[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]
“ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடே கூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்” (வெளி 3.21)
முயற்சியை கைவிடாதிருங்கள். தொடர்ந்து தேவ கிருபையோடும், தன்னம்பிக்கையோடும் ஓடிக்கொண்டேயிருங்கள். Never give up. முடிவுவரை நிலைத்திருப்பதற்கு ஒரு முக்கியமான வழி உண்டு. அது என்ன? உங்களுடைய இலக்கில் (goal) கண்வையுங்கள். வாழ்வின் முடிவிலே, வெளிப்படும் மகிமையை நோக்கிப் பாருங்கள். “இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல.” (ரோம 8.18)
இயேசு கிறிஸ்து, உலக வாழ்க்கையில் சோர்ந்துபோகவில்லை. அவர் நாற்பது நாள் உபவாசமிருக்கும்போது, சாத்தான் பயங்கரமாய் சோதித்தான். பரிசேயர், சதுசேயர், வேதபாரகர், பிரதான ஆசாரியர், அவர்மேல் குற்றம் கண்டுபிடிக்க, சுற்றிச் சுற்றி வந்தார்கள். எப்படியாவது அவரை கொலை செய்துவிட வேண்டும் என்று, சதி திட்டங்களை தீட்டினார்கள். இயேசுவின் சீஷனாயிருந்த யூதாஸ் காரியோத்தையும் கூட, தங்கள் பக்கமாய் இழுத்துக் கொண்டார்கள். இயேசு மனமுறிவடைந்தாரா? சோர்ந்து போய்விட்டாரா? இல்லை. எந்த நோக்கத்துக்காக பிதாவானவர், அவரை இந்த பூமிக்கு அனுப்பினாரோ, அதை நிறைவேற்றினார்.
“நான் ஜெயங்கொண்டு, பிதாவினுடைய வலதுபாரிசத்திலே வீற்றிருப்பேன்” என்பதே கிறிஸ்துவின் குறிக்கோளும், நோக்கமுமாயிருந்தது. தோல்வியைப் பற்றிய எந்த எண்ணத்தையும், ஏற்றுக்கொள்ள மறுத்தார். “நான் கடைசிவரை நிலைநிற்பேன். ஓட்டத்தை முடிப்பேன்” என்பதே, அவருடைய நோக்கமாயிருந்தது.
தேவபிள்ளைகளே, இவ்வுலகத்தில் வருகிற பாடுகளை நீங்கள் எண்ணிக்கொண்டிருப்பீர்களென்றால், நீங்கள் சோர்ந்துபோய் விடுவீர்கள். “பட்ட காலே படும் , கெட்ட குடியே கெடும்” என்பதுபோல, “திரும்பத் திரும்ப எனக்கு சோதனைகள், இனி முடியாது” என்று விட்டுவிடாதிருங்கள். இயேசு சொகுசான, ரோஜா மலர் மெத்தை போன்ற வாழ்க்கையை உங்களுக்கு வாக்களிக்கவில்லை. “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.” (யோவா 16.33)
இயேசு கிறிஸ்து, நம்மைப்போல மாம்சமும், இரத்தமுமுடையவராயிருந்து, நம்மைப்போல, எல்லாவிதத்திலும் சோதிக்கப்பட்டார். சிலுவையில் தொங்குவதற்கு முன்பாக, “என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது” (மத் 26.38) என்று சொன்னார். பிதாவை நோக்கி, இந்தப் பாத்திரம் என்னை விட்டு நீங்கக் கூடுமானால், நீங்கும்படி செய்யும் என்று ஜெபித்தார்.
கிறிஸ்துவுக்கு ஆத்தும வருத்தம் இருந்தது. ஆத்துமாவை மரணத்திலூற்றினார். ஆத்துமாவில் கலங்கினார். எப்படி ஆறு மணி நேரம் சிலுவையிலே பாடுகளை சகித்து தொங்குவது? தன்னை நிர்வாணமாக்குவார்கள். முகத்தில் காறித் துப்பி, கன்னத்தில் அடிப்பார்கள். நிந்தையையும், அவமானத்தையும் எப்படி சுமப்பது?
ஆனாலும் இயேசு, அதையெல்லாம் ஆவியானவருடைய உதவியைக் கொண்டுசகித்தார். நித்திய ஆவியினாலே, தம்மைத்தாமே பழுதற்ற பலியாக, தேவனுக்கு ஒப்புக்கொடுத்தார். (எபி 9.14) தேவபிள்ளைகளே, அந்த ஆவியானவரை சார்ந்துக் கொள்ளுங்கள். ஆவியானவர் உன்னதபெலனை உங்களுக்குத் தந்து, பாடுகளை சகிக்கும் கிருபையையும், நிச்சயமாய் கொடுப்பார்.
நினைவிற்கு – “உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடு கூட அதற்குத் தப்பிக்கொள்ளும் படியான போக்கையும் உண்டாக்குவார்.” (1 கொரி 10.13)
[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]