[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]
ஸ்காட்லாந்து தேசத்தில் கிராமப்பகுதியில் வாழ்ந்த வயதுமுதிர்ந்த பெண் ஒருத்தி கால்நடையாகவே கிராமப்புறங்களில் சுற்றித்திரிந்து வீட்டுக்குத் தேவையான பொருட்களை விற்று வாழ்ந்து வந்தாள். அப்படி அவள் பயணம் செய்யும் போது சில இடங்களில் சாலை இரண்டு திசைகளில் பிரிந்து செல்லும்போது, எந்த திசையில் செல்லவேண்டும் என்ற தீர்மானிக்க ஒரு வைக்கோல் துரும்பை எடுத்து ஆகாயத்தை நோக்கி வீசி எரிவாள். வைக்கோல் துரும்பு எந்த திசையிலுள்ள சாலைப்பக்கமாக விழுகிறதோ, அந்த சாலையில் பயணத்தைத் தொடருவாள். இது அவளுடைய பழக்கமாக இருந்தது. இவள் அப்படிச் செய்வதைச் சிலர் கவனித்திருக்கிறார்கள்.
ஒருநாள் இந்த முதிர்வயதுப்பெண் செய்கிறதை கண்டிருந்த ஒரு பெண் அவளுக்குப்பின்னால் வந்துகொண்டிருந்தாள். சாலை இரண்டாகப் பிரிந்து செல்லும் இடத்தில் அவளது பழக்கத்தின்படி வைக்கோல் துரும்பை எடுத்து மேலே வீசினாள். அது ஒரு திசையில் விழுந்தது. ஆனால் அவளது வழக்கத்திற்கு மாறாக வைக்கோல் துரும்பு விழுந்த திசையில் செல்லாமல், மீண்டும் மீண்டுமாக அந்த வைக்கோல் துரும்பை எடுத்து மேலே வீசினாள். அது முன்பு விழுந்த அதே திசையிலேயே விழுந்தது. இதைக் கவனித்துக் கொண்டே பின்னால் வந்த பெண் “உன்னுடைய பழக்கத்தின்படி வைக்கோல் துரும்பை மேலே எறிந்து நீ செல்ல வேண்டிய திசையை தீர்மானிப்பதைப் பார்த்திருக்கிறேன். இன்று மட்டும் துரும்பை பலமுறை மேலே வீசியும் நீ போகவேண்டிய திசையை இன்னும் தீர்மானிக்காதிருக்கிறாயே, என்ன காரணம்?” என்று கேட்டாள். அதற்கு அந்த முதிர்வயதுப்பெண் “நான் எனக்கு வலது புறமிருக்கும் சாலையில் செல்ல விரும்புகிறேன். அந்த சாலையில் விழுகிறதா என்று எதிர்பார்த்துதான் மீண்டும் மீண்டும் துரும்பை மேலே வீசிக்கொண்டிருக்கிறேன்” என்று பதிலளித்தாள்.
இதைப்போலத்தான் நாமும் தேவனுடைய சித்தத்தை அறிய ஜெபிக்கிறோம். ஆனால் அது நமக்கு வாய்க்கிறதில்லை. ஏனெனில் நமக்கென்று ஒரு விருப்பத்தை ஆழ்மனதில் பதித்துக்கொண்டு அது நிறைவேற வேண்டுமென எதிர்பார்த்து ஜெபிக்கிறோம். நமது விருப்பமும் தேவனுடைய விருப்பமும் எப்பொழுதும் ஒன்றாக இருப்பதில்லை. ஆகவேதான் அப்போஸ்தலனாகிய யாக்கோபு “நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்க வேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள் என்று யாக் 4:3 ல் குறிப்பிடுகிறார். அவருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து ஜெபிக்க நம்மை பயிற்றுவித்துக்கொள்ளுவோம்.
“என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார். பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப் பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது” (ஏசா 55:8-9)
[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]