CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

தேவனிடம் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்.

தேவனிடம் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்.

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

ஜெபம் என்பது மனப்பூர்வமுடனும், நல்லுணர்வுடனும், உள்ளன்புடனும் இருதயத்தை அல்லது ஆத்துமாவை கிறிஸ்துவின் மூலமாக தேவனிடத்தில் ஊற்றிவிடுவதாகும். பரிசுத்த ஆவியின் பெலத்தோடும், உதவியோடும், தேவனுடைய சித்தத்தின்படியும் அவர் வாக்களித்திருப்பதின்படியோ அல்லது அவருடைய வார்த்தையின்படியோ தேவனிடத்தில் விண்ணப்பிப்பதாகும். சொந்த நலன் மாத்திரமே அல்லாமல் சபையின் நன்மை கருதியும், தேவனுடைய சித்தத்திற்கு முற்றுமாய் ஒப்புவித்து விசுவாசத்தோடு விண்ணப்பிப்பதாகும்.

நீங்கள் ஜெபம் செய்யும்போது உங்களுடைய இருதயத்தை அல்லது ஆத்துமாவை தேவனிடத்தில் ஊற்றிவிடுங்கள். ஜெபம் என்பது உங்களது சுயத்தை இருதயத்தைவிட்டு நீக்கி தேவனுக்கு திறந்து கொடுப்பதாகும். அதோடு மட்டுமன்றி நீங்கள் விண்ணப்பங்களை ஏறெடுக்கும்போது பெருமூச்சோடும், தவிப்போடும் உங்களுடைய ஆத்துமாவை தேவனிடத்தில் ஊற்றிவிடுவதாகும். “ஆண்டவரே என் ஏங்கலெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் தவிப்பு உமக்கு மறைவாயிருக்கவில்லை” (சங் 38:9) என தாவீது கூறுவதை காண்கிறோம்.

“என் ஆத்துமா தேவன் மேல், ஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுதும் தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்?” “முன்னே நான் பண்டிகையை ஆசரிக்கிற ஜனங்களோடே கூட நடந்து, கூட்டத்தின் களிப்பும் துதியுமான சத்தத்தோடே தேவாலயத்திற்குப் போய் வருவேனே; இவைகளை நான் நினைக்கும் போது என் உள்ளம் எனக்குள்ளே உருகுகிறது” (சங் 42:2,4)

“என் உள்ளம் எனக்குள்ளே உருகுகிறது” என்ற பகுதி ஆங்கிலத்தில் “என் ஆத்துமாவை ஊற்றுகிறேன்” (I POUR OUT MY SOUL) என்று உள்ளது. இந்த நிலை ஜெபத்தில் நீங்கள் முழு ஜீவனையும், பெலனையும் கொடுக்கிறதையே இது முக்கியப்படுத்துகிறது. மற்றுமொரு பகுதியில் தாவீது “ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்.”                (சங் 62:8) என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த முறைமையின்படி நாம் ஜெபிக்கும் போது நம்முடைய சிறையிருப்பிலிருந்து தேவன் நம்மை விடுவிப்பதாக வாக்களிக்கிறார். “அப்பொழுது அங்கேயிருந்து உன் தேவனாகிய கர்த்தரைத் தேடுவாய்; உன் முழு இருதயத்தோடு உன் முழு ஆத்துமாவோடும் அவரைத் தேடும்போது, அவரைக் கண்டடைவாய்” (உபா 4:29) ”கண்டடைவாய்” என்பதில் அவர் அளிக்கும் விடுதலையும் அடங்கியிருக்கிறது.

ஆகவே ஜெபத்தில் இருதயம் அல்லது ஆத்துமா தேவனிடத்தில் ஊற்றப்படவேண்டியது மிக அவசியம். இது மேன்மையான ஜெப ஆவியைக் காட்டுகிறது. ஜெபம் சர்வலோக மகாபெரிய தேவனைச் சென்றடைகிறது. “நான் தேவனுடைய சமுகத்தை எப்பொழுது வந்தடைவேன்?” என்று சிலர் கேட்கக்கூடும். மெய்யாகவே தேவனிடத்தில் ஜெபிக்கிற ஒரு மனிதன் ஜெபிக்கும் போது வானத்தின் கீழே உள்ள சகல காரியங்களும் வெறுமையாகத் தோன்றுவதை அவர் காணும் போது ஜெபத்தில் தேவன் ஒருவரால் மாத்திரமே இளைப்பாறுதலையும், ஆத்துமாவிற்கு திருப்தியும் அளிக்க முடியும் என்று உணருகிறவர்தான் ஜெபத்தில் தேவனுடைய சமுகத்தை வந்தடைய முடியும். அதோடு மாத்திரமல்ல அந்த அனுபவத்தில் நிலைத்திருக்கும் போது தேவனுடைய சமுகத்தை ஜெபத்தின் மூலம் எட்ட முடியும். பவுல் “உத்தம விதவையாயிருந்து தனிமையாயிருக்கிறவள் தேவனிடத்தில் நம்பிக்கையுள்ளவளாய், இரவும் பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பாள்.” (1தீமோ 5:5) என்று ஜெபத்தில் நிலைத்திருக்கும் அனுபவத்தை கூறுகிறார். அதே உணர்வை தாவீதும் தனது சங்கீதங்களில் பிரதிபலிக்கிறார்.

“கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும். உமது நீதியினிமித்தம் என்னை விடுவித்து, என்னைக் காத்தருளும்; உமது செவியை எனக்குச் சாய்த்து, என்னை இரட்சியும். நான் எப்பொழுதும் வந்தடையத்தக்க கன்மலையாயிரும்; என்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டீரே; நீரே என் கன்மலையும் என் கோட்டையுமாய் இருக்கிறீர். என் தேவனே, துன்மார்க்கனுடைய கைக்கும், நியாயக்கேடும் கொடுமையுமுள்ளவனுடைய கைக்கும் என்னைத் தப்பிவுயும். கர்த்தராகிய ஆண்டவரே, நீரே என் நோக்கமும் என் சிறுவயது தொடங்கி என் நம்பிக்கையுமாயிருக்கிறீர்” (சங் 71:1-5)

உங்களுடைய ஜெபம் சரியான ஜெபமாக அமையவேண்டுமென்றால் கர்த்தரை உங்கள் நம்பிக்கையாகக் கொண்டிருப்பது மாத்திரமல்ல, தொடர்ந்து அதில் நிலைத்திருக்கிறவர்களாக இருக்கவேண்டும் சரியான ஜெபம் வேறு எதையும் நோக்காமல் தேவனை மாத்திரம் நோக்கியிருப்பதாகும். நான் முன்பு சொன்னது போல ஜெபம் மனப்பூர்வமாகவும், உள்ளுணர்வுள்ளதாகவும், உள்ளன்புள்ளதாகவும் இருக்கவேண்டும்.

ஜெபம்:

ஆண்டவரே, என்னுடைய எதிரிகள், என்னுடைய ஆவிக்குரிய எதிரிகள் என்னை சுற்றி முகாமிட்டிருக்கின்றனர். நான் மீண்டும் பாவமாகிய உளையான சேற்றில் மூழ்கி தோற்கடிக்கப்படவேண்டும் என பிரயாசப்படுகின்றனர். அவர்கள் என்னை நயவஞ்சகமாக ஆசைகாட்டி பாவம் செய்ய ஈழுக்கின்றனர். என் ஆண்டவரே, இவற்றிலிருந்து என்னைக் காத்துக்கொள்ளும். என்னுடைய தேவைகளை சந்திக்கும்படி உம்முடைய பணிவிடை தூதர்களை அனுப்பும். எதிரிகள் பிரயோகிக்கும் தீமையான அம்புகள் என் இருதயத்தைத் தாக்கிவிடாமல், அவர்கள் என்னைச் சுற்றிவேலியடைத்து காத்துக்கொள்ளட்டும். ஆண்டவரே, என்னை முற்றுமாய் உம்மிடத்தில் ஒப்புவிக்கிறேன். ஆண்டவரே, என்னுடைய நெருக்கத்தில் உம்மையல்லாமல் நான் யாரிடத்தில் போவேன்? நீரே என் பெலனும் மீட்பருமானவர். நான் உம்மிலே சார்ந்திருக்கிறேன். ஆகவே நான் பயப்படமாட்டேன். நீர் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறீர். நான் இயேசுகிறிஸ்துவின் பாவநிவாரண பலிகள் மூலமாக உமக்கு முன்பாக நிற்கிறேன். ஆண்டவரே அவர் மூலமாகவே உம்மிடத்தில் என்னுடைய ஜெபங்களை ஏறெடுக்கிறேன். ஆமென்.

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]