CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

ஜெபமும் விசுவாசமும்

ஜெபமும் விசுவாசமும்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

ஒரு பெரிய ஹோட்டலில் இசைஞானம் சிறிதும் இல்லாத ஒரு சிறுமி ஒரு பியானோவை தொடர்ந்து மீட்டுக்கொண்டிருந்தாள். அந்த சுரமற்ற சத்தத்தை அவள் நிறுத்த வேண்டுமென அங்கிருந்த விருந்தினர்கள் அந்த விடுதியின் முதலாளியிடம் புகார் செய்தனர். அதற்கு அவர், “உங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்காக நான் வருந்துகிறேன். பியானோவை அவள் இசைக்கக் கூடாது என அவளிடம் நான் கூற முடியாது. ஏனெனில் அந்தப் பெண் என்னுடைய சிறப்பான விருந்தினர் ஒருவருடைய மகள். ஒரிரு நாட்கள் வெளியூர் சென்றுள்ள அவளது தந்தை நாளைய தினம் இங்கு வருவார். அப்பொழுது நீங்கள் உங்களது பிரச்சனையை அவரிடம் தீர்த்துக்கொள்ளலாம்” என அவர்களுக்குப் பதிலுரைத்தார்.

அவளது தந்தை திரும்பிவந்தபோது. எப்போதும் போல அவரது மகள் வரவேற்பரையில் பியானோவை மீட்டுக்கொண்டிருப்பதைக் கண்டார். அந்தச் சிறுமியின் பின்னாகச் சென்று, அவளது தோள்களின் மேல் தன் கையைப்போட்டு, அவளது கையைத் தன் கைகளிலே பிடித்து, மிகச் சிறப்பான இசை ஒன்றை வாசித்தார். அதைப்போன்றுதான் வரப்போகிற நாட்களில் நமக்கும் நேரிடும். தற்போது குறைவான இசைவற்ற சத்தத்தையே எழுப்புகிறோம். ஆனால் ஒரு நாளில் ஆண்டவராகிய இயேசு நம்முடைய விசுவாசம் மற்றும் ஜெபம் ஆகிய கைகளை பயன்படுத்தி வானளாவிய சங்கீதத்தை உண்டாக்க நம்மை பயன்படுத்துவார்.

உண்மையான உறுதியான விசுவாசம் தெளிவானதாகவும், எந்த சந்தேகமும் இல்லாததாகவும் இருக்கவேண்டும். அது தேவன் நல்லவர், வல்லவர் என்பதை விசுவாசிப்பது மட்டுமல்ல, அவர் “சொன்னபடியே ஆகும்” (மாற்கு 11:23) என்பதில் முழு நம்பிக்கை வைப்பதாகும். விசுவாசத்தினால் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடையக் கேட்கும் போது பதிலும் தெளிவாகவே இருக்கும். “நீங்கள் எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ…” விசுவாசமும், ஜெபமும் ஒரு காரியத்துக்காக ஒன்றுபட்டு தேவனை நாடும்போது, அவற்றை கொடுப்பதற்கு தேவன் தம்மையே அர்ப்பணிக்கிறார்.

மாற்கு எழுதின சுவிசேஷம் பதினோராம் அதிகாரம் இருபத்து நான்காம் வசனம் பின்வருமாறு கூறுகிறது.

“ஆதலால், நீங்கள் ஜெபம் பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள். அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.”

நிறைவான விசுவாசம், நிறைவான ஜெப வேண்டுதல்களை தன்னுள் கொண்டிருக்கும். அது எவ்வளவு பெரிய, விவரிக்கமுடியாத செயல்பாட்டு பகுதியாக இருந்தலும் “…எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ…”

“..அவைகளைப் பெற்றுக்கொள்வீர்கள்” …என்பதை எவ்வளவு நிச்சயமான, உறுதியான வாக்குதத்தம்.

நம்முடைய தலையாய கரிசனை எல்லாம் நமது விசுவாசத்தைப்பற்றியதுதான். அதன் வளர்ச்சியைப்பற்றிய பிரச்சனைகளும், அதன் ஆற்றல்மிகு முதிர்ச்சியடைவதற்கான செயல்களையும் பற்றியதுதான்.சிதறாமல், சந்தேகம் அல்லது பயம் இல்லாமல், எதைக் கேட்கிறோமோ அதை விடாப்பிடியாக பிடித்துக்கொள்ளும் ஒரு விசுவாசம் – நமக்கு அவ்விதமான விசுவாசம்தான் தேவை – நடைமுறைப்படுத்துவதிலும், செயல்பாட்டிலும், விசுவாசம் விலைமதிப்பற்ற முத்தைப்போன்றது.

விசுவாசம் மற்றும் ஜெபத்தைப்பற்றி நமது ஆண்டவர் கூறிய மேலே குறிப்பிட்ட வாசகங்கள் அதிக முக்கியத்தவம் வாய்ந்தவை. விசுவாசம் தெளிவாக, குறிப்பான காரியத்துக்காக இருக்க வேண்டும். அது ஏதோ உறுதியற்ற, நிச்சயமற்ற, தெளிவற்ற மங்கலான காரியம் அல்ல. தேவன் நமக்காக செயலாற்ற முடியும் என்ற ஏதோ ஒருவிதமான நம்பிக்கையைவிட அது மேலானதாக இருக்கவேண்டும். நாம் கேட்பதை பெற்றுக்கொள்வோம் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாக இருக்கவேண்டும். மாற்கு 11.23-ம் வசனத்தை கவனியுங்கள்.

“…தான் சொன்னபடி நடக்கும் என்று, தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன்சொன்னபடியே ஆகும்.

எவ்வளவு ஆழமான நமது விசுவாசமும், வேண்டுதலும் தெளிவானதாக இருக்கிறதோ, அவ்வண்ணமாகவே அதற்குக் கிடைக்கும் பதிலும் இருக்கும்.  நாம் ஜெபிக்காத ஒன்றை கிடைக்கப்பெறாமல், உண்மையாக எதை நாடி எதைக் குறிப்பிட்டு, எதற்காக ஜெபித்தோமோ அது கிடைக்கப் பெறுவோம். “..அவர் சொன்னபடியே ஆகும்.” அது முற்றிலும் நிச்சயமானது.” “..அவர் சொன்னபடியே ஆகும்.” தரத்திலும், அளவிலும் எவ்வித குறைவுமில்லாமல் அது அருளப்படும்.

விசுவாசமும், ஜெபமும் வேண்டுதலுக்கான காரியத்தைத் தேர்வு செய்து, தேவன் என்ன நடப்பிக்க வேண்டுமென தீர்மானம் செய்கின்றது. “..அவன் சொன்னபடியே ஆகும்.” விசுவாசம் மற்றும் ஜெபத்தின் எல்லா கோரிக்கைகளையும் நிச்சயமாக முழுமையாக நிறைவேற்ற கிறிஸ்து ஆயத்தமாக இருக்கிறார். தேவனிடம் சமர்ப்பிக்கும் கோரிக்கைகள் தெளிவானதாக, உறுதியானதாக ,நிச்சயமானதாக இருப்பின், அவை சமர்ப்பிக்கப்பட்ட மாதிரியே தேவன் அதை நிறைவேற்றுவார்.

எவ்வாறு புனிதமானதாகவோ அல்லது முழுமையானதாகவோ இருந்தாலும், விசுவாசம் என்பது ஏதோ தேவனுடைய வார்த்தையின் மேல் வைக்கும் தெளிவற்ற நம்பிக்கையோ அல்லது சாதாரண ஒப்புதலோ அல்ல. விசுவாசம் தேவனுடைய ஓர் செயல்பாடாகும். ஓர் தெய்வீக வெளிப்பாடாகும் அது தேவனுடைய வார்த்தையினாலும், மனித ஆத்துமாவிலுள்ள தேவ ஆவியினாலும் வரும் ஓர் புனிதமான வல்லமையாகும். அது பரலோக காரிங்களை ஆட்கொண்டு, அவைகளை, காலங்களை, உணர்வுகள், ஆற்றல்களால் புரிந்து கொள்ளும் படியான ஆவிக்குரிய, தெய்வீக விதிமுறையாகும்.

விசுவாசம் தேவனோடு இடைபடுகிறது. அது தேவனைப்பற்றி உணர்வுள்ளதாக இருக்கிறது. அது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுடன் இடைபட்டு அவரை இரட்சகராகக் காணுகிறது. அது தேவனுடைய வார்த்தையோடு இடைபட்டு, அதன் பரிசுத்த அக்கினியால் ஆற்றல் பெற்று ஊக்கமடைகிறது. விசுவாசத்தின் பெரிய குறியிலக்கு தேவனே. ஏனெனில் அவருடைய வார்த்தையின் மேல் விசுவாசம் முற்றிலும் சார்ந்துள்ளது. விசுவாசம் தேவனை நோக்கி அவருடைய வாக்குத் தத்தங்களையே சார்ந்துள்ளது. அன்புக்கும், நம்பிக்கைக்கும் எப்படி ஒரு குறியிலக்கு எப்பொழுதும் இருக்குமோ அப்படியே விசுவாசத்திற்கும் உண்டு. விசுவாசம் என்பது ஏதோ ஒன்றை நம்புவது இல்லை. அது தேவனை நம்பி, அவரைச் சார்ந்து, அவரின் வார்த்தையின்மேல் நம்பிக்கையாயிருப்பதாகும்.

விசுவாசம், ஜெபத்தை தோற்றுவிக்கிறது. நன்கு வளர்ந்து, ஆழமாக வேர்கொண்டு, வல்லமையான ஜெப போராட்டங்களின் போது, மென்மேலும் உயர்ந்த நிலையை அடைகிறது. விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், பரிசுத்தவான்களின் பாரம்பரிய நிச்சயம், உணர்ந்தறிதலும் ஆகும். விசுவாசம் தாழ்மையானதும், விடாப்பிடியானதுமாகும். அதனால் காத்திருந்து ஜெபிக்க முடியும். முழங்காலில் தொடர்ந்து நிற்க முடியும் அல்லது புழுதியில் படுக்க இயலும். ஜெபிப்பதற்கு விசுவாசம் அதிக முக்கியமான நிபந்தனை. மோசமான ஜெபங்களுக்கு, பலவீனமான ஜெபங்களுக்கும். ஜெபக்குறைவுகளுக்கும், பதில் கிடைக்காத ஜெபங்களுக்கும் அடிப்படைக் காரணம் விசுவாசக் குறைபாடேயாகும்.

விசுவாசத்தின் பண்புகளும், அர்த்தமும் அதனுடைய செயல்பாட்டினால் வெளிப்படும். எபிரெயர் பதினோராம் அதிகாரத்தில் விசுவாசத்தின் வியப்பூட்டும் விளைவுகளை காணுகிறோம். விசுவாசமுள்ள ஆண்களும், பெண்களும் அடங்கிய இந்தப் பட்டியல் எல்வளவு மேன்மையானது! விசுவாசத்தின் மேன்மையை சிறப்பிக்கும் வண்ணம் எவ்வளவு வியக்கத்தக்க அருஞ்செயல்கள் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன!

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]