனுக்குக் கீழ்ப்படிகிற நீதியும் இருக்கிறது. ஒரு நீதியான மனிதன் கீழ்ப்படிதலுள்ளவன். அவனால் பயனுள்ள வகையில் ஜெபிக்க முடியும். அவன் முழங்காலில் நிற்கும் போது பெரிய காரியங்களை நிறைவேற்றுகிறான்.

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]