CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

நன்மை செய்கிறதிலே

நன்மை செய்கிறதிலே

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

“நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்ற காலத்தில் அறுப்போம்.

(கலா 6:9)

ஜெபம்பண்ணுவதில் சோர்ந்து போகக்கூடாது என்று, நேற்றைய தினத்தில் பார்த்தோம். இரண்டாவது, நன்மை செய்வதிலே சோர்ந்து போகக்கூடாது. நன்மை செய்வது என்பது, நிலத்தில் வித விதைப்பதற்கு ஒப்பாகும். விதையை, விதைக்கிற விவசாயி, அந்த விதைகள் முளைத்தெழும்பும் என்கிறது மட்டுமல்ல, அது முப்பதும், அறுபதும், நூறுமாக பலன் தரும் என்று எதிர்பார்ப்போடும், விசுவாசத்தோடும் விதைக்கிறான்.

அதுபோலவே, நீங்கள் நன்மை செய்யும் போது, பிறருக்கு கைமாறு கருதாமல் கொடுக்கும் போது, நிச்சயமாகவே கர்த்தர் உங்களுக்கு நன்மை செய்வார். “ஏழைகளுக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்” (நீதி 19:17) கர்த்தர் நல்லோர்மேலும், தீயோர்மேலும் மழையை பெய்யப்பண்ணுவார் (மத் 5:45) ஆகவே, நிச்சயமாக கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். நன்மை செய்வது என்பது, உங்களுடைய ஆசீர்வாதத்திற்காக, நீங்கள் விதைக்கிற விதையே ஆகும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு சபை போதகரை நான் மிகவும் நேசித்தேன். ஏழ்மையான நிலையிமையிலிருந்து முன் வந்த ஊழியர். அவர் கூட்டங்களுக்கு போவேன். என் திராணிக்கு மிஞ்சி, அவருக்கு பண உதவி செய்தேன். அதே நேரம், நான் பல இடங்களிலே ஊழியம் செய்து, ஆயிரக்கணக்கான பேருக்கு ஞானஸ்நானம் கொடுத்து வந்தேன். ஏனோ, அவருக்கு என்மேல் பொறாமை வந்தது.

ஒருநாள், நான் கொஞ்சமும் எதிர்பாராதபடி, என்னை வசைபாடி, திட்டித்தீர்த்து, ஒரு கடிதம் எழுதியிருந்தார். நாங்கள் இரண்டு பேரும், சென்னையில் தான் இருக்கிறோம். நேரில் வந்து மனந்திறந்து, என்னிடத்தில் பேசியிருந்திருக்கலாம். அல்லது என்னிடத்தில் விளக்கம் கேட்டிருந்திருக்கலாம். அவர் எழுதிய வார்த்தைகள், அக்கினி அம்பாக, என் உள்ளத்தை தளைத்தது. நான் சோர்ந்து போய் விட்டேன்.

“பாத்திரம் அறிந்து பிச்சை போடு” என்பது பழமொழி. “அவர் எனக்கு எந்த நன்மையும் செய்யாதிருந்தும், எனக்கு விரோதி போல இப்படி எழுதிவிட்டாரே” என்று பல மாதங்கள் என்னுடைய இருதயத்தில், வேதனையாயிருந்தது.  கிறிஸ்துவுக்குள் என்னை திடப்படுத்திக்கொண்டாலும் கூட, அதிலிருந்து மற்ற ஊழியக்காரர்களுக்கு, உதவி செய்யாமல் நிறுத்தி விட்டேன். இதுபோலத்தான், உங்களுடைய வாழ்க்கையிலும், இப்படிப்பட்ட காரியங்கள்  சில சம்பவிக்கும் போது, “ஐயோ, வளர்த்த கடா மார்பிலே பாய்ந்தது போல, பாய்ந்து விட்டார்களே, எவ்வளவு நன்மை பெற்றும் எனக்கு தீமை செய்கிறார்களே, துரோகம் செய்கிறார்களே” என்றெல்லாம் நினைக்கும் போது, சோர்பு வருகிறது. அப். பவுல் மீண்டும் தெசலோனிக்கேயருக்கு எழுதும் போது, “சகோதரரே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்து போகாதிருங்கள்” என்று குறிப்பிடுகிறார். (2 தெச 3:13)

தேவ பிள்ளைகளே, நீங்கள் யார் யாருக்கு நன்மை செய்தாலும், அது அவருடைய கையிலே கொடுப்பதாக அல்ல, கர்த்தரிடத்திலே கொடுப்பதாக எண்ணிக்கொடுங்கள். மனுஷனிடத்திலே கொடுப்பதாயிருந்தால், அவனுடைய கையில் நீங்கள் ஏதோ, ஒன்றை எதிர்பார்ப்பீர்கள். அதை அவர்கள் தராவிட்டால், உங்களுக்கு ஏமாற்றமாயிருக்கும். ஆனால் கர்த்தரிடத்தில் கொடுப்பது போல கொடுத்தால், இம்மையிலும், மகிமையிலும், நித்தியத்திலும், உங்களுடைய ஆசீர்வாதம் பெரியதாயிருக்கும். சோர்ந்து போகாதிருக்கள்.

நினைவிற்கு :- “தீமையை விட்டு விலகி, நன்மை செய். சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள்” (சங் 34:14)

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]