CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

ஜெபமும் விழிப்புடனிருத்தலும்

ஜெபமும் விழிப்புடனிருத்தலும்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

ரோமருக்கு அவர் எழுதிய நிருபத்தில் இராணுவ வீரனுக்குரிய தம்முடைய வாழ்க்கைக்குத் தேவையான ஜெபத்தின் சில கருத்துக்களை கூறுகிறார்:

“யூதேயாவிலிருக்கிற அவிசுவாசிகளுக்கு நான் தப்புவிக்கப்படும்படிக்கும்….” “நீங்கள் தேவனை நோக்கிச் செய்யும் ஜெபங்களில், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிமித்தமும், ஆவியானவருடைய அன்பினிமித்தமும், உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.” (ரோமர் 15:30-31)

யூதேயாவில் பவுலுக்கு எதிரிகள் இருந்தார்கள். எதிரிகள், “விசுவாசியாத மனிதர்கள்” என்கிறபடியால் எதிர்த்துக்கொண்டிருந்தார்கள். அதனாலும் மற்ற வலுவான காரணங்களினாலும் “ஜெபங்களில் என்னோடுகூடப் போராட வேண்டும்” என்று ரோமாபுரிக் கிறிஸ்தவர்களை பவுல் அவசரப்படுத்தினார். “போராட்டம்” என்கிற வார்த்தை பெரும் முயற்சி தேவைப்படுகின்ற மல்யுத்தத்தைக் குறிக்கிறது. இந்தவிதமான முயற்சியை, இந்தவிதமான ஆவியை கிறிஸ்தவ இராணுவ வீரன் பெற வேண்டும்.

அழிவைக் கொண்டுவரத் தேடுகிற, உயிருக்கு ஆபத்தான தீயசக்திகளுக்கு முன்பாக ஒரு பெரிய இராணுவ வீரன் படைத்தளபதி பெரும் போராட்டத்தில் இருக்கிறான். அவனுடைய சக்தி முழுவதும் செலவிடப்பட்டு விட்டது. திரும்பவும் வலிமையூட்டப்படுவதற்கு அவன் வேறு எதைச் சார்ந்திருக்க முடியும்? அப்படிப்பட்ட ஆபத்தான வேளையில் அவனுக்கு வெற்றியை எது கொண்டு வரமுடியும்? போராட்டத்தில் இது ஆபத்தான கட்டமாகும். அவனுடைய சொந்த ஜெபங்களின் வல்லமையோடு வேறெந்த வல்லமை சேர்க்கப்பட முடியும்? அதற்கான பதில் மற்றவர்களின் ஜெபம்; ரோமாபுரியிலிருந்த அவனுடைய சகோதரர்களின் ஜெபம், அவர் நம்புகிறபடி அவனுக்குக் கூடுதல் உதவியைக் கொண்டுவரும். அப்படியானால் அவர் எதிரிகளை மேற்கொண்டு போரில் வெற்றி பெறுவார்; இறுதியாக மேலோங்கி நிற்பார்.

எல்லா பருவ காலங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும் கிறிஸ்தவ இராணுவ வீரன் ஜெபிக்க வேண்டும். அவனுடைய ஜெபம் அவனுடைய சமாதான நேரங்களையும் போராட்ட நேரங்களையும் சேர்ந்ததாயிருக்க வேண்டும். அவன் அணிவகுத்துச் செல்லும் போது, அவன் போரிடும்போதும் அது இருக்க வேண்டும். ஜெபம் எல்லா முயற்சிகளையும் பரவிடச் செய்ய வேண்டும்; எல்லாத் துணிகரச் செயல்களுக்கும் செறிவூட்ட வேண்டும்; எல்லாப் பிரச்சினைகளையும் சரிசெய்ய வேண்டும். கிறிஸ்தவ இராணுவ வீரன் போரிடுவதில் காட்டுகிற தீவிரம் ஜெபத்திலும் இருக்க வேண்டும். ஏனெனில் அவனுடைய வெற்றிகள் அவன் சண்டையிடுவதைக் காட்டிலும் அதிகமாக அவனுடைய ஜெபத்தை சார்ந்திருக்கிறது. சரியான தீர்மானம், ஜெபம் ஆகியவைகளோடு தீவிரமான வேண்டுதல் சேர்க்கப்பட வேண்டும். ஜெபமும், வேண்டிக்கொள்வதும் தேவனுடைய சர்வாயுதத்துக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்.

பரிசுத்த ஆவியானவர் தம்முடைய ஊக்கமான பரிந்துரையினால் உதவி செய்ய வேண்டும். இராணுவ வீரனும் ஆவியால் நிறையப்பட்டு ஜெபிக்க வேண்டும். மற்ற போர் முறைகளில் இருப்பதைப் போல, இதிலும் நித்திய விழிப்பு ஜெபத்தின் பரிசாக இருக்கிறது. ஜாக்கிரதையாயிருப்பது, விடாப்பிடியான முயற்சி ஆகிய இரண்டும் கிறிஸ்தவ போராளியின் ஒவ்வொரு செயல்பாட்டுடனும் இருக்க வேண்டும்.

மொத்த இராணுவத்தின் வெற்றிக்கு நல்வாழ்வுக்கும் இராணுவ ஜெபவீரன் ஜெபத்தில் அக்கரை காட்ட வேண்டும். போர் ஒரு சொந்தக் காரியமல்ல; வெற்றியை தான் மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியாது. கிறிஸ்துவின் முழு இராணுவமும் இதில் இருக்கிறது. தேவனுடைய நோக்கம். அவருடைய பரிசுத்தவான்கள், அவருடைய துயரங்கள், சோதனைகள், கடமைகள், குறுக்கீடுகள் யாவும் கிறிஸ்தவ வீரனின் ஜெபத்தில் ஒலிக்கப்படவும். வேண்டுதல் செய்யப்படவும் வேண்டும் என்பதே. ஜெப வீரன் அவனளவில் ஜெபத்தை நிறுத்திவிடக்கூடாது. சுயநல ஜெபம் போல வேறெதுவும் ஆவிக்குரிய நீரோட்டத்தை அவ்வளவு நிச்சயமாகவும் முழுமையாகவும் காய்ந்துபோகச் செய்வதில்லை. ஆன்மீக வாழ்வின் நீரூற்றை அவ்வளவு சரியாக வேறெதுவும் விஷமாக்குவதில்லை.

ஜெபம் சேர்க்கப்படவில்லையென்றால் கிறிஸ்தவனுடைய சர்வாயுதவர்க்கம் அவனுக்கு எதையும் அளிக்காது என்பதை கவனமாகக் குறித்துக்கொள்ள வேண்டும். இது தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை இணைக்கிற சுழலச்சு. இது அனைத்தையும் சேர்த்துப் பிடித்துப் பயனுள்ளதாக்குகிறது. தேவனுடைய உண்மையான இராணுவ வீரன் ஜெபத்துடன் அவனுடைய போர் நடவடிக்கையைத் திட்டமிடுகிறான். போருக்கான சக்தியை ஒழுங்கு படுத்துகிறான். சண்டைகளை நடத்துகிறான். நமது ஒவ்வொரு மூச்சும் ஒரு விண்ணப்பமாகவும் ஒவ்வொரு பெருமூச்சும் ஒரு வேண்டுதலாகவும் வாழ்க்கையை நிரப்ப வேண்டும். வெற்றிக்கு அது முக்கியமானதும், அது தவிர்க்கக்கூடாத அவசியமுமாகும். அவன் எப்போதும் போரிட வேண்டும். கிறிஸ்தவ இராணுவ வீரனுடைய தேவைக்காக மிகுந்த அவசியத்தின் நிமித்தம் அவன் எப்போதும் ஜெபித்துக்கொண்டிருக்க வேண்டும்.

இடைவெளி இல்லாத காவல்பணிக்கு கிறிஸ்தவ இராணுவ வீரன் நிர்ப்பந்திக்கப்படுகிறான். அவன் எப்போதும் பாதுகாப்பு நிலையில் இருக்க  வேண்டும். எப்போதும் தூங்காமல், கவனத்துடன், போரின் அனுகூலமான நிலையை தனக்கு சாதகமாக எடுத்துக்கொள்ள ஆயத்தமாயிருக்கிற ஒரு எதிரியை அவன் எதிர்கொண்டிருக்கின்றான். கிறிஸ்தவ வீரன் விழிப்புடனிருப்பது ஒரு முதன்மையான கொள்கை. “…..விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்….” (மாற்கு 13:33) என்பது அவன் காதுகளில் எப்போதும் ஒலிக்க வேண்டும். அவனுடைய காவல் பணியிடத்தில் அவன் தூங்கக்கூடாது. அப்படிப்பட்ட குறைபாடு அவனுடைய இரட்சிப்பின் படைத்தலைவருடைய மகிழ்ச்சியின்மைக்குக் காரணமாயிருப்பது மட்டுமல்ல, கூடுதலான ஆபத்துக்கும் அவனைக் கொண்டு சேர்த்துவிடும். எனவே விழிப்புடனிருப்பது ஆண்டவருடைய இராணுவ வீரனுக்குத் தவிர்க்க முடியாத கடமையாகிவிட்டது.

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]