CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

திடப்படுத்திக் கொண்டார்

திடப்படுத்திக் கொண்டார்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

“தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்” (1சாமு 30:6)

தாவீதின் வாழ்க்கையிலே, ஒரு முறை, மிக பயங்கரமான நெருக்கங்கள் வந்தன. மனச்சோர்புகள் வந்தன. தாங்க முடியாத துக்கம் வந்தது. தாவீது இல்லாத நேரத்தில், அவனுடைய மனைவி, பிள்ளைகள் தங்கியிருந்த சிக்லாக்கு என்ற இடத்திற்கு அமலேக்கியர் வந்து, கொள்ளையடித்து, அதைச் சுட்டெரித்து, அத்தனை பேருடைய மனைவி, பிள்ளைகளையும் சிறைபிடித்துக் கொண்டு போய் விட்டார்கள். தாவீது, தன் மனைவி பிள்ளைகளைக் காணாமல், அழுகிறதற்கு பெலனில்லாமற்போகுமட்டும், சத்தமிட்டு அழுதார்.

பின்பு சோர்ந்து போகாமல், சத்துருவை மேற்கொள்ள தாவீது செய்த, மூன்று முக்கியமான காரியங்கள் உண்டு. முதலாவது, தாவீது தன்னுடைய தேவனாகிய கர்த்தருக்குள்ளே, திடப்படுத்திக் கொண்டார். இரண்டாவது, கர்த்தருடைய ஆசாரியரிடமும், தேவனிடமும் போய் விசாரித்தார். கர்த்தர் தாவீதுக்கு பதில் கொடுத்து, “அவர்களை பின் தொடர். நீ அதைப் பிடித்து, சகலவற்றையும் திருப்பிக் கொள்வாய்” என்றார்.

மூன்றாவது தாவீதோடு கூட சென்ற, அறுநூறு பேர்களிலே இருநூறு பேர் விடாய்த்து, களைத்துப்போனபோதிலும், நானூறு பேரோடுகூட, தாவீது தொடர்ந்து போய், அமலேக்கியரை முறியடித்து, எல்லோருடைய மனைவி, பிள்ளைகளையும் விடுவித்தார். அவர்கள் கொள்ளையாடிக் கொண்டுபோனதிலும், ஒன்றும் குறையாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக் கொண்டார். (1சாமு 30:19)

சோதனை நேரத்திலும், சோர்வு நேரங்களிலும், நீங்கள் எப்படி நடந்த கொள்ளுகிறீர்கள்? என்பதை கர்த்தர் பார்க்கிறார். சாதாரணமாக, ஒரு மெழுகுக்கு அருகிலே, அக்கினியை கொண்டு வந்தால், அது உருகி, தண்ணீரைப்போல ஓடிவிடும். ஆனால் ஒரு களிமண்ணின் அருகே, அக்கினியை கொண்டு வந்தால், அது இறுகி, கட்டியாகும். அது போல சோதனை நேரங்களில், நீங்கள் மனம் தளர்ந்து போகாமல், கர்த்தருக்குள் வைராக்கியமாய், எழும்ப வேண்டும்.

கால்பந்து விளையாடும் போது, எதிரிகள் ஒரு கோல் போட்டுவிட்டால், மற்ற அணியினர் சோர்ந்துபோவார்கள். ஆனால் சில அணிகள், தோல்வியைக்கண்டு துவண்டுவிடாமல், இன்னும் முழு பெலத்தோடு விளையாடுவார்கள். வைராக்கியமாய் விளையாடுவார்கள், தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல், எப்படியும் நான் வெற்றி பெற்றே தீருவேன் என்பவர்கள், வெற்றிக்காக என்ன விலைக்கிரயத்தையும் கொடுப்பார்கள். நிச்சயமாகவே ஜெயம் பெறுவார்கள்.

ஆகவே, சோர்ந்து போகாதிருங்கள். Never, Never give up. சோர்வை மேற்கொள்ள முதலாவது, உங்களுடைய பெலனை அதிகப்படுத்தி, ஸ்திரப்படுத்துங்கள். “ஆபத்துக்காலத்தில், நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது.” (நீதி 24:10) “அரையைக் கெட்டியாய்க் கட்டிக்கொள். உன் பெலனை மிகவும் ஸ்திரப்படுத்து.” (நாகூம் 2:1)

இரண்டாவதாக, கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள். கர்த்தர் உங்களுக்கு பெலத்தின் மேல் பெலனைத் தருவார். “ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு. நான் உன்னை விடுவிப்பேன். நீர் என்னை மகிமைப்படுத்துவாய். (சங் 50:15) மூன்றாவதாக, கர்த்தருடைய வாக்குத்தத்தங்களை, உறுதியாய்ப் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். ஜெயம் உங்களுக்குத்தான்!

நினைவிற்கு :- “இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? (ரோம 8:31)

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]