[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]
தேவ மனிதனாகிய பரிசுத்த பவுல் கூறுகிறார் சாத்தானே எங்களைத் தடை பண்ணினான். 1தெசலோனிக்கேயர் 2:18- ல் குறிப்பிடுகிறார். அதுமட்டுமல்ல அவருடைய ஊழியத்தில் அநேகந்தரம் தடைபட்டேன். என ரோமர் 15:22-இல் கூறுகிறார். தேவனுடைய பிள்ளைகளுக்கு சாத்தான் சத்துருவாக இருக்கிறான் எனவே தான் சாத்தான் கிறிஸ்தவப்பிள்ளைகளுக்கு எதிராக (விரோதமாக) எழும்பி அவர்களின் ஆசீர்வாதங்களைத் தடைபண்ணுகின்றான்.
ஆனால் கிறிஸ்தவ மக்களாகிய நாம் இதை அறியாமல் இருக்கும்படி சாத்தான் கிரியை செய்வான் என்று குறிப்பிடுகிறார். இதுவரைக்கும் எனக்கு தடை உண்டாயிற்று (ரோமர் 1:13) என்று கூறுகிறார்.
தடைகள் உண்டுபண்ணுகிற சாத்தானை நாம் அடையாளம் காணும் வரை தடைகள் நீங்குகிற அற்புதங்களை நாங்கள் காணமுடியாது. மனிதர்கள் தான் கண்களுக்குத் தெரிவார்கள்.
அவர்களுக்கு பின்பாக நமது கண்களுக்குத் தெரியாத சக்தியாக இருந்து கொண்டு சாத்தான் கிரியை செய்கிறான் என்பதை நாம் இப்போது விளங்கிக்கொள்ள வேண்டும்.
பல ஆண்டு காலமாய் நமது தேசத்தில் நமது தமிழ் மக்கள் சிந்திய இரத்தம், கண்ணீர் எங்களை விட்டுப் பிரிந்து மரித்துப்போன இனபந்தங்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து வேதனை அடைகிறோம். கண்ணீர்வடித்து வாய் திறந்து பேசிக் கொள்ள முடியாமல் அடக்கு முறையில் இருந்தோம். சில மாதங்களுக்குள் ஒவ்வொன்றாக நிறைவேறியது இதை நம்ப முடியவில்லை. இது எல்லாம் எப்படி நடக்கிறது என்று ஆச்சரியப்படுகிறோம் இதுவெல்லாம் நாம் தேவாலயங்களிலும், கிறிஸ்தவர்களாகிய நாம் முழங்கால் படியிட்டு கண்ணீரோடு நமது தேசத்துக்காக உபவாசக் கூட்டங்கள் நமது அறையில் முழங்காலில் நின்று கண்ணீரோடு ஜெபித்த ஜெபம் நமது பிதாவின் துருத்தியில் அன்றைய இரத்த வெள்ளமும் சேகரித்து அவர் பாதத்தில் இருந்து ஜெபித்து கண்ணீர்க் குரலை இயேசுக்கிறிஸ்துவே கேட்டார். தடைகள் சர்வதிகாரமான ஆட்சிகள் குழி தோண்டி புதைத்து விட்டார்.
கர்த்தர் நமது மக்களுக்கு வைத்து இருக்கிற ஆசீர்வாதங்களை மனிதர்களால் தீயசக்திகளாக தடுக்க முடியாது தீய சக்திகளுக்கு பின்பாக செயல்படுகிற நம் கண்களுக்குத் தெரியாத தடைகளை உண்டுபண்ணுகிற சாத்தானின் கிரியைகளுக்கு போராடி ஜெபிக்கும் போது கர்த்தராகிய இயேசு சுவாமி தடைகளை விலக்கி நம்மைப் பாதுகாப்பார். சகலத்தையும் தேசத்திலுள்ள குறைவுகளை மாற்றி நிறைவாக்குவார் கர்த்தருக்கு கொடுக்கப்பட்ட பெயர் மீகா 2:13-ல் தடைகளை நீக்கிப் போடுகிறவர்.
“வெள்ளம் போல் சத்துரு வரும் போது கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்” ஏசாயா 59:19-ல் எனவே நாம் விசுவாசத்தில் உறுதியாக இருந்து (சாத்தானுக்கு) அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள் 1பேதுரு 5:9-ல் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து நம்முடனே இருக்கிறார். உலகத்திலுள்ள சாத்தானைப் பார்க்கிலும் நம்மோடு இருக்கிற இயேசுக் கிறிஸ்து பெரியவர் அவரை விசுவாசிப்போம்.
இதோ சர்ப்பங்களையும், தேள்களை மிதிக்கவும் சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கிறேன் ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது. லூக்கா (10:19)-ல் ஆண்டவர் இயேசு சுவாமி நம் அனைவரோடும் இருக்கிறார். அவர் சுமந்த சிலுவை அவர் மேனியில் வடிந்த திருரத்தம் யாருக்காக? குற்றமில்லாத பரிசுத்த மேனியை எங்களுக்காக தியாகத்தோடு தொங்கியது சகல மனிதரின் பாவங்களுக்காகவே தான் துதிசெலுத்துவோம் நன்றி செலுத்துவோம் ஸ்தோத்திரம் இயேசுவுக்கே எல்லாம் ஆமென்.
[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]