CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

தேவனுடைய சித்தத்தில் ஜெபிப்பது

தேவனுடைய சித்தத்தில் ஜெபிப்பது

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

தேவனுடைய சித்தத்தில் ஜெபிப்பது

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row][cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

ஜெபம் என்பது மனப்பூர்வமுடனும், நல்லுணர்வுடனும், உள்ளன்புடனும் இருதயத்தை அல்லது ஆத்துமாவை கிறிஸ்துவின் மூலமாக தேவனிடத்தில் ஊற்றிவிடுவதாகும். பரிசுத்த ஆவியின் பெலத்தோடு, உதவியோடு, தேவனுடைய சித்தத்தின்படியும் அவர் வாக்களித்திருப்பதின்படியோ அல்லது அவருடைய வார்த்தையின் படியோ தேவனிடத்தில் விண்ணப்பிப்பதாகும். சொந்த நலன் மாத்திரமே அல்லாமல் சபையின் நன்மை கருதியும், தேவனுடைய சித்தத்திற்கு முற்றுமாய் ஒப்புவித்து விசுவாசத்தோடு விண்ணப்பிப்பதாகும்.

உண்மையான ஜெபம் தேவனுடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து ஜெபிப்பதாகும். “உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” (மத் 26:39) என்று கூறுவதாகும். ஆகவே தேவனுடைய மக்கள் எல்லா தாழ்மையோடு அவர்களையும், அவர்களுடைய ஜெபங்களையும், அவர்களுக்குண்டான எல்லாவற்றையும் தேவனுடைய பாதத்தில் வைத்து அவர் மேன்மை என்று கருதுகிற அவரது பரலோக ஞானத்தின் முடிவுக்கு ஒப்புவித்துவிட வேண்டும். நம்முடைய முழு சுயத்தையும் அவர்மேல் வைத்துவிடுகிறபொழுது தேவன் நம்முடைய ஜெபங்களுக்கு, நமக்கு பயனுள்ள வகையிலும், அவருடைய நாம மகிமைக்கென்றும் பதிலளிப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. ஆகவே தேவனுடைய பரிசுத்தவான்கள் தேவனுடைய சித்தத்திற்கு ஒப்புவித்து ஜெபிக்கிறபோது அவர்கள் தேவனிடத்தில் கேள்வி கேட்பதில்லை, வாதிடுவதில்லை, சந்தேகப்படுவதில்லை. ஆனால் தேவனுடைய அன்பிலும், இரக்கத்திலும் விசுவாசத்தோடு முற்றிலும் சார்ந்து கொண்டார்கள். அதே சமயத்தில் எல்லா வேளைகளிலும் அப்படிப்பட்ட ஞானத்தோடு ஜெபிப்பதில்லை என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். இந்த நிலவரத்தை சாத்தான் அவனுக்கு சாதகமாக பயன்படுத்தி தேவனுடைய மகிமைப்பட ஏதுவல்லாத காரியங்களை தேவனுடைய மக்களுக்கு நன்மை பயக்காத காரியங்களை ஜெபிக்கும்படி சோதனைகளைக் கொண்டுவருவான். ஆகவே ஜெபத்தில் தேவனுடைய சித்தத்தின்படி செய்ய எப்பொழுதும் விழிப்புடனிருக்க வேண்டியது மிக அவசியமாகும்.

யோவான் அப்போஸ்தலன் அவனது நிருபங்களில் எழுதும்பொழுது “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். நாம் எதைக்கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்” (1யோவான் 5:14-15) என்று கூறுகின்றார். நான் முன்பு சொன்னதுபோல பரிசுத்த ஆவியானவர் மூலமாக அல்லாமல் தேவனிடத்தில் ஏறெடுக்கும் ஜெபங்களுக்கு பதில் கிடைப்பதில்லை. ஏனென்றால் அப்படிப்பட்ட ஜெபம் தேவனுடைய சித்தத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. தேவனுடைய சித்தத்தின்படி எப்படி ஜெபிப்பது என்று பரிசுத்த ஆவியானவர் ஒருவரே அறிவார். “எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளைக் கண்காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார். மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்.”                (1 கொரி 2:9-11)

 பவுல் ரோமருக்கு எழுதும்பொழுது “நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்தென்று அறியாமலிருக்கிறோம்” (ரோமர் 8:26)

என்று குறிப்பிடுகிறார். இதை கவனித்துப்பாருங்கள். “என்னவிதமாக நாம் ஜெபித்திருக்க வேண்டும்?” இதைக்குறித்து நாம் சி்ந்திக்காவிட்டால் அல்லது இதன் கருத்து என்ன என்பதை நாம் ஆவியிலும், சத்தியத்திலும் விளங்கிக்கொள்ளாவிட்டால் யெரோபெயாம் தேவனுடைய வார்த்தைக்கு மாறாக வேறுவகையான ஒரு ஆராதனை முறையைக் கண்டுபிடித்ததுபோல் ஆகிவிடும்.

“யெரொபெயாம்: இப்போது ராஜ்யபாரம் தாவீது வம்சமாய்த் திரும்புகிறதாயிருக்கும். இந்த ஜனங்கள் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திலே பலகளைச் செலுத்தப்போனால், இந்த ஜனங்களின் இருதயம் யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் தங்கள் ஆண்டவன் வசமாய்த் திரும்பி, அவர்கள் என்னைக் கொன்றுபோட்டு, யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாமின் பாரிசமாய்ப் போய்விடுவார்கள் என்று தன் மனதிலே சிந்தித்துக்கொண்டிருந்தான். ஆகையால் ராஜாவானவன் யோசனைப்பண்ணி, பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, ஜனங்களைப் பார்த்து: நீங்கள்; எருசலேமுக்குப் போகிறது உங்களுக்கு வருத்தம்; இஸ்ரவேலரே, இதோ இவைகள் உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின உங்கள் தேவர்கள் என்று சொல்லி, ஒன்றைப் பெத்தேலிலும், ஒன்றைத் தாணிலும் ஸ்தாபித்தான். இந்தக் காரியம் பாவமாயிற்று; ஜனங்கள் இந்த ஒரு கன்றுக்குட்டிக்காகத் தாண் மட்டும் போவார்கள்”(1இரா 12:26-30)

நாம் எப்படி ஜெபிக்கவேண்டுமென்று கூறப்பட்டிருக்கிறதோ அதன்படி ஜெபிக்கவேண்டும் என பவுல் வலியுறுத்திக் கூறுகிறார். கலைநுணுக்கத்தோடோ, திறமையோடோ, மனிதர்களின் அல்லது இவ்வுலக தேவர்களின் தந்திரமான வழியைப் பின்பற்றியோ நாம் ஜெபிக்கக்கூடாது. என்னவிதமாக நாம் ஜெபித்திருக்கவேண்டும் என்பது ஆவியானவருக்குத் தெரியும். ஆகவே ஆவியானவரின் நடத்துதலுக்கு ஏற்பதாய் நாம் ஜெபிக்கவேண்டும். ஏனெனில் நம்முடைய பலவீனத்தில் அவர் நமக்கு உதவி செய்கிறார். மனிதன் தனது சொந்த மூளையை பயன்படுத்தி ஒரு வழியைச் சிந்திக்கலாம். ஆனால் நாம் எப்படிச் செய்யவேண்டுமோ அப்படிச் செய்ய நாம் சிந்தித்த வழிக்கு மாறான இன்னொரு கட்டளை தரப்படுகிறது. அநேகர் கேட்கிறார்கள், ஆனால் பெற்றுக்கொள்வதில்லை. ஏனென்றால் அவர்கள் தகாதவைகளைக் கேட்கிறார்கள். ஆகவே அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு சற்று குறைவான காரியத்தைக்கூட பெற்றுக்கொள்வதில்லை. “நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.” (யாக் 4:3)

ஜெப புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பதற்கு மாறாக நாம் ஜெபித்தால் நமது ஜெபம் கேட்கப்படாமல் போய்விடுமோ என்று அஞ்சவேண்டிய அவசியமில்லை. நீங்கள் ஜெபம் பண்ணும்போது தேவன் உங்கள் ஜெபம் ஆவியிலிருந்து எழும்பி வருகிறதா என்பதை அறிய உங்கள் இருதயத்தைத்தான் ஆராய்ந்து பார்க்கிறார். “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவி கொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்” (1யோவான் 5:14) பவுல் இதைக்குறித்து “ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால் இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்”                            (ரோமர் 8:27) என்று கூறுகிறார்.

தேவன் அவரது சித்தத்தின்படியான ஜெபத்திற்கு மாத்திரமே அவர் பதிலளிக்கிறார். அதற்கு மாறாக ஜெபத்திற்கு அவர் பதிலளிப்பதில்லை. அவருடைய சித்தத்தின்படி ஜெபிப்பதற்கு பரிசுத்த ஆவியானவர் மட்டுமே நமக்கு போதிக்க முடியும். பரிசுத்த ஆவியானவர் மட்டுமே நம்மையும், நம்முடைய காரியங்களையும் ஆராய்ந்து அறிய முடியும். தேவனுடைய ஆழமான காரியங்களையும் அவர் ஒருவரே அறிய முடியும். ஆயிரக்கணக்கான ஜெப புத்தகங்கள் நமக்கு இருந்தாலும் நாம் ஜெபிக்கவேண்டிய விதம் இன்னவிதமாக என்று தெரியாதிருக்கிற காரணத்தால், மேலும் குறிப்பாக நாம் பலவீனம் உள்ளவராகையால் அந்த பலவீனம் நாம் தேவசித்தத்தின்படி ஜெபிக்க முற்றிலும் முடியாதவர்களாக நம்மை ஆக்கிவிடும்.

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]