CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

ஜெபமும் கீழ்ப்படிதலும் 4

ஜெபமும் கீழ்ப்படிதலும் 4

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

வீழ்ச்சியின் சுமைகளோடு இருக்கிற புதுப்பிக்கப்படாத மனிதன் தேவனுக்குக் கீழ்ப்படிய முடியாதென்று கூறினால் அதற்கு மறுப்பு இருக்காது. ஆனால் பரிசுத்த ஆவியினால் ஒருவன் புதுப்பிக்கப்பட்டு புதிய இயல்பையும் பெற்று, இராஜாவின் பிள்ளையான பின்பு அவனால் கீழ்ப்படிய முடியவில்லையென்பது கேலிக்குரிய நிலையை அடைகிறது. இது பாவ நிவர்த்தியின் உட்பொருளை அறியாத அறியாமையாகும்.

ஜெபிக்கும் ஒரு மனிதன் பூரணமான குறைவற்ற கீழ்ப்படிதலுக்கு அழைக்கப்படுகிறான். “…கோபமும் தர்க்கமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி…..”(2 தீமோத்தேயு 2:8) என்பது கீழ்ப்படிதலான ஜெபத்தின் ஒருநிலைப்பாடாகும். இங்கே உள்ளான உண்மை, அன்பு, வெளியரங்கமான சுத்தம் ஆகியவைகள் ஏற்புக்குரிய ஜெபத்தின் ஒருங்கிணைந்த செயல்களாகக் கருதப்படுகின்றது.

பதிலளிக்கப்பட்ட ஜெபத்துக்கான காரணத்தை யோவான் கூறுகிறார்:

“அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்கிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்கிறோம்” (1யோ3:22) தேவனுடைய கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படிவதே அவர் நம்முடைய ஜெபத்துக்கு பதிலளிப்பதற்கு காரணம் என்று இங்கே கூறப்பட்டிருப்பதால், தேவனுடைய கட்டளைகளை நாம் கைக்கொள்ளமுடியும் என்றும் அவருக்குப் பிரியமான காரியங்களை நாம் செய்ய முடியும் என்றும் யூகிக்கலாம்.

கீழ்ப்படிவதும் அதைச் செயல்படுத்துகிறவர்களும் தான் கிருபாசனத் தண்டையில் வந்து தைரியமாகக் கேட்கமுடியும். கீழ்ப்படியாத மக்கள் அவர்களுடைய அணுகுமுறையில் கோழைத்தனமாகவும், வேண்டுதலில் தயக்கம் காட்டுபவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களுடைய தவறான செயல்களினால் அவர்கள் நிறுத்தப்படுகிறார்கள். ஜெபம் செய்யும், கீழ்ப்படியும் பிள்ளை நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் தன்னுடைய தகப்பன் முன் வருகின்றான். கீழ்ப்படிகிற அவனுடைய மனசாட்சி அவனுக்கு தைரியத்தைக் கொடுக்கிறது. கீழ்ப்படியாமையின் அச்சத்திலிருந்து விடுவிக்கிறது.

தேவனுடைய சித்தத்தை தயக்கமில்லாமல் செய்வது வெற்றியுள்ள ஜெபமனிதனுக்குக் கிடைத்த ஒரு பெரிய சிலாக்கியமாகும்.

“பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக இராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.” (மத் 7:21)

இந்தப் பேருரைக்கு இன்னொன்றையும் சேர்க்கலாம்:

”நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால் என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.”        (யோவான் 15:10)

“ஜெபம் ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கைத் தொழில்” என்று லூத்தர் கூறுகிறார். ஜெபத்தின் இரகசியங்களைக் கற்றுக்கொள்வதற்கு முன் ஒரு கிறிஸ்தவன் கற்றுக்கொள்ளவேண்டிய இன்னொரு தொழிலும் அவனுக்கு உண்டு. அதாவது பிதாவின் சித்தத்திற்கு பூரணமாகக் கீழ்ப்படிகிற தொழிலை அவன் நன்றாகக் கற்றுக்கொள்ள வேண்டும். கீழ்ப்படிதல் அன்பைத் தொடர்ந்து வருகிறது. ஜெபம் கீழ்ப்படிலைத் தொடர்ந்து வருகின்றது. தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவதும் ஜெபமும் ஒன்றிணைந்தவைகளாகும்.

கீழ்ப்படியாமலிருக்கிற ஒருவன் ஜெபிக்கலாம். மன்னிக்கிற தேவ இரக்கத்துக்காகவும், ஆத்தும சமாதானத்துக்காகவும் அவன் ஜெபிக்கலாம். தேவனுடைய பாதபடியில் கண்ணீருடனும், பாவ அறிக்கையுடனும், வருந்துகிற இருதயத்துடனும் அவன் வரலாம். தேவன் அவனுடைய ஜெபத்தைக் கேட்டுப் பதிலளிப்பார். ஆனால் இப்படிப்பட்ட ஜெபம் தேவனுடைய பிள்ளைக்கு உரியதல்ல. தேவனை அணுகுவதற்கு வேறு வழியற்ற, மனம் வருந்துகிற பாவிக்குரியது. அது நீதிமானாக்கப்படாத ஆத்துமாவுக்குரியது. இரட்சிக்கப்பட்டு தேவனோடு ஒப்புரவாக்கப்பட்டவனுக்குரியதல்ல.

கீழ்ப்படிதலுள்ள ஒரு வாழ்க்கை ஜெபத்துக்கு உதவியாயிருக்கிறது. அது ஜெபத்தை வேகமாக ராஜாவின் சிங்காசனத்துக்குக் கொண்டு செல்கிறது. கீழ்ப்படிதலுள்ள ஒரு பிள்ளையின் ஜெபத்தை தேவனால் கேட்காமலிக்க முடியாது. கீழ்ப்படிதலுள்ள பிள்ளைகள் ஜெபிக்கும் போது அவர் எப்போதுமே செவிகொடுத்திருக்கிறார். பரலோக கிருபாசனத்துக்கு முன்பாக. தேவனுடைய பார்வையில், கீழ்ப்படிதல் அதிகமாக மதிக்கப்படுகிறது. பல ஆறுகளின் அலைகளின் சங்கமம் போல அது செயல்படுகிறது. ஜெப அறைக்கு அதிக அளவில் வல்லமையையும் தருகிறது. கீழ்ப்படிதலுள்ள வாழ்க்கை வெறும் சீர்திருத்தப்பட்ட ஒரு வாழ்க்கை அல்ல. அது சாயம் பூசப்பட்டு வாழ்கின்ற பழைய வாழ்க்கை அல்ல. அல்லது ஆலயத்துக்குப் போகிற அல்லது நல்ல காரியம் செய்கிற வாழ்க்கை அல்ல. இவைகளுக்கெல்லாம் மேலாக உண்மையாகக் கீழ்ப்படிகிற வாழ்க்கையும் தேவபயமுள்ள வாழ்க்கையும் சேர்ந்ததாகும்.

முழுவதும் கீழ்ப்படிகிற ஒரு வாழ்க்கை; கர்த்தருடன் மிக நெருக்கமான காரியங்களில் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு வாழ்க்கை; தேவனுடைய சித்தத்தோடு முழுவதும் ஒத்துப்போகிற சித்தம் நிறைந்த வாழ்க்கை; நீதியாகிய கனியைக் காண்பிக்கின்ற வெளியரங்கமான வாழ்க்கை – அப்படிப்பட்ட வாழ்க்கை ஆரோன், ஊர் ஆகியோரைப்போல உள் அறைக்கு ஒரு தடையையும் ஏற்படுத்துவதில்லை. ஜெபத்தின் கரங்களை உயர்த்தித் தாங்கிப்பிடிக்கிறது.

நன்றாக ஜெபிக்க வேண்டுமென்கிற உண்மையான ஆர்வம் உங்களுக்கிருக்குமென்றால், நன்றாகக் கீழ்ப்படிதல் எவ்வாறு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். ஜெபிப்பதற்கு கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆவல் உங்களுக்கிருக்குமென்றால் தேவனுடைய சித்தம் செய்வது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ளுகிற உண்மையான ஆசையிருக்க வேண்டும். தேவனிடம் ஜெபிக்க வேண்டுமென்கிற ஆவல் உங்களுக்கிருக்குமென்றால், முதலில் அவருக்குக் கீழ்ப்படிகின்ற அளவில்லா ஆவல் உங்களுக்கு இருக்க வேண்டும். தேவனை ஜெபத்தில் எளிதாக அணுக வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்குமென்றால், பாவம் அல்லது கீழ்ப்படியாமை ஆகியவைகளின் இயல்பான ஒவ்வொரு தடையும் நீக்கப்படவேண்டும்.

கீழ்ப்படிதலுள்ள பிள்ளைகளின் ஜெபங்களில் தேவன் மகிழ்ச்சியடைகிறார். அவருடைய சித்தத்தை செய்வதற்கு மகிழ்கிறவர்களுடைய உதடுகளிலிருந்து வருகிற வேண்டுதல்கள் அவருடைய செவிகளில் வெகு வேகமாகச் சென்றடைகிறது; விரைவாகவும், நிறைவாகவும் ஜெபத்துக்குப் பதிலளிக்கும் படி அவரைத் தூண்டுகின்றன. கண்ணீருக்குத் தனியே எந்த மதிப்பும் கிடையாது. ஆனால் அவைகளினால் ஜெபத்துக்குப் பலன் உண்டு. நாம் ஜெபம் பண்ணுகிற இடத்தைக் கண்ணீரால் மூழ்கடிக்க வேண்டும். தன்னுடைய பாவங்களுக்காக ஒருபோதும் கண்ணீர் விடாதவன் தன் பாவங்களுக்காக ஒருபோதும் ஜெபிக்கவில்லை என்று தெரிகிறது. சில நேரங்களில் கண்ணீர் மனம் வருந்துகிறவனுடைய ஒரே வேண்டுதலாயிருக்கும். ஆனால் கண்ணீர் கடந்து போனவைகளுக்கும், பாவத்துக்கும் செய்த தீய செயல்களுக்குமாகும். அடுத்தடுத்து வைக்க வேண்டிய இன்னுமொரு நிலை, காத்துக்கொண்டிருக்கிறது. அது பூரணமான கீழ்ப்படிதல், அது இல்லாதவர்கள் ஆசீர்வாதத்திற்கும், தொடர்ச்சியான பராமரிப்புக்கும் ஏறெடுக்கின்ற ஜெபம் பயன்தராது.

வேதாகமத்தின் ஒவ்வொரு இடத்திலும் கீழ்ப்படியாமையை தேவன் ஏற்க மறக்கிறவராகவும், பாவத்தைக் கடிந்து கொள்கிறவராகவும் காட்டப்படுகிறார். பாவிகளுடைய வாழ்க்கையில் கீழ்ப்படியாமை இருப்பது போல, அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுடைய வாழ்க்கையிலும் இது மெய்யாக இருக்கிறது.

தேவன் பாவத்தைப் பார்த்து அமைதலாகவோ அல்லது கீழ்ப்படியாமையை மன்னிப்பதாகவோ வேதாகமத்தில் எந்த இடத்திலும் இல்லை. அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதை அவர் வலியுறுத்துகிறார். அவைகளுக்குக் கீழ்ப்படிவது ஆசீர்வாதத்தையும், கீழ்ப்படியாமை அழிவையும் கொண்டு வருகிறது. தேவனுடைய வார்த்தையில் ஆரம்பம் முதல் முடிவு வரை இது உண்மையாகும். அதனால்தான் ஜெபிக்கிற மக்கள் தேவனிடம் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தனர். கீழ்ப்படிகின்ற மக்கள் எப்போதுமே தேவனுக்கு நெருக்கமாக வாழ்ந்தனர். இவர்களெல்லாரும் நன்கு ஜெபித்தவர்களும் பெரிய காரியங்களைப் பெற்றுக்கொண்டவர்களுமாவர்.

தேவனுக்கு கீழ்ப்படிவது ஜெப உலகில் மிகவும் முக்கியமானதாகும். இந்த உண்மையை இதைவிட அதிகமாகவோ அல்லது அதிக தடவைகளிலோ வலுயுறுத்திச் சொல்லமுடியாது. பாவத்தை ஏற்றுக்கொள்ளுகிற ஒரு மத நம்பிக்கைக்கு ஆதரவு தருவது, பயன்தருன்ற ஜெபத்தை அடியிலிருந்துவெட்டி வீழ்த்துவதாகும். மறுபடியும் பிறவாத மக்கள் தேவனுக்கு கீழ்ப்படிவது இயலாத காரியம் என்று கூறி பாவம் செய்வதைப் பொறுத்துக்கொள்ளுவதும், புதிய பிறப்பின் குணத்தைக் குறைத்து அளவிடுவதும் பயன்தராத ஜெபத்தில் மக்களைச் சேர்ப்பதாகும். ஒரு சமயம், இயேசு கீழ்ப்படியாமையைப்பற்றி மிகவும் சரியான கேள்வியொன்றை எழுப்பினார்.

“என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன?” (லூக்கா 6:4)  

ஜெபிக்கிறவன் கீழ்ப்படிய வேண்டும். தன்னுடைய ஜெபத்தினால் எதையாகிலும் பெற்றுக்கொள்கிறவன் தேவனுடைய சரியான உறவில் இருக்கவேண்டும். உண்மையாக ஜெபிக்கிறவர்கள் உள்ளத்தில் கீழ்ப்படிகிற ஆவியை ஜெபம் வைக்கிறது. ஏனெனில் கீழ்ப்படியாமையின் ஆவி தேவனுடையதல்ல, தேவனிடம் ஜெபிக்கிற மக்களுக்குரியதுமல்ல.

கீழ்ப்படிகிற வாழ்க்கை ஜெபத்துக்கு பெரும் உதவியாயிருக்கிறது. அது ஜெபத்துக்கும், காரியங்களைப் பெற்றுக்கொள்வதற்கம் அவசியமான ஒன்று . கீழ்ப்படியாத வாழ்க்கை ஜெபத்தை வெறுமையான செயலாக்குகிறது. மனம் வருந்துகின்ற ஒரு பாவி மன்னிப்பையும், இரட்சிப்பையும் தேடுகிறான். பாவத்தினால் கறைபிடித்திருக்கும் ஒழுக்கக்கேடாயிருக்கும் வாழ்க்கையைக் கொண்டிருந்தாலும் அவனுடைய ஜெபத்திற்கு பதில் இருக்கிறது. ஆனால் தேவனுடைய ராஜரீக பரிந்துரை ஜெபம் செய்கிறவர்கள் தங்களுடைய இராஜரீகமான வாழ்க்கையுடன் தேவனுக்கு முன்பாக வருகின்றனர். பரிசுத்தமாக வாழ்வது பரிசுத்தமாக ஜெபிப்பதை மேம்படுத்துகிறது. தேவனுடைய பரிந்துரை ஜெபவீரர்கள் நீதியான கீழ்ப்படிதலான வாழ்வின் அடையாளமாகத் தங்களுடைய “பரிசுத்தமான கரங்களை உயர்த்தி” ஜெபிக்கிறார்கள்.

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]