[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]
- ஜெபம் தேவனைப் பூமியிலே செயற்பட வைப்பது
- ஜெபம் தேவனோடு எங்களை ஐக்கியப்படுத்துவது
- ஜெபம் தேவனின் கைகளிலே எங்களை ஒப்புவிப்பது
- ஜெபம் தேவனின் நாமத்தை மகிமைப்படுத்துவது
- ஜெபம் அந்தகார வல்லமையை உடைப்பது
இயேசுக்கிறிஸ்துவின் ஜெப வாழ்க்கை
இயேசுக்கிறிஸ்து இப்பூமியிலே வாழ்ந்தபோது, அவரது வாழ்க்கையே ஒரு ஜெபமாகக் காணப்பட்டது. (மாற்கு 1:35, மத் 14:23, லூக் 6:12) இந்த வசனங்களின்படி பார்த்தால், இயேசு ஜெபித்த நேரங்கள், இடங்கள் என்பன சிலவற்றைக் காணலாம். அவர் அதிகாலையில், சாயங்காலத்தில், இராமுழுவதிலும் வனாந்தரத்திலே, மலையிலே இருந்து ஜெபித்தவராகக் காணப்பட்டார்.
அத்தோடு அவர் எவ்வாறெல்லாம் ஜெபித்தாரெனப் பின்வரும் வசனங்களின் மூலம் நோக்கலாம். (மாற் 14:35, லூக் 22:42, எபி5:7, லூக் 22:44) அவர் தரையிலே விழுந்த வண்ணம், பலத்த சத்தமாக, கண்ணீரோடு, வியாகுலத்தோடு, ஊக்கத்தோடு, அவரின் வியர்வை இரத்தமாக மாறுகின்ற அளவுக்கும், அத்தோடு அவர் பிதாவின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்தும் ஜெபிக்கிறார்.
இயேசுக்கிறிஸ்துவானவர் பிதாவின் குமாரனாக இருந்துங்கூட அவருடைய வாழ்விலே ஜெபம் என்பது மிக முக்கியமானதாகக் காணப்படுகின்றது. அவரின் ஜெபம் எத்தனையோ விடயங்களை இப்பூமியிலே தாங்கியது. சுகத்தைக் கொடுத்தது. இயற்கையைக் கட்டுப்படுத்தியது. பாவங்களை மன்னித்தது. ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தியது. பிசாசிகளைத் துரத்தியது. பில்லி சூனியங்களை முறியடித்தது. அத்தோடு சிலுவை மரணத்திலே வெற்றியைக் கொடுத்தது.
எமது ஜெப வாழ்க்கை
அன்று இயேசுவினுடைய வாழ்க்கையிலே ஜெபம் என்பது இன்றியமையாததொன்றாகவே காணப்பட்டது. இன்று அவருடைய சாயலைத் தரித்துக் கொண்டிருக்கின்ற எம் வாழ்விலே அவ்வாறான ஜெபங்கள் காணப்படுகின்றதா?
ஆண்வர் எமது ஜெபத்திற்கு ஏதாவது கட்டுப்பாட்டை வைத்துள்ளாரா? எம்பெற்றோரோ அல்லது வேறு யாராக இருந்தாலும் கூட அவர்களிடம் நாம் ஏதாவது கேட்கும் போது ஏதாவது கட்டுப்பாட்டை விதிப்பர். ஆனால் லூக் 11:9-10இன் படி பார்த்தால் ஆண்டவர் எம் வேண்டுதலுக்குப் பூரண சுதந்திரத்தைத் தந்துள்ளாரெனக் காணலாம். எனவே நாங்கள் கேட்டுப் பெற்றுக் கொள்கிறவர்களாயிருக்க வேண்டும்.
லூக் 11:11-12இன் படி பார்த்தால், நாம் கேட்டு வேண்டிக்கொள்ளும் விடயங்களைக் கடவுள் தருவார் என்பதை நாம் அறியலாம். அப்பம் போன்ற நன்மையானவற்றை நாம் கேட்கும் போது அவர் கல் போன்ற நன்மையானவற்றைத் தருவதில்லை. ஆனாலும் நாம் நன்மையானவைகளை மட்டுமல்ல நன்மை, தீமை அறியாதவர்களாக கல்போன்ற தீமைகளைக்கூட ஆண்டவரிடம் கேட்டு ஜெபிக்கின்றவர்களாக இருக்கிறோம். ஆனால் ஆண்டவருக்குத் தெரியும் எதை எப்போது எமக்குத் தருவதென்று.
பிசாசினுடைய அந்தகார வல்லமையை முறிக்கத்தக்கதான ஜெபம் எம்மிடமுண்டா?
எபே 6:12 இன் படி பார்த்தால், எமக்குப் பிசாசுடன் போராட்டமுண்டு என சொல்லப்படுகிறது. எனவே அதை விரட்டுவதற்கு நாம் என்ன செய்கிறோம். மத் 17:21 இன் படி பார்த்தால் அவற்றைத் துரத்தத் தக்கவாறான ஜெபமும், உபவாசமும் எங்களிடம் இருக்க வேண்டும். எனவே வானமண்டலத்திலுள்ள அந்தகார சக்திகளைத் துரத்த நாம் எந்தளவுக்கு ஆயத்தமாக இருக்கிறோம்.
எம் ஜெபத்தின் மூலமாக பிறருக்கு எவ்வாறு சாட்சி பகருகிறோம். தானி 6:26-27 இன் படி பார்த்தோமென்றால், தானியேல் ஜெபிக்கிறான். ஆண்டவர் அதைக் கேட்டுப் பதில் கொடுக்கிறார். அதனைக் கண்டவர்கள் கடவுளைப் பற்றி அறிகின்றனர். இன்று எம்மில் எத்தனைபேர் துன்பத்தின் மத்தியிலும் கூட ஜெபித்து, சாட்சி பகருகிறோம்.
எம் விசுவாசம் இன்னுமொருவரை இரட்சிக்கின்றதா?
மத் 8:13 நூற்றுக்கு அதிபதியினுடைய சம்பவத்தைப் பார்த்தால் தனது வேலைக்காரனுக்குத் திமிர்வாதம் சுகமடைய வேண்டுமென விசுவாசித்து வேண்டிக்கொள்கின்ற போது அவ்வேலைக்காரன் சுகம் பெறுகிறான். இதில் அவ்வேலைக்காரன் தனது விசுவாசத்தினாலோ அல்லது தனது ஜெபத்தினாலோ சுகம் பெறவில்லை. இன்னுமொருவரின் விசுவாசம், ஜெபம் என்பன மூலமாகவே சுகம் பெறுகிறான். இன்று நாம் அந்தளவுக்குப் பிறருக்காக ஜெபிக்கிறோம்.
பிதா எம்மைக்குறித்துச் சாட்சி கொடுக்க வேண்டும் என நாம் வாஞ்சிக்கிறோம்?
லூக் 9:35, எபி 11:4-5 இன் படி பார்த்தால், இயேசுவைக் குறித்து ‘இவர் என் நேச குமாரன்’ என்றும், ஆபேல் ‘நீதிமான்’ என்றும், அவனது காணிக்கைகளைக் குறித்தும் அத்துடன் ஏனோக் ‘தேவனுக்குப் பிரியமானவன்’ என்றும் பிதாவின் மூலம் சாட்சி பெறுகின்றனர்.
இன்று எம்மில் எத்தனை பேர் பிதாவுக்குப் பிரியமான காரியங்களைச் செய்து, பிதா எம்மைக் குறித்துச் சாட்சி கொடுக்க வேண்டுமெனத் தாகமாயிருக்கிறோம்? ஏன் எம்மால் சில வேளைகளில் ஜெபிக்க முடியாமல் போகிறது. ஏசா59:1-2, லூக்18:1 இவ்வசனங்களின் படி பார்த்தால் எமது பாவங்களும், எங்களிடத்தேயிருக்கின்ற சோர்வுகளும் எங்களை ஆண்டவரிடம் நெருங்குவதற்கு தடைகளாக இருக்கின்றன. எனவே பாவத்திலும், சோர்வுகளிலிருந்து விடுபட்டு ஜெபத்திலே ஈடுபட நாம் எந்தளவுக்கு ஆயத்தமாயிருக்கிறோம்.
ஜெபத்தின் மூலம் பெற்றுக் கொள்ளுகின்றவர்களாக, கண்டடைகின்றவர்களாக, திறக்கப்படச்செய்கின்றவர்களாயிருக்க ஜெபத்திலே விழித்திருக்க, உபவாசத்திலே தரித்திருக்க எம்மை நம் ஆண்டவர் விசுவாசத்தோடு கூடிய பிள்ளைகளாக நம்பிக்கையோடு கூடிய பிள்ளைகளாக சிறந்த ஜெப வீரர்களாக, காயப்பட்ட இரு கரங்களையும் நீட்டி எமது குரல் கேட்க எம்மை அழைக்கிறார்.
[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]